Showing posts with label பரணி. Show all posts
Showing posts with label பரணி. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மேஷம்



மேஷ ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், மேஷம் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார், இதனால்  மேஷ ராசிக்காரர்களின் வாக்கின், செல்வாக்கு அதிகரிக்கும், 

  • குருவின் விசேஷப் பார்வைகள்  மேஷ ராசிக்கு முறையே 6, 8, 10ம் இடங்களில் பதிகின்றன, இதனால் எதிரிகள் பயம் நீங்கும், ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும், 

  • அலுவலகங்களில்  மேஷ ராசிக்காரர்களின் பெருமை பேசப்படும், மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும், பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும், பேச்சுக்கு மதிப்பு கூடும், 

  • ஜன்ம குருவில் இருந்து விடுதலை கிடைக்கும்  கடந்த காலத்தில் நடந்த பிரச்னைகள் தீரும் ,

  • வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும், மனம்  நிம்மதி அடையும் 

  • வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும், 

  • பணவரவு சீராகும், பழைய கடன்கள் சுலபமாக அடைபடும், 

  • வாரிசுகளால் பெருமை உண்டாகும், 

  • வீடு, வாகன யோகம் உண்டாகும்,

  • பொறுமையாக காரித்தை சாதிக்கலாம், 

  • பெண்கள் கட்டாயம் அடுத்தவர் விசயங்களில் தலையிட வேண்டாம் 

  • பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய  குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது, 

  • குருவின் பயணமும் பார்வையும் மேஷ ராசிகாரர்களுக்கு  அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது, பொதுவாக மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி   ஒரு பொன்னான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் , 

  • வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும், புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம், அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம், 

  • அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவார்கள், 

  • அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும், 

  • மாணவர்கள் சோம்பலை தவிர்க்கவும் 

  • பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு,

  • சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும், 

  • அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம், 


அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் அஸ்வினி நடசத்திரக்காரர்களுக்கு குறையும். ஆனாலும்  தன்னம்பிக்கை உயரும். 

  • வாழ்க்கையில் முன்னேற, வேகம் காட்டுவது நல்லது. பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.

  • மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவார்கள். 

  • மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவார்கள். 

  • ஆனாலும் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

  • எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

வீடியோவில் பார்க்க 


பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால்  வெற்றி இவர்களை தேடித் தரும். 

  • தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும், சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும், அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.

  • குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம், எனவே சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது,.

  • கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

வீடியோவில் பார்க்க 



கார்த்திகை 1ம் பாதம் 

கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில்  பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம்

  • இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும், அது நல்லதாக தான் இருக்கும்.

  • எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம், அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

  • வாழ்க்கை துணையின்  உடல்நலத்தில் கவனம் தேவை. 

  • இவர்களின்  புத்திக்கூர்மை  வெற்றியைத் தேடித் தரும்.

  • வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பார்கள்.

  • இவர்கள் தங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள்.

    வீடியோவில் பார்க்க 



பரிகாரம் 

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும், முடிந்தால் அரளிப்பூ  மாலை, முருக உடைய  வேலுக்கு சாத்தி வணங்கி வருவது நல்லது 


Full Video 




சுக்கிரன்




கிரகங்கள் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள்-சுக்கிரன் :

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.


சுக்கிரன் சில குறிப்புகள் (Something About Venus-Sukiran):
  1. நட்சத்திரங்கள் (Stars): பரணி, பூரம், பூராடம்
  2. மொத்த திசை இருப்பு : 20 வருடம்
  3. தானியம் (Grains): மொச்சை (one of the Beans)
  4. புஷ்பம் (Flower): வெண்தாமரை (White Lotus)
  5. நிறம் (Color): வெண்மை
  6. ஜாதி (Caste) : பிராமண ஜாதி
  7. வடிவம் (Structure or Shape) : சம உயரமானவர்
  8. உடல் உறுப்பு (Part of the Bosy): மர்ம ஸ்தானம்
  9. உலோகம் (Metal) : வெள்ளி (Silver)
  10. மொழி (Language) : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
  11. ரத்தினம் (Gem): வைரம (Diamond)்
  12. வஸ்திரம் : வெண்பட்டு
  13. தூப தீபம் : லவங்கம்
  14. வாகனம் : குதிரை (Horse),மாடு (Cow), விமானம், கருடன்
  15. மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 3, 8 ஆகும்
  16. சமித்து : அத்தி
  17. சுவை : புளிப்பு
  18. பஞ்பூதம் : அப்புக்கிரகம்
  19. நாடி : சிலோஷ்ம நாடி
  20. திசை: தென்கிழக்கு
  21. அதிதேவதை : லஷ்மி, இந்திரன், வருணன்
  22. சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
  23. தன்மை : ஸ்திரக்கிரகம்
  24. குணம் : ராஜசம்
  25. ஆட்சி : ரிஷபம், துலாம் உச்சம் : மீனம் , நீசம் : கன்னி , மூல திரிகோணம் : துலாம்
  26. நட்பு வீடுகள்: மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
  27. பகை வீடுகள்: கடகம், சிம்மம், தனுசு
  28. பார்வை : 7 மட்டும்
  29. பலன் தரும் காலம் : மத்திம காலம்
  30. மாத்ருகாரகன் : களத்திரகாரகன்
  31. தத்துவம் : பெண் கிரகம்

சுக்கிரன் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள் :

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :

மேலும் படிக்க....