குறிப்பு :
காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)
திருமணமானவர்கள் ராசி பலன்
காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்
நீங்கள் இழந்த காதலை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மிகவும் சிறப்பான நாளாக அமையப் போகிறது.
சிறப்பான உறவு அமையக்கூடிய ஒரு அர்த்தமுள்ள காலமாக இருக்கும். இது உறவுகளை வளர்க்கக் கூடிய மிக சிறப்பான காலம். காதல் மட்டுமல்லாமல் உறவை வளர்த்தல், அது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல் என பல இன்பமான நிகழ்வுகள் இருக்கும். இருப்பினும் இதெல்லாம் நடக்க அமைதியும், நம்பிக்கையும் தேவைப்படும்.
காதலை வெளிபாடுத்தல் :
மிக சிறந்த நாள். காதலுக்குரிய மிக சிறந்த காலம். நண்பர்களால் தொல்லை உண்டு. அறிவால் காதலை வெல்ல முடியாது என்பதை புரிந்த கொண்டு காதலால் காதலை வெல்லவும். உங்கள் தவறான புரிதல்கள் அனைத்தும் சரியாகிவிடும்.
5யில் இருக்கும் சூரியன் உங்களுக்கு நன்மை செய்வார். அதிஷ்டமான நாள்
ஏற்ற காதல் ராசிகார்கள் :
நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்
- ரிஷபம் மற்றும் மகரமாக இருந்தால் 90% - 100% நல்லது
- கடகம் மற்றும் விருச்சிகமாக இருந்தால் 80% - 90% நல்லது
- கன்னி மற்றும் மிதுனமாக இருந்தால் 70% - 80% நல்லது
என்ன பரிசு தரலாம்:
கன்னி ராசிக்காரர்கள் சிறிய விசயங்களை விரும்புவார்கள். மேலும் சிறிய விசயங்களையும் பாராட்டுவதை விரும்புவர்கள் நீங்கள், உங்கள் துணை கன்னி ராசியாக இருக்கும் பட்சத்தில் உடல்நலம் குறித்த ஒரு புத்தகம், அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு செல்லப்பிராணி போன்ற பரிசாக தரலாம்
பொது பலன் :
உங்கள் துணையுடன் உங்கள் நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். அன்பால் தான் காதலை வெல்ல முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்