குரோதி வருடம் - 2024- மேஷம்
- வருடம் தொடங்கும் சமயத்தில் மேஷத்தில் குரு, ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் அதன் பின் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த வருடம் மேஷ ராசிகாருக்கு ஏற்றமான ஆண்டாக இருக்கும்.
- புத்தாண்டு ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.