Showing posts with label மேஷம். Show all posts
Showing posts with label மேஷம். Show all posts

மேஷ ராசி வருட பலன்கள் - 2025

Contents

பொது பலன்கள்.... 1

தொழில்... 1

குடும்ப வாழ்க்கை........ 2

நிதி நிலை (பொருளாதாரம் ). 2

கல்வி - படிப்பு. 3

ஆரோக்கியம்... 3

பரிகாரங்கள்.... 3

 

பொது பலன்கள்

ü  மேஷ ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் ராசி பலன் படி, இந்த ஆண்டு சராசரியான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மார்ச் மாதம் வரை சனியின் சிறப்பு அருளால் பல்வேறு விஷயங்களில் நல்ல பலன்களைப் பெற முடியும். இதற்குப் பிறகு, சற்று ஏழரை சனி ஆரம்பிப்பதால் சற்று பலவீனமாக தான் இருக்கிறது என்றாலும் இருப்பினும், வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல பலன்களைப் பெறலாம்.

ü  மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் 2025 யில் தொடங்கும் ஏழரை சனி இவர்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். எளிமையான வார்த்தைகளில், நன்மைகளும் உண்டு அதுபோல் செலவுகளும் இருக்கும். இவர்களின் மனம் ஆன்மீகப் பணியில் ஈடுபடும். மனதில் நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்கள் வரும்.

ü  மேஷ ராசிக்காரர்களின் மிகப்பெரிய பிரச்சனை மனசு சம்மந்த பட்ட பிரச்சனை தான் இந்த வருடம் இருக்கும் எனலாம்.

ü  மேஷ ராசி இளம் வயதினர்கள் தங்கள் வேலையில் அதிக மன அழுத்தத்தை உணர்வார்கள். மேலும் அதிக வேலை அழுத்தம் காரணமாக இந்த ஆண்டு சற்று குழப்பமும், நிம்மதின்மையும் உண்டாக வாய்ப்பு உள்ளது. என்றாலும் தொழில் மற்றும் வேலையில் செலவுக்கு ஏற்ற வருவாய் இருக்கும்.

தொழில்

ü  மே 14ம் தேதி நடக்க இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு, குரு மேஷ ராசிகார்ர்களின் நிதிப் பக்கத்தை வலுவாக வைத்து இருக்க உதவுவார் என்று சொல்லாம். இந்த ஆண்டு வியாபாரத்தில் சிறப்பாக இருக்கும் இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கவனமாக அவசியம். மார்ச் மாதத்திற்குப் பிறகு பன்னிரண்டாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி ஆவதால் சிலருக்கு சிரமங்களை உருவாக்கலாம். இருப்பினும், தங்கள் பிறந்த இடம் அல்லது வீட்டை விட்டு விலகி சென்று தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் ஓரளவுக்கு திருப்திகரமானவே இருக்கும்.

ü  வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களும் நல்ல பலன்களைப் பெற முடியும், மற்றவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். கவனம் அவசியம். மேலும் தொலைத்தொடர்பு துறைகள், கூரியர் சேவைகள் மற்றும் பயணம் தொடர்பான அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மே மாதத்திற்குப் பிறகும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

ü  புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், விரும்பிய இடத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடின உழைப்புக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ü  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு காதல் மற்றும் சுய புதிய வாய்ப்புகளை நன்றாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தின் வாய்ப்புகள் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை

ü  வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். அதே நேரத்தில், ஒருவருக்கொருவர் உறவுகளைப் பேணுவதும் முக்கியம். காதல் விவகாரங்களின் இந்த ஆண்டு ஓரளவு சுமாராக தான் இருக்கலாம்.

ü  மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு ஐந்தாம் பார்வையில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும்போது திருமண வாய்ப்புகளை உருவாக்குவார். காதலலில் இருப்பவர்கள திருமணம் செய்ய விரும்பினால் , இந்த ஆண்டு குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற முடியும்.

ü  தனிமையில் இருப்பவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை அடையாளம் காணலாம். என்றாலும் மே மாதத்திற்குப் பிறகு ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் உறவுகளில் சில சிரமங்களை உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.

ü  இந்த ஆண்டின் ஆரம்பம் இவர்களுக்கு வாழ்க்கையில் குடும்ப மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும்.

நிதி நிலை (பொருளாதாரம் )

ü  நிதிநிலை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் 2025 ஆம் ஆண்டில், மேஷ ராசிக்காரர்கள் சராசரியை விட சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ü  2025 ஆம் ஆண்டில் சேமிப்புகள் ஓரளவு பலவீனமாக இருக்கலாம். என்றாலும்,வருமானத்திற்கு வாய்ப்பும் நன்றாக இருக்கும். எனவே ஆண்டு முழுவதும் நிலையான நிதி நிலையை பராமரிக்க முடியும். செலவுகள் அதிகமானாலும் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நிதி நிலை இருக்கும். இடம் இருப்பவர்கள் வீடு கட்ட விரும்பினால், முயற்சி செய்வதன் மூலம் அதைச் செய்ய முடியும். என்றாலும் புதிதாக எந்த ஒரு பெரிய சாதனையும் ஏற்பட வாய்ப்பில்லை.

ü  பொதுவாக நிலம், கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற விஷயங்களில் ஆண்டு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை.

கல்வி - படிப்பு

ü  பொதுவாக மே மாதத்தின் நடுப்பகுதி வரை உயர்கல்விக்குக் காரணமான குருவின் நிலை சாதகமாக இருப்பதால் இக்காலத்தில் படிப்பின் நிலை சிறப்பாக இருக்கும்.

ü  இதற்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியே படிக்கும் மாணவர்களுக்கும் சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான கல்வியைப் பெறும் மாணவர்களுக்கும் மாஸ்காம் அல்லது தொலைத்தொடர்பு தொடர்பான பாடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் நல்ல பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

ü  மாணவர்களும் இந்த ஆண்டு அதிக ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.

ü  பொதுவாக ஏப்ரல் மாதத்திற்கு முன், உயர்கல்வி படிக்க முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ü  வெளி நாட்டில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மாணவர்கள் தொடர் முயற்சிகளின் மூலம் வெற்றி பெறலாம்.

ü  பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

ஆரோக்கியம்

ü  ஏழரை சனி ஆரம்பிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கட்டாயம் வேண்டும். கால் சம்மந்த பட்ட வலிகள் வர வாய்ப்பு உள்ளது.

ü  இந்த வருடம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய வருடம் ஆகும்.

ü  யோகா, தியானம், உடற்பயிற்சி செய்யவும். அடிக்கடி தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்கு வர வாய்ப்பு உள்ளதால் மனதை ஒருநிலை படுத்த வேண்டும்.

ü  இந்த வருட கடைசியில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதாவது மலச்சிக்கல், அஜீரணம் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உணவு சம்மந்த பட்ட விசயத்தில் கவனம் அவசியம்

ü  குடும்பத்தினர் உடல்நலனில் மேஷம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய மருத்துவ பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ü  உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

பரிகாரங்கள்

ü  சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள். அல்லது முதியோர் இல்லங்களுக்கு தொண்டுகள் புரியலாம்.

ü  செவ்வாய் கிழமை தோறும் அனுமனை வணங்க எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

ü  முடிந்த அளவு சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ü  துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ü  வியாழக்கிமை தோறும் லட்டுகளை பிரசாதமாக கொடுக்க தொழில் இருந்து வரும் அழுத்தம் குறையும் .

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மேஷம்



மேஷ ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், மேஷம் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார், இதனால்  மேஷ ராசிக்காரர்களின் வாக்கின், செல்வாக்கு அதிகரிக்கும், 

  • குருவின் விசேஷப் பார்வைகள்  மேஷ ராசிக்கு முறையே 6, 8, 10ம் இடங்களில் பதிகின்றன, இதனால் எதிரிகள் பயம் நீங்கும், ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும், 

  • அலுவலகங்களில்  மேஷ ராசிக்காரர்களின் பெருமை பேசப்படும், மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும், பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும், பேச்சுக்கு மதிப்பு கூடும், 

  • ஜன்ம குருவில் இருந்து விடுதலை கிடைக்கும்  கடந்த காலத்தில் நடந்த பிரச்னைகள் தீரும் ,

  • வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும், மனம்  நிம்மதி அடையும் 

  • வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும், 

  • பணவரவு சீராகும், பழைய கடன்கள் சுலபமாக அடைபடும், 

  • வாரிசுகளால் பெருமை உண்டாகும், 

  • வீடு, வாகன யோகம் உண்டாகும்,

  • பொறுமையாக காரித்தை சாதிக்கலாம், 

  • பெண்கள் கட்டாயம் அடுத்தவர் விசயங்களில் தலையிட வேண்டாம் 

  • பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய  குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது, 

  • குருவின் பயணமும் பார்வையும் மேஷ ராசிகாரர்களுக்கு  அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது, பொதுவாக மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி   ஒரு பொன்னான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் , 

  • வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும், புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம், அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம், 

  • அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவார்கள், 

  • அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும், 

  • மாணவர்கள் சோம்பலை தவிர்க்கவும் 

  • பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு,

  • சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும், 

  • அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம், 


அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் அஸ்வினி நடசத்திரக்காரர்களுக்கு குறையும். ஆனாலும்  தன்னம்பிக்கை உயரும். 

  • வாழ்க்கையில் முன்னேற, வேகம் காட்டுவது நல்லது. பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.

  • மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவார்கள். 

  • மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவார்கள். 

  • ஆனாலும் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

  • எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

வீடியோவில் பார்க்க 


பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால்  வெற்றி இவர்களை தேடித் தரும். 

  • தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும், சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும், அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.

  • குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம், எனவே சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது,.

  • கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

வீடியோவில் பார்க்க 



கார்த்திகை 1ம் பாதம் 

கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில்  பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம்

  • இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும், அது நல்லதாக தான் இருக்கும்.

  • எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம், அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

  • வாழ்க்கை துணையின்  உடல்நலத்தில் கவனம் தேவை. 

  • இவர்களின்  புத்திக்கூர்மை  வெற்றியைத் தேடித் தரும்.

  • வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பார்கள்.

  • இவர்கள் தங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள்.

    வீடியோவில் பார்க்க 



பரிகாரம் 

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும், முடிந்தால் அரளிப்பூ  மாலை, முருக உடைய  வேலுக்கு சாத்தி வணங்கி வருவது நல்லது 


Full Video 




தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 பொது பலன்கள்

குரோதி வருடம் - 2024- மேஷம்

  • வருடம் தொடங்கும் சமயத்தில் மேஷத்தில் குரு, ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் அதன் பின் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த  வருடம்  மேஷ ராசிகாருக்கு ஏற்றமான ஆண்டாக இருக்கும்.
  • புத்தாண்டு ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

காதலர் தின ராசி பலன்கள் - மேஷம்




காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

 


திருமணமானவர்கள் ராசி பலன்

வீட்டுலதான் ஒரே சண்டையா இருக்கலாம். சந்திரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் உங்களின் மனைவி சண்டை போட லிஸ்ட் போட்டு வைய்ட் பண்ணீட்டு இருப்பாங்க  உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவு செய்தால் ரிலாக்ஸ் ஆகும். 2, 7க்கு உரிய சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் சண்டை சமாதானத்தில் முடிவதுடன் சந்தோஷத்தையும் கொடுக்கும். 11யில் உள்ள சூரியனும் உங்களுக்கு உதவி செய்வார்.  மேலும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 2ம் வீடு ஆனா ரிஷபத்தில் இருக்கிறார். இது காதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறது. உங்கள் துணையுடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எப்போதும் இல்லாத வகையில் நெருக்கம் இருக்கும். மோதலும் காதல் தானே!!

 

காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

உங்கள் காதலி அல்லது காதலர் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்துவது போல் நீங்கள் உணரலாம், எனவே அவர்கள் உங்களுக்காக என்ன என்ன  திட்டமிடுவார்கள் என்று நீங்கள் கனவு காணுவீர்கள். உங்களின் உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றே சரியான நேரம் எனலாம். உங்கள் துணையுடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

 

காதலை வெளிபாடுத்தல் :

அதிகளவில் பேச பயப்படுதல் அல்லது தயக்கம் காட்டும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று. பொதுவாக இந்த ராசிகார்கள் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தும் போது அது மறுக்கப்படும் அல்லது காதலை சொல்ல சென்று வேறு ஏதோ பேச நேரிடலாம். ஆனால் இந்த ஆண்டு காதலில் மிக சிறப்பான புதிய அனுபவத்தைப் பெறப்போகும், மிக நல்ல நாளாக மேஷ ராசிக்கு அமையப்போகிறது என்பது மட்டும் உண்மை. உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், உங்கள் காதலர் அல்லது காதலி மீதான உங்கள் அழகான உணர்வுகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள், உங்கள் காதலர் அல்லது காதலிடம் மனதில் உள்ளதை அப்படியே பேச வேண்டாம். சந்திராஷ்டம் உள்ளது. உங்கள் காதலை வித்தியாசமாக வெளிபடுத்துவது மிகவும் நல்லதை தரும். மனம் வீட்டு பேசவும்.

ஏற்ற காதல் ராசிகார்கள் :

நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்

    • ·         மேஷமாக இருந்தால் 90% - 100% நல்லது
    • ·         துலாமாக இருந்தால் 80% - 90% நல்லது
    • ·         சிம்மமாக இருந்தால் 70% - 80% நல்லது
    • ·         தனுசு இருந்தால் 60% - 70% நல்லது
    • ·         மிதுனம் அல்லது கும்பமாக இருந்தால் 50% நல்லது

என்ன பரிசு தரலாம்:

மேஷம் தைரியமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட கூடியவர்கள். நீங்கள் உங்கள் துணை மேஷ ராசியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை  பொழுதுபோக்கு பூங்காவிற்கு அல்லது சுற்றால தலத்திற்கு அழைத்து செல்லலாம்.


பொது பலன் :

உங்கள் மனதில் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களைப் பெற உங்கள் துணையுடன் தேவையான உரையாடலை மேற்கொள்வது நல்லது. வித்தியாசமான பரிசுகள் கொடுக்கலாம். காதலுக்கு ஏற்ற நல்ல நாள். அதிகபடியான அன்பினால் நல்லதை பெறுவீர்கள்.