காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)
திருமணமானவர்கள் ராசி பலன்
வீட்டுலதான் ஒரே
சண்டையா இருக்கலாம். சந்திரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் உங்களின் மனைவி சண்டை
போட லிஸ்ட் போட்டு வைய்ட் பண்ணீட்டு இருப்பாங்க உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவு செய்தால் ரிலாக்ஸ்
ஆகும். 2, 7க்கு உரிய சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் சண்டை சமாதானத்தில் முடிவதுடன்
சந்தோஷத்தையும் கொடுக்கும். 11யில் உள்ள சூரியனும் உங்களுக்கு உதவி செய்வார். மேலும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 2ம் வீடு
ஆனா ரிஷபத்தில் இருக்கிறார். இது காதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால்
ஆளப்படுகிறது. உங்கள் துணையுடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் உங்கள் காதல்
வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எப்போதும் இல்லாத வகையில் நெருக்கம் இருக்கும்.
மோதலும் காதல் தானே!!
காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்
உங்கள் காதலி அல்லது
காதலர் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்துவது போல் நீங்கள் உணரலாம், எனவே அவர்கள் உங்களுக்காக என்ன என்ன திட்டமிடுவார்கள் என்று நீங்கள் கனவு காணுவீர்கள்.
உங்களின் உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றே சரியான நேரம் எனலாம். உங்கள்
துணையுடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக
இருக்கும்.
காதலை வெளிபாடுத்தல் :
அதிகளவில் பேச
பயப்படுதல் அல்லது தயக்கம் காட்டும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று. பொதுவாக இந்த
ராசிகார்கள் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தும் போது அது மறுக்கப்படும்
அல்லது காதலை சொல்ல சென்று வேறு ஏதோ பேச நேரிடலாம். ஆனால் இந்த ஆண்டு காதலில் மிக
சிறப்பான புதிய அனுபவத்தைப் பெறப்போகும், மிக நல்ல நாளாக
மேஷ ராசிக்கு அமையப்போகிறது என்பது மட்டும் உண்மை. உங்கள் ராசியில் பதினொன்றாவது
வீட்டில் சுக்கிரன் இருப்பதால், உங்கள் காதலர் அல்லது காதலி மீதான
உங்கள் அழகான உணர்வுகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள், உங்கள் காதலர் அல்லது காதலிடம்
மனதில் உள்ளதை அப்படியே பேச வேண்டாம். சந்திராஷ்டம் உள்ளது. உங்கள் காதலை
வித்தியாசமாக வெளிபடுத்துவது மிகவும் நல்லதை தரும். மனம் வீட்டு பேசவும்.
ஏற்ற காதல் ராசிகார்கள் :
நீங்கள் காதல்
சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற
ராசிகள் யார் என்றால்
- · மேஷமாக இருந்தால் 90% - 100% நல்லது
- · துலாமாக இருந்தால் 80% - 90% நல்லது
- · சிம்மமாக இருந்தால் 70% - 80% நல்லது
- · தனுசு இருந்தால் 60% - 70% நல்லது
- · மிதுனம் அல்லது கும்பமாக இருந்தால் 50% நல்லது
என்ன பரிசு தரலாம்:
மேஷம் தைரியமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட கூடியவர்கள். நீங்கள் உங்கள் துணை மேஷ ராசியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை பொழுதுபோக்கு பூங்காவிற்கு அல்லது சுற்றால தலத்திற்கு அழைத்து செல்லலாம்.
பொது பலன் :
உங்கள் மனதில்
எழும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களைப் பெற உங்கள் துணையுடன் தேவையான உரையாடலை மேற்கொள்வது
நல்லது. வித்தியாசமான பரிசுகள் கொடுக்கலாம். காதலுக்கு ஏற்ற நல்ல நாள். அதிகபடியான அன்பினால் நல்லதை பெறுவீர்கள்.