குறிப்பு :
காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)
திருமணமானவர்கள் ராசி பலன்
காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்
காதலில் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலைப்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். ஒரு அற்புதமான காதல் வாழ்க்கையைப் பராமரிக்கும் அதே வேளையில்,உங்கள் துணையுடன் நெருக்கமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பெறப்போகிறார்கள்.
உங்கள் காதலிக்கு அனுப்பிய பழைய வாட்ஸ்அப் ரசிப்பீர்கள். நாம் இந்த அளவுக்கு எழுதி இருக்கோம் என்று தோணும். உங்கள நெனச்சா உங்களுக்கே சிரிப்பா இருக்கும்.
இது சரியா, தவறா என்பதை சீர்தூக்கி பார்ப்பதையும், எடைபோட்டுப் பார்ப்பதையும் விட்டு விட்டு, நீங்கள் காதலில் இருந்தால் அதை வெளிப்படுத்த தயங்காதீர்கள்.
கிரகங்கள் மிக சிறப்பாக தான் இருக்கின்றன. இருப்பினும் நீங்கள் காதலின் மீதும், காதல் செய்ய நினைப்பவர் மீதும் சரியான முடிவுக்க வர முடியாமல் திணறி வருகின்றீர்கள். நீங்கள் காதல் செய்பவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் காதல் சொல்ல சரியான நாளாக தான் இருக்கும். உங்கள் குழப்பம் காதல் முறிவில் விடலாம்
ஏற்ற காதல் ராசிகார்கள் :
நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்
- மேஷமாக இருந்தால் 90% - 100% நல்லது
- மிதுனமாக இருந்தால் 80% - 90% நல்லது
- சிம்மம் மற்றும் தனசு ஆக இருந்தால் 50% நல்லது
என்ன பரிசு தரலாம்:
துலாம் ராசி நேயர்கள் அழகான விஷயங்களை விரும்புவார்கள். நீங்கள், உங்கள் துணை துலாம் ராசியாக இருக்கும் பட்சத்தில் மலர்கள், நன்றாக மூடப்பட்ட சாக்லேட்டுகளின் பெட்டி, ஒரு இரவு உணவு அல்லது ஒரு திரைப்படம் டிக்கெட் போன்ற பரிசாக தரலாம்
பொது பலன் :
ஏற்கனவே யார் மீதேனும் காதல் வயப்பட்டிருந்தால், அதுகுறித்து நல்லது கெட்டதை எடைப்போட்டு பார்ப்பதை விடுத்து, உங்களுக்கு அவரின் மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அடுத்த முடிவை எடுங்கள். இல்லை என்றால் கடைசிவரை முரட்டு சிங்கிளாக தான் இருக்க வேண்டி வரும்.