மேஷ ராசி குரு பெயர்ச்சி
பொது பலன்கள் 2024-25
- இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், மேஷம் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார், இதனால் மேஷ ராசிக்காரர்களின் வாக்கின், செல்வாக்கு அதிகரிக்கும்,
- குருவின் விசேஷப் பார்வைகள் மேஷ ராசிக்கு முறையே 6, 8, 10ம் இடங்களில் பதிகின்றன, இதனால் எதிரிகள் பயம் நீங்கும், ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும்,
- அலுவலகங்களில் மேஷ ராசிக்காரர்களின் பெருமை பேசப்படும், மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும், பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும், பேச்சுக்கு மதிப்பு கூடும்,
- ஜன்ம குருவில் இருந்து விடுதலை கிடைக்கும் கடந்த காலத்தில் நடந்த பிரச்னைகள் தீரும் ,
- வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும், மனம் நிம்மதி அடையும்
- வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்,
- பணவரவு சீராகும், பழைய கடன்கள் சுலபமாக அடைபடும்,
- வாரிசுகளால் பெருமை உண்டாகும்,
- வீடு, வாகன யோகம் உண்டாகும்,
- பொறுமையாக காரித்தை சாதிக்கலாம்,
- பெண்கள் கட்டாயம் அடுத்தவர் விசயங்களில் தலையிட வேண்டாம்
- பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது,
- குருவின் பயணமும் பார்வையும் மேஷ ராசிகாரர்களுக்கு அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது, பொதுவாக மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு பொன்னான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் ,
- வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும், புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம், அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்,
- அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவார்கள்,
- அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும்,
- மாணவர்கள் சோம்பலை தவிர்க்கவும்
- பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு,
- சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும்,
- அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம்,
அஸ்வினி
- இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் அஸ்வினி நடசத்திரக்காரர்களுக்கு குறையும். ஆனாலும் தன்னம்பிக்கை உயரும்.
- வாழ்க்கையில் முன்னேற, வேகம் காட்டுவது நல்லது. பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.
- மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவார்கள்.
- மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவார்கள்.
- ஆனாலும் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
- எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.
வீடியோவில் பார்க்க
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்த மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம்.
- இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால் வெற்றி இவர்களை தேடித் தரும்.
- தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும், சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
- உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும், அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.
- குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம், எனவே சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது,.
- கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.
வீடியோவில் பார்க்க
கார்த்திகை 1ம் பாதம்
கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் பிறந்த மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம்,
- இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும், அது நல்லதாக தான் இருக்கும்.
- எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம், அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
- வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
- இவர்களின் புத்திக்கூர்மை வெற்றியைத் தேடித் தரும்.
- வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பார்கள்.
- இவர்கள் தங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள்.
வீடியோவில் பார்க்க
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும், முடிந்தால் அரளிப்பூ மாலை, முருக உடைய வேலுக்கு சாத்தி வணங்கி வருவது நல்லது