காதலர் தின ராசி பலன்கள் - மிதுனம்

 

குறிப்பு :

காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

திருமணமானவர்கள் ராசி பலன்

மிதுன ராசியினர் காதலர் தின செயல்பாடு எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள ஆர்வப்பட்டால் அது இயலாத ஒன்றாக இருக்கும். மேலும் கண்டுபிடிப்பது கடினம் எனலாம்.
அதே சமயம் இவர்கள் காதலர் தினத்தில் மோசமான சூழலை கூட சாதகமாக்கும் திறனுடைவார்கள் எனலாம். 
திருமணமானவர்களின் வாழ்க்கையில், ஒரு புதிய மற்றும் சிறிய விருந்தினர் நுழையலாம். இந்த நற்செய்தியைப் பெறும்போது, ​​​​உங்கள் துணையின் மீதான உங்கள் அன்பு அதிகரிக்கும், மேலும் அவர்களுடன் சிறப்பு நேரத்தை செலவிட உங்கள் விருப்பத்தை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள்.

காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

9ம் இடத்து சுக்கிரனால் காதலர் தினம் மிக சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் துணை உங்களை மிகவும் ஆச்சிரிய படுத்தவர். நீங்கள் மகிழ்ச்சியை உணருவீர்கள். இதன் காரணமாக உங்கள் உறவு மேம்படும், மேலும் நீங்கள் இருவரும் ஒரு பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம். 

காதலில் இருப்பவர்கள் உங்கள் துணைக்கு ஏதாவது விசேஷமாகச் சலிக்காமல் செய்து உங்கள் உறவில் ஆர்வத்தையும், புத்துணர்ச்சியையும் தூண்டுதல் வேண்டும். 

குருவின் பார்வை மிக சிறப்பாக இருப்பதால் உண்மையை சொல்லி இந்த தினத்தை சிறப்பு ஆக்குங்கள்

காதலை வெளிபாடுத்தல் :

காதலை வெளிப்படுத்த நினைக்கும் மிதுன ராசியினர் என்ன செய்து காதலனை / காதலியை தன் வசப்படுத்துவார் என்பதை அறிய முடியாது. இவர்கள் திடீரென ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்களின் காதல் வெளிப்படுத்தும் விதம் சுற்றியுள்ளவர்களை திகைப்பில் ஆழ்த்தும். 

உங்கள் காதலை சொன்ன உடன் ஏற்கபடாது. காதலுக்காக போராட வேண்டி இருக்கும். அசிங்கப்பட்டாலும் துன்பப்பட்டாலும் துயரப்பட்டாலும் உங்கள் குறிக்கோள் காதலாக தான் இருக்கும். முயற்சி தான் திருவினையாக்கும்.  உங்கள் காதலை வெளிபடுத்த பயப்பட வேண்டாம் 

ஏற்ற காதல் ராசிகார்கள் :

நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

  • துலாமாக இருந்தால் 90% - 100% நல்லது
  • கும்பமாக இருந்தால் 80% - 90% நல்லது
  • சிம்மம் மற்றும் மேஷமாக இருந்தால்  70% - 80% நல்லது

என்ன பரிசு தரலாம்:

மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் வாழ்க்கையில் நிறைய வேடிக்கையும் உற்சாகமும் தேவை. எனவே, இந்த காதலர் தினம் அவளை ஒரு குழு பயணத்தில் எங்காவது சிறப்புக்கு அழைத்துச் செல்லாம். புத்தகத்தை பரிசாக வழங்கலாம்.

பொது பலன் :

இந்த வருட காதலர் தினம் மிக சிறப்பாக இருக்கும். மேலும் இது மிதுன ராசி பெண்களுக்கு  மிக சந்தோஷத்தை தரும். உங்கள் காதலை தைரியமாக வெளிபடுத்தலாம்.