துலாம் ராசி குரு பெயர்ச்சி
பொது பலன்கள் 2024-25
- இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது எட்டாம் இடத்திற்கு வருகிறார்.துலா ராசியின் விரைய , தனவாக்கு மற்றும் சுக ஸ்தானம் அதாவது ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களை பார்க்கிறார்.
- இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும்.
- எட்டில் குரு மறைவது பொதுவாக எதிர்மறையான விளைவுகளை, தாமதங்களை ஏற்படுத்தினாலும், துலாம் ராசிக்கு குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது பல விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும்.
- ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம்
- அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும்.
- பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே.
- வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.
- தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பெண்கள் திடீர் அதிர்ஷ்டம் வரும்
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும்.
- திருமணத்திற்கு காத்திருக்கும் துலாம் ராசியினருக்கு மிகச் சுலபமாக திருமணம் கைகூடும், காதலிப்பவர்களுக்கு திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும், குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
- விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.
- வருமானத்திற்கு குறைவே இல்லை என்றால் கூட தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது.
- தொழில் மட்டும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு சில நெருக்கடிகளும் போட்டியும் இருந்தால் கூட, அதனை மிக எளிதாக எதிர்கொள்ளும் சூழலும் ஏற்படும்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
- தொழில் வேலை விசயங்களில், புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். யாரேனும் ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார். பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும்.
- தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம்.
- தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம்.
- அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது.
- பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம்.
- கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள் வரும்.
- மாணவர்களுக்கு மதிப்பு உயரும்.
- இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள்.
- ஏதேனும் நோய்வாய்ப்பட்டவர்கள் முறையாக மருந்து மாத்திரைகள், மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டு உடல்நலத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.
- நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம்.
சித்திரை 3, 4 பாதங்கள்
- இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும்.
- நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். ஆனாலும் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது.
- பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம்.
- தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
- அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
- எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
- மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
சுவாதி
- இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.
- கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும்.
- சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது, மனதுக்கு இதமளிக்கும்.
- பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. சற்று நிதானமாக பேசுவது நன்மை தரும்.
- பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும்.
- அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும்.
- நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது.
- சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்
- இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
- பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும்.
- தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது.
- பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வால் அனைவருக்கும் நன்மைகள் செய்து மனம் மகிழ்சசி அடையும்
- பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை.
- சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும்.
- விருந்து கேளிக்கைகளில் கலந்துகொள்ளும் சுழல் வரும் . நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.