காதலர் தின ராசி பலன்கள் - ரிஷபம்


குறிப்பு :

காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

திருமணமானவர்கள் ராசி பலன்

ரிஷப ராசியினர் இந்த உலகின் மிக வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். வலிமை வாய்ந்தவர்கள் மட்டுமல்லாது சிறிது பிடிவாதம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வலிமை உடைவர்கள் மனதளவில் இதமான மற்றும் அன்பானவர்களாக, அனைவருக்கும் பிடிக்கக்கூடிய ஆளாக இருப்பார்கள்.
இவர்கள் நேரத்தை விரயம் செய்து சிறிதளவு ரொமான்ஸ் செய்ய பிடிக்காது. இவர்களைப் பொறுத்தவரை காதலர் தினம் நேரத்தை விரயம் செய்யும் ஒரு நாளாக தான் பார்ப்பார்கள். இவர்கள் காதலை வெளிப்படுத்த அல்லது ரொமான்ஸை அனுபவிக்க வேண்டுமானால் சிறிது நேரத்தை தன் துணையுடன் செலவிட்டு தான் ஆக வேண்டும் என்பதை புரிந்து கொள்ள தான் வேண்டும் 

காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

நீங்கள் காதலில் கமிட் ஆனாலும் அதை வெளியே சொல்ல மாட்டிர்கள். கமிட்டேட்னு சொன்னா எதாவது பிரச்சனை வருமோனு வெளிய சொல்லாம இருப்பீங்க. அதனால் கொஞ்சம் டென்சன் தான். 

நீண்ட நாட்களாக உங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவிக்க சரியான தருணத்திற்காக காத்து இருந்திர்கள் என்றால் இந்த மாதம் நட்சத்திரங்களின் சீரமைப்பு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த காதலர் தினத்தில் நீங்கள் அதனை செய்யலாம். இந்த காதல் மாதத்தில், உங்கள் உறவு அரவணைப்பு மற்றும் ஆறுதல் நிறைந்ததாக இருக்கும். மேலும் உங்கள் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பு உண்டு 

காதலை வெளிபாடுத்தல் :

பேச்சால்  அனைவரையும் கவரும் தன்மை இயற்கையாக உண்டு என்றாலும் அடிக்கடி கோபம் வரும் கவனம் தேவை. இந்த ஆண்டு உங்களுக்கு காதல் துணை கிடைக்கலாம் அல்லது நிங்கள் விரும்பும் நபரிடம் உங்கள் காதலை சொல்லாம். உடனே ஓகே வர விட்டாலும் ரிஜெச்சன் (Rejection) இருக்க வாய்ப்பு இல்லை.

சுக்கிரன் உங்களுக்கு பத்தாம் வீட்டில் இருக்கிறார், அதன் செல்வாக்கின் கீழ், உங்கள் வாழ்க்கை காதல் பார்வையில் இருந்து புதிய திருப்பத்தை எடுக்கலாம்.

ஏற்ற காதல் ராசிகார்கள் :

நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

  • விருச்சிகமாக இருந்தால் 90% - 100% நல்லது
  • மகரமாக இருந்தால் 80% - 90% நல்லது
  • கன்னியாக இருந்தால் 70% - 80% நல்லது
  • மீனம் அல்லது கடகமாக இருந்தால் 50% நல்லது

என்ன பரிசு தரலாம்:

ரிஷப ராசி நேயர்கள் ஆடம்பரமான மற்றும் பார்வைக்கு நன்றாக உள்ளதையே விரும்புவார்கள். நீங்கள், உங்கள் துணை ரிஷப ராசியாக இருக்கும் பட்சத்தில் நன்கு தயாரிக்கப்பட்ட உடைகள், வாசனை திரவியம், சிறந்த நகைகள் அல்லது நல்ல உணவு போன்ற பரிசாக தரலாம் 

பொது பலன் :

உங்கள் துணையுடன் உங்கள் நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். ஆனால் உங்களுக்காக உங்கள் துணையால் போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். உங்கள் ஆசை விளக்கி  மூலம் மட்டுமே உங்கள் இதயத்தில் உள்ள வருத்தத்தை உணர வைக்க முடியும்