Showing posts with label நிதி நிலை. Show all posts
Showing posts with label நிதி நிலை. Show all posts

மேஷ ராசி வருட பலன்கள் - 2025

Contents

பொது பலன்கள்.... 1

தொழில்... 1

குடும்ப வாழ்க்கை........ 2

நிதி நிலை (பொருளாதாரம் ). 2

கல்வி - படிப்பு. 3

ஆரோக்கியம்... 3

பரிகாரங்கள்.... 3

 

பொது பலன்கள்

ü  மேஷ ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் ராசி பலன் படி, இந்த ஆண்டு சராசரியான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மார்ச் மாதம் வரை சனியின் சிறப்பு அருளால் பல்வேறு விஷயங்களில் நல்ல பலன்களைப் பெற முடியும். இதற்குப் பிறகு, சற்று ஏழரை சனி ஆரம்பிப்பதால் சற்று பலவீனமாக தான் இருக்கிறது என்றாலும் இருப்பினும், வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல பலன்களைப் பெறலாம்.

ü  மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் 2025 யில் தொடங்கும் ஏழரை சனி இவர்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். எளிமையான வார்த்தைகளில், நன்மைகளும் உண்டு அதுபோல் செலவுகளும் இருக்கும். இவர்களின் மனம் ஆன்மீகப் பணியில் ஈடுபடும். மனதில் நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்கள் வரும்.

ü  மேஷ ராசிக்காரர்களின் மிகப்பெரிய பிரச்சனை மனசு சம்மந்த பட்ட பிரச்சனை தான் இந்த வருடம் இருக்கும் எனலாம்.

ü  மேஷ ராசி இளம் வயதினர்கள் தங்கள் வேலையில் அதிக மன அழுத்தத்தை உணர்வார்கள். மேலும் அதிக வேலை அழுத்தம் காரணமாக இந்த ஆண்டு சற்று குழப்பமும், நிம்மதின்மையும் உண்டாக வாய்ப்பு உள்ளது. என்றாலும் தொழில் மற்றும் வேலையில் செலவுக்கு ஏற்ற வருவாய் இருக்கும்.

தொழில்

ü  மே 14ம் தேதி நடக்க இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு, குரு மேஷ ராசிகார்ர்களின் நிதிப் பக்கத்தை வலுவாக வைத்து இருக்க உதவுவார் என்று சொல்லாம். இந்த ஆண்டு வியாபாரத்தில் சிறப்பாக இருக்கும் இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கவனமாக அவசியம். மார்ச் மாதத்திற்குப் பிறகு பன்னிரண்டாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி ஆவதால் சிலருக்கு சிரமங்களை உருவாக்கலாம். இருப்பினும், தங்கள் பிறந்த இடம் அல்லது வீட்டை விட்டு விலகி சென்று தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் ஓரளவுக்கு திருப்திகரமானவே இருக்கும்.

ü  வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களும் நல்ல பலன்களைப் பெற முடியும், மற்றவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். கவனம் அவசியம். மேலும் தொலைத்தொடர்பு துறைகள், கூரியர் சேவைகள் மற்றும் பயணம் தொடர்பான அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மே மாதத்திற்குப் பிறகும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

ü  புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், விரும்பிய இடத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடின உழைப்புக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ü  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு காதல் மற்றும் சுய புதிய வாய்ப்புகளை நன்றாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தின் வாய்ப்புகள் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை

ü  வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். அதே நேரத்தில், ஒருவருக்கொருவர் உறவுகளைப் பேணுவதும் முக்கியம். காதல் விவகாரங்களின் இந்த ஆண்டு ஓரளவு சுமாராக தான் இருக்கலாம்.

ü  மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு ஐந்தாம் பார்வையில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும்போது திருமண வாய்ப்புகளை உருவாக்குவார். காதலலில் இருப்பவர்கள திருமணம் செய்ய விரும்பினால் , இந்த ஆண்டு குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற முடியும்.

ü  தனிமையில் இருப்பவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை அடையாளம் காணலாம். என்றாலும் மே மாதத்திற்குப் பிறகு ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் உறவுகளில் சில சிரமங்களை உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.

ü  இந்த ஆண்டின் ஆரம்பம் இவர்களுக்கு வாழ்க்கையில் குடும்ப மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும்.

நிதி நிலை (பொருளாதாரம் )

ü  நிதிநிலை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் 2025 ஆம் ஆண்டில், மேஷ ராசிக்காரர்கள் சராசரியை விட சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ü  2025 ஆம் ஆண்டில் சேமிப்புகள் ஓரளவு பலவீனமாக இருக்கலாம். என்றாலும்,வருமானத்திற்கு வாய்ப்பும் நன்றாக இருக்கும். எனவே ஆண்டு முழுவதும் நிலையான நிதி நிலையை பராமரிக்க முடியும். செலவுகள் அதிகமானாலும் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நிதி நிலை இருக்கும். இடம் இருப்பவர்கள் வீடு கட்ட விரும்பினால், முயற்சி செய்வதன் மூலம் அதைச் செய்ய முடியும். என்றாலும் புதிதாக எந்த ஒரு பெரிய சாதனையும் ஏற்பட வாய்ப்பில்லை.

ü  பொதுவாக நிலம், கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற விஷயங்களில் ஆண்டு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை.

கல்வி - படிப்பு

ü  பொதுவாக மே மாதத்தின் நடுப்பகுதி வரை உயர்கல்விக்குக் காரணமான குருவின் நிலை சாதகமாக இருப்பதால் இக்காலத்தில் படிப்பின் நிலை சிறப்பாக இருக்கும்.

ü  இதற்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியே படிக்கும் மாணவர்களுக்கும் சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான கல்வியைப் பெறும் மாணவர்களுக்கும் மாஸ்காம் அல்லது தொலைத்தொடர்பு தொடர்பான பாடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் நல்ல பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

ü  மாணவர்களும் இந்த ஆண்டு அதிக ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.

ü  பொதுவாக ஏப்ரல் மாதத்திற்கு முன், உயர்கல்வி படிக்க முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ü  வெளி நாட்டில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மாணவர்கள் தொடர் முயற்சிகளின் மூலம் வெற்றி பெறலாம்.

ü  பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

ஆரோக்கியம்

ü  ஏழரை சனி ஆரம்பிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கட்டாயம் வேண்டும். கால் சம்மந்த பட்ட வலிகள் வர வாய்ப்பு உள்ளது.

ü  இந்த வருடம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய வருடம் ஆகும்.

ü  யோகா, தியானம், உடற்பயிற்சி செய்யவும். அடிக்கடி தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்கு வர வாய்ப்பு உள்ளதால் மனதை ஒருநிலை படுத்த வேண்டும்.

ü  இந்த வருட கடைசியில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதாவது மலச்சிக்கல், அஜீரணம் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உணவு சம்மந்த பட்ட விசயத்தில் கவனம் அவசியம்

ü  குடும்பத்தினர் உடல்நலனில் மேஷம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய மருத்துவ பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ü  உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

பரிகாரங்கள்

ü  சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள். அல்லது முதியோர் இல்லங்களுக்கு தொண்டுகள் புரியலாம்.

ü  செவ்வாய் கிழமை தோறும் அனுமனை வணங்க எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

ü  முடிந்த அளவு சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ü  துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ü  வியாழக்கிமை தோறும் லட்டுகளை பிரசாதமாக கொடுக்க தொழில் இருந்து வரும் அழுத்தம் குறையும் .