துலா ராசிக்கு பஞ்சம சனி தீர்ந்தது ...ரோக சனி சனி ஆரம்பம் ...இனி நல்லது தான் .. கொண்டாட்டம்...
ரோக சனி சனி என்றால் என்ன?
- சனி ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரம் செய்யும் இந்ந நிலையே ரோக சனி என்று அழைக்கப்படுகிறது.
- சனி, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதிரிகள் பலம் இழப்பார்கள். அல்லது எதிரிகளே காணோம் என்று சொல்லும் அளவிற்கு எதிரிகள் அழிவார்கள் எனவே வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
- பொதுவாக ரோக சனி, இல்லங்களில் இன்பங்களை வழங்கி மன மகிழ்ச்சியை வழங்குவார்.
- உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கி வலிமை அடையக்கூடிய சூழலை உருவாக்குவார்.
- மேலும் கையில் பணம் தாராளமாக புழங்குவதால், கடன்கள் அடையும். தூர தேச பயணத்தால் லாபம் உண்டாகும்.
- பணிகளில் மேன்மையை உருவாக்கி நெடுநாள் நினைத்த பல காரியங்களை செய்து முடிக்கு ஆற்றலை கொடுப்பார்.
- இந்த சனி இருக்கும் காலம் வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையில் பயணம் செய்யலாம்.
பொது கண்ணோட்டம்
- இது ஒரு சாதகமான பெயர்ச்சியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. பொதுவாக, சனி கிரகம் உங்கள் ராசியிலிருந்து 3, 6 அல்லது 11வது வீட்டில் சஞ்சரிக்கும் போது சாதகமானதாகக் கருதப்படுகிறது.
- 6 வீடு சவால்கள் மற்றும் தடைகளுடன் தொடர்புடையது. மேலும் இந்த வீட்டில் சனியின் சஞ்சாரம் எதிரிகளின் மீதான வெற்றி குறிக்கும்.
- சனி மெதுவாக நகரும் கிரகம் மேலும் சக்திவாய்ந்த கிரகம், இந்த சனி பெயர்ச்சியின் நல்ல மாற்றத்தை பெற இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம்.
- ஜூன் 2025 முதல் பிப்ரவரி 2028 வரை, உங்கள் வாழ்க்கை மேல்நோக்கி நகர்வதை உணர முடியும்.
- இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சனி, துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் குறைந்து, சிக்கல்கள் சீராகும்.
- ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும்.
- தொழில் மற்றும் வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற்றே முடிவெடுக்க வேண்டும். மேலும் தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு இருக்கும்.
- வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை. ரகசிய முதலீடுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- தகவல் தொடர்பு துறையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் மந்தநிலை காணப்படும்.
- வழக்கு மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்மானங்கள் வரும்.
- சனி பகவான் 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 7ஆம் பார்வையாக, 12ம் வீட்டை பார்ப்பதால் தாம்பத்ய உறவுகளில் தற்காப்புடன் செயல்படுவது நல்லது. 3ம் வீட்டை 10ம் பார்வையாக பார்ப்பதால் சகோதர உறவுகளுடன் பிரச்னைகள் உண்டாகும்.
- இதுவரை இருந்த தடை மற்றும் தாமதங்கள் நீங்கும். மூத்த உடன் பிறந்தவர்கள், ஆதரவாக செயல்படுவார்கள்.
- பொதுவாக துலா ராசிக்காரர்கள் எந்தத் துறையிலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார்கள். தனி வரவுகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறைந்து, நிலவரம் சிறப்பாக இருக்கும்.
- என்றாலும் சனியின் பார்வை காரணமாக முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். ஆனால் அவை விரைவில் தீர்ந்து விடும்.
- எதிர்காலம் குறித்து கவலைகள் மற்றும் எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.
- சுற்றலா செல்ல வாய்ப்பு வரும், நல்ல சுவையான உணவு சுவைத்து உண்ணும் சூழ்நிலை வரும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
- இந்த சனி பெயர்ச்சி, துலாம் ராசி பிறந்தவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சவால்களையும், சிறந்த வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்பது திண்மம்.
குடும்ப வாழ்க்கை
- ஐந்தாம் வீட்டில் இருந்த சனி சில பல பிரச்னைகளை கொடுத்து இருப்பார் ஆனால் இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறையும் உடன்பிறந்தவர்களுடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது சிறந்தது.
- என்றாலும் தாயுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் பேச்சுக்கான தடுமாற்றங்கள் மாறும் .
- எங்கிருந்து எப்படி வாய்ப்பு வருகிறது என்று யோசிப்பதற்கு முன்பே பல வாய்ப்புகள் வரும் பயன்படுத்தி கொள்ளவும்.
- ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் ஆகும்.
- கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும் பூர்வீக சொத்துகள் தொடர்பான சிக்கல்கள் தோன்றலாம் அதிக சிந்தனையால் தூக்கமின்மை நேரிடலாம்.
- காதலில் வெற்றி, திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் நடக்க இருக்கிறது.
- இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் வேண்டுபவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் .
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும் இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
- கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் கற்ற படிப்பினைகளும் உங்களுக்கு இப்போது உதவும்.
- இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகளின் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம் .
- காதலில் வெற்றி, திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் நடக்க இருக்கிறது.
- இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் வேண்டுபவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் .
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும் இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
- கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் கற்ற படிப்பினைகளும் உங்களுக்கு இப்போது உதவும்.
- இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகளின் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம் .
ஆரோக்கியம்
- போன சனி பெயர்ச்சியால் உடல் வலி மற்றும் மன வலி கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள் மார்ச் 29, 2025 அன்று சனி 6 வது வீட்டிற்குள் நுழைவதால், ஆரோக்கியத்தை பொறுத்து நிம்மதி பெரு மூச்சு உண்டாகும்.
- மூச்சு, அடி வயிறு, நுரையீரல் தொடர்பான வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
- முன்பு அறுவை சிகிச்சை செய்திருந்தால், இப்போது முழுமையாக குணமடைய முடியும்.
- ஜூன் 2026 பிறகு சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு வரக்கூடும். இருப்பினும், இவற்றை மருந்துகளால் எளிதாகக் கட்டுப்படுத்தலாம் .
- 6வது வீடு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது மேலும் 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எனவே சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் நல்லது .
- வயிறு சார்ந்த உபாதைகள், ஜீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் அதிகம் வருவதற்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் வாய்ப்பு உண்டு.
- சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளவது நல்லது.
தொழில் மற்றும் நிதி நிலை
- உத்தியோகத்தில் இருந்த தடை மற்றும் தாமதங்கள் குறையும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் வரும்.
- தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நல்ல மதிப்பை பெற முடியும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது சிறந்தது.
- சக ஊழியர்களிடம் பொறுமையுடன் செயல்படவும் பணி தொடர்பான சிறு பயணங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
- ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவலர்கள், அரசியல்வாதி ஆகிய அனைவருக்கும் இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல ஏற்றங்கள் மற்றும் மாற்றங்கள் உண்டாகும்.
- சிலர் தொழில், வியாபாரம், வேலை, கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும்.
- தொழிலை மேம்படுத்துவது அல்லது விரிவாக்கம் செய்ய முடியும். மேலும் தொழிலில் புதிய உத்திகளைக் கையாளலாம் அதே சமயத்தில் சில சவால்களையும் சந்திக்க நேரலாம்.
- இந்தக் காலகட்டம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும்.விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் இவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலகட்டம் இது எனலாம் .
- இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும் அரசு வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் அரசு சார்ந்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.
- சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தடைகள் விலகும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- கடன் பெறுவதற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சுலபமாக கடன் கிடைக்கும் அந்த கடனை அடைப்பதற்கும் உரிய வழி தெரிந்து கொள்ளலாம் .
- ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி இருக்கும்.
- என்றாலும் பங்கு சந்தை போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் அவசியம் பண விஷயங்களில் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் .
- ஆசைகள் அதிகரிக்கும் மேலும் செலவும் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க கவனமாக திட்டமிடல் மிகவும் அவசியம்.
- விவசாய பணிகளில் முன்னேற்றம் காணப்படும் வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் சாதகமாக மாறும்.வேலையாட்களுடன் சூழ்நிலையை புரிந்து செயல்படுங்கள் .
- கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சம்பள விஷயங்களில் சற்று குழப்பமான நிலைகள் உருவாகலாம் கவனம் தேவை.
- சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் நீண்ட காலமாக இருந்த சிக்கல்கள் தீரும் தொண்டர்கள் எண்ணங்களை புரிந்து, ஆதரவுகளை அதிகரிக்க வாய்ப்புஅமையும் கட்சி சார்ந்த வெளியூர் பயணங்கள் சாதகமாக இருக்கும்.
- வீடு, நிலம், வாகனம், மனைகளை புதிதாக வாங்கும் அமைப்பு உண்டாகும் பணத்தை இந்த வகையில் பாதுக்கலாம்.
- 6ம் வீட்டு வரும் சனியால் எதிரிகளை தோற்கடித்து,தொழில் துறையில் அதிகரித்த செல்வாக்கை பெற முடியும் முயற்சிக்கு ஏற்ற முழு பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்
- சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்
- வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் தீரும்
- அமாவாசை அன்று முன்னோர்களை வணங்கி பிராத்தனைகளை செய்யலாம்
- சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்