Showing posts with label பொது பலன்கள். Show all posts
Showing posts with label பொது பலன்கள். Show all posts

கடக ராசி வருட பலன்கள் - 2025

கடக ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி ஆகும் சனி பெயர்ச்சியால் அஷ்டம சனி விலகுவதால் வாழ்கையில் இழந்தவைகள் மீண்டும் கிடைக்கும் காலம் ஆகும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகு விடிவுகாலம் கிடைக்கும்.

ü 2025ம் ஆண்டு கடக ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து பணிகளை திறமையாக முடித்து வெற்றி காண்பார்கள்.

ü புத்திசாலித்தனமாக செயல்பட்டு விரும்பியவை மற்றும் தேவையானவற்றை பெறுவார்கள். பேச்சுக்களில் பொறுமை மிக்க அணுகுமுறை சிறந்த பலனை அளிக்கும்.

ü சிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்த சிக்கல்கள் தீரும். பழைய நண்பர்களின் சந்திப்பு குறித்து புதிய சிந்தனைகள் தோன்றும்.

ü பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப கருவிகளை வாங்குவதில் ஆர்வம் மேலோங்கும்.

ü 2025 புத்தாண்டில் வேலை தொடர்பான பயணங்கள் பல வகையில் நன்மையை தரும். பங்குச்சந்தை, ஊக வணிகம் உள்ளிட்ட விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். எதில் முதலீடு செய்தாலும் கூடுதல் கவனம் தேவை.

ü 2025-ம் ஆண்டில், கடக ராசிக்காரர்கள் முதலீடு அல்லது உறவு தொடர்பான எந்த முக்கிய முடிவை எடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

ü 2025 ஜூலை 13 முதல் 28 நவம்பர் 2025 வரை அதாவது சனி வக்கிர களத்தில் ஒரு விதமான அலட்சிய போக்கு இருக்கும். உறவுகளிடம் சில பிளவுகள் வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வாழ்க்கை துணையுடனான உறவை பாதிக்கலாம் எனவே பொறுமையாக இருக்க வேண்டும்.

ü ஏப்ரல் 2025 வரை, ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நிலை சாதகமான பலன்கள் இருக்கும்.

ü நிழல் கிரகமாக ராகு எட்டாவது வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் இருக்கும்போது, முன்னேற்றம் குறையும் மற்றும் சிலருக்கு தோல்வியும் உண்டாகலாம். இது தவிர, ராகு மற்றும் கேதுவின் இந்த நிலை வாழ்க்கை துணையுடனான உறவை பலவீனப்படுத்தலாம். கவனம் கட்டாயம் வேண்டும்.

ü மே 2025 முதல் குரு உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் நுழைகிறார், இதன் காரணமாக ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்ல நிவாரணம் தரும்.

ü குரு சிறப்பாக இருந்தாலும் மார்ச் மாதம் வரை சனி பகவான் எட்டாவது வீட்டில் இருக்கிறார், இது இவர் மன அழுத்தத்தை தருவர் என்று தான் சொல்ல வேண்டும்.



தொழில்



ü ஏப்ரல் 2025 வரையிலான காலம் 2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். கடக வருட ராசி பலன் 2025, குரு கிரகம் உங்கள் பதினொன்றாவது வீட்டில் சாதகமான நிலையில் இருப்பதால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையில் முன்னேறும். சனி ப் எட்டாவது வீட்டில் இருந்து மன அழுத்தத்தை தருவார்.

ü சனி பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில் இருந்த கடந்த கால பிரச்சனைகளுக்கு இந்த ஆண்டு முடிவு கிடைக்கும். இலக்கை நோக்கி பயணம் செய்வார்கள். இதற்காக கடினமாக உழைப்பார்கள்.

ü மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும்.

ü குருவின் பெயர்ச்சி காரணமாக சக ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் கடக ராசிகாரர்களுக்கு எதிராக நடக்கலாம்.

ü வேலை மாற்றத்திற்கு ஏற்ற ஒரு ஆண்டாக இந்த வருடம் இருக்கும். என்றாலும் மாற்றத்தை யோசித்து ஏற்று கொள்ளவும். எந்த சூழலையும் தைரியமாக கையாள பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ü தொழிலை பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் தொழிலை பொறுத்து இந்த ஆண்டு பலனை என்று பார்க்கும் போது ஒப்பீட்டளவில் சாதகமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியிடம் மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு, பிடிவாதமாக இருந்தால், நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

ü என்றாலும் எதிரிகள் மற்றும் தொழில் போட்டியாளர்களை சமாளிக்க முடியும்.

ü சிலர் தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது வெளிநாடு செல்லவோ இந்த ஆண்டு சாதகமாக இருக்கும்.

ü கூட்டுத் தொழிலில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாகவும் லாபகரமாகவும் இருக்கும். நண்பர்கள் நிதி நெருக்கடிக்கு உதவுவார்கள்.

ü வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை அனுபவிப்பார்கள். வணிகம் ஆண்டு முழுவதும் நிலையான வளர்ச்சி பெறும்.

குடும்ப வாழ்க்கை



ü ஏப்ரல் 2025 முதல், சனி பகவான் உங்கள் ஒன்பதாவது வீட்டில் அமர்வார். குடும்ப வாழ்க்கையில் முடிவுகள் சராசரியாக இருக்கும். என்றாலும் நிழல் கிரகமாக கேது இரண்டாவது வீட்டிலும் மற்றும் ராகு உங்கள் எட்டாவது வீட்டிலும் அமர்வார்கள். இது குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கலாம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை பராமரிக்க அதிக கவனம் அவசியம்.

ü 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி சாதகமாக இருக்காது. 2025 ஆம் ஆண்டில், கடக ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம்.

ü மார்ச் மாதத்திற்கு பிறகு ஐந்தாம் வீட்டில் இருந்து சனியின் தாக்கம் விலகும். காதல் வாழ்க்கையை மேமபடும், ஏனென்றால் பழைய பிரச்சினைகள் அல்லது சிறிய விஷயங்களில் இருந்து வந்த வெறுப்பு உணர்வுகள் இனி கட்டாயம் குறையும்.

ü சனி பெயர்ச்சியின் காரணமாக காதல் வாழ்க்கையின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு கடந்த ஆண்டுவுடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று சிறப்பாகவே இருக்கும்.

ü இந்த ஆண்டு திருமண விஷயங்களில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை பொதுவாக திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ü வருடத்தின் நடுப்பகுதியில் ராகு கேதுவின் தாக்கம் காரணமாக குடும்ப உறவுகளிடையே பிரிவை ஏற்படுத்தக் கூடும். பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.போதை பழகத்திற்கு அடிமையகாமால் இருக்க வேண்டும்.

ü திருமணமான கடக ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு அவர்களின் உறவுகளில் சில சவால்களை சந்திக்க நேரிடும். வலுவான உறவுகளை உருவாக்க ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொள்ள கொண்டு அனுசரித்து வாழ வேண்டும்.

ü திருமணத்திற்கு சரியான துணையை கண்டுபிடிப்பதில் வெற்றிகரமான ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ü காதல் வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளைப் பொறுத்தவரை, கடக ராசி 2025 இந்த ஆண்டு கலவையானதாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü மார்ச் மாதத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சனி பெயர்ச்சிக்கு பிறகு பொருளாதாரம் சற்று சிறப்பாக இருக்கும் எனலாம். கடந்த ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நிதி நிலையில் சாதமாக இருக்கும்.

ü என்றாலும் நிதி பிரச்சினைகள் முற்றிலும் தீர்க்கப்படுமா என்பதில் சந்தேகம் இருக்கும். என்ன என்றால் மே மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது வீட்டில் கேதுவின் தாக்கம் தொடங்கும். மேலும் மே மாதத்தின் நடுப்பகுதி வரை லாப வீட்டில் இருந்த குரு 12ம் வீட்டிற்கு வருவதும் நல்லதல்ல.

ü என்றாலும் குரு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை லாப வீட்டில் இருக்கிறார். இது இவர்கள் செய்யும் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நல்ல லாபத்தைப் பெற செய்யும். இந்த வழியில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் நடுப்பகுதி வரையிலான காலம் சில நல்ல நிதி சாதனைகளை அளிக்கும் எனலாம்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கலாம், அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிகள் தேவைப்படும். இருப்பினும்,இந்த ஆண்டு கடன் வாங்க விரும்பினால், கடன் கிடைக்க வாய்ப்புகள் உண்டு எனலாம்.

ü சனி பகவான் 10ஆம் பார்வையாக 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன் சுமையில் இருந்து வெளியில் வந்தாலும் சுப கடன்கள் இருந்து கொண்டே இருக்கும்.

ü பணத்தை சரியாக கையாள வேண்டும். மேலும் திட்டமிட்டு செயல்பட வெற்றி நிச்சயம்.

கல்வி - படிப்பு



ü இந்த ஆண்டில் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும், இது தினசரி செயல்களில் புதிய அனுபவங்களைச் சேர்க்கும். புதிய நண்பர்களின் குணங்களை அறிந்த பின்பு நட்பு கொள்ளுவது நல்லது. சூழ்நிலையை உணர்ந்து, கருத்துக்களை வெளிப்படுத்துவது மாணவர்களின் நன்மதிப்பை கூட்டும்.

ü 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலம் கல்வியின் பார்வையில் சிறப்பாக இருக்கும். அறிவின் கிரகமான குரு பதினொன்றாவது வீட்டில் இருப்பதால் படிப்பில் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

ü குருவின் ஆசீர்வாதத்தால், கல்வி சிறப்பாக இருக்கும் மற்றும் மகத்தான வெற்றியைப் பெற முடியும்.

ü சனிபகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால், படிப்பில் சிக்கலை சந்திக்க நேரிடலாம். ஏனெனில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ü கல்வியின் கிரகமான புதன், 6 ஜூன் 2025 முதல் 22 ஜூன் 2025 வரையிலும், செப்டம்பர் 15, 2025 முதல் அக்டோபர் 3, 2025 வரையிலான காலகட்டத்தில் கல்வித் துறையில் சாதகமான பலன்களைத் தருவார்.

ü 2025, மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, குரு பன்னிரண்டாவது வீட்டில் பெயர்ச்சிக்கிறார். இது பலவீனமான சூழ்நிலையாகக் கருதப்பட்டாலும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

ü குரு பெயர்ச்சியால் சஞ்சலமான சிந்தனை உருவாக வாய்ப்பு உண்டு. அதை தடுக்க வேண்டியது, அவசியம், ஏனெனில் அவை ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களை சமாளிப்பதில் புத்திசாலித்தனமான அணுகுமுறைகள் முக்கியம்.

ü கேதுவின் பெயர்ச்சி காரணமாக குடும்பத்தின் சூழ்நிலை சற்று குழப்பமாக இருக்கும். என்றாலும் கவனம் சிதறமால் பார்த்து கொள்ள வேண்டும்.

ü மாணவர்கள் படிப்பில் இருந்து கவனம் சிதற வாய்ப்பு உண்டு. உயர்கல்வி தொடர்பான பெரிய முடிவுகளை எடுக்க விரும்பினால், ஏப்ரல் 2025க்குள் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் மே 2025க்குப் பிறகு, படிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்



ü குரு உங்கள் பன்னிரண்டாவது வீட்டில் அமர்வதாலும் ,ராகு எட்டாவது வீட்டுக்கு வருவதால், 2025 ஆம் ஆண்டை கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ü ஆரோக்கியம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கடக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டு கலவையான அல்லது சில நேரங்களில் பலவீனமான பிரச்சனைகளை தரக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

ü ஆரோக்கியத்தை பாதுகாக்க, இந்த ஆண்டில் சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். காரசாரமான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு சாதகமாகும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும்.

ü மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து குரு பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சிப்பதால், உணவில் கவனக்குறைவாக இருந்தால், வயிறு மற்றும் இடுப்பு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் முதுகு பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.

ü 2025-ம் ஆண்டு ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு அமைவதால் கண் சம்பந்தமான நோய்களும் தொந்தரவு தரக்கூடும்.

ü இந்த உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தும் கடக ராசிக்காரர்களின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியால் ஏற்படலாம். ஆண்டு முழுவதும் தொடரலாம். அதனால், தகுந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ü மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.


பரிகாரங்கள்



ü சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதுதால் வரவுகளில் இருக்கும் தடைகளை நீங்கும் மேலும் விரும்பிய சுபகாரியங்கள் விரைவில் நிறைவேறும்.

ü ஒவ்வொரு புதன் கிழமையும் பெருமாள் வழிபாடு வருவது மிகவும் நல்லது.

ü குருக்கள், மகான்கள், பெரியவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்யது வரவும்.

ü முடிந்தால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் ஒரு முறை சென்று நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம்ஏற்றலாம். பல நன்மைகள் உண்டாகும்.

ü வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும்.

ü நெற்றியில் மஞ்சள் ஈட்டு கொள்ளலாம். அல்லது நல்ல காரியத்திற்கு போகும் போது மஞ்சள் கைக்குட்டை அல்லது ஆடை அணியலாம்.

மிதுன ராசி வருட பலன்கள் - 2025

மிதுன ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü இந்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு ,, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். கடவுள் மீதான பக்தி அதிகரிக்கும். கடின முயற்சி இருக்கும். பண வரவு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. என்றாலும் ஓரளவு பண வரவு இருக்கும். மற்றபடி நன்றாகவே இருக்கும்.

ü இந்த வருடம் வரும் குரு பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு இந்த பெயர்ச்சி சாதகமானது என்று கூற முடியாது. என்றாலும் குருவின் பார்வைகள் இவர்களுக்கு சிறந்த பலனையே தரும்.10ம் வீட்டிற்கு வரும் சனி பெயர்ச்சியால் இந்த ஆண்டு சராசரி பலன்களை பெறலாம்

ü இந்த வருடம் வரும் குரு பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு இந்த பெயர்ச்சி சாதகமானது என்று கூற முடியாது. என்றாலும் குருவின் பார்வைகள் இவர்களுக்கு சிறந்த பலனையே தரும்.10ம் வீட்டிற்கு வரும் சனி பெயர்ச்சியால் இந்த ஆண்டு சராசரி பலன்களை பெறலாம் .

ü கர்ம சனியால் தொழிலில் அசுர வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. ஆனலும் வேலை பளு அதிகமாக இருக்கும்.

ü எதிர்பாரா முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் எனலாம்.வேலை, சொந்த தொழிலில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.

ü கல்வியில் நல்ல ஏற்றம்உண்டும். பணப் புழக்கம் கடந்த வருடத்தை விட சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ü புதிய வாகனத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். பழைய வாகனத்தை வாங்கும் போது, ​​வாகனத்தின் ஆவணங்கள், நிலை போன்றவற்றை கவனமாக ஆய்வு செய்வது நல்லது.

ü நிலம் மற்றும் கட்டிட விஷயங்களில், இந்த ஆண்டு சாதகமாக இருக்காது.

ü சனி, தார்மீக வணிக நடவடிக்கைகளில் இருந்து வெற்றிகரமான விளைவுகளை தருவார் என்றாலும் வாகன வசதியைப் பொறுத்தவரை சற்று குழப்பத்தை தான் தருவார்.

ü சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனை இருந்தாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இந்த வருடம் இருக்கும் எனலாம்.

ü மார்ச் 2025 இன் இரண்டாம் பாகத்திலிருந்து சனியின் பெயர்ச்சி மிக முக்கியமான நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.

ü 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்களின் ஆண்டாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளில், குறிப்பாக தொழில், உறவுகள், மற்றும் ஆரோக்கியத்தில் முக்கியமான மாற்றங்கள் காத்திருக்கின்றன.

ü இந்த ஆண்டில் திறமைகளை பரிசீலித்து புதிய உயரங்களை அடைய திறம்பட செயல்படுவார்கள். சவால்கள் இருந்தாலும், அவற்றை சமாளிக்கும் முந்தைய அனுபவம் இவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ü நண்பர்களின் ஊக்கம், இவர்களின் முயற்சிகளுக்கு புதிய உற்சாகத்தை தரும். மனநிலையை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு முடிவையும் ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி உறுதி.



தொழில்



ü பத்தாம் வீட்டிற்கு வரும் சனியால் தொழில் நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் சிறந்த வாய்ப்புகளை வழங்கும், ஆனால் அது சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இது வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும்.

ü குரு பெயர்ச்சியின் காரணமாக சிலருக்கு வேலையில் மாற்றம் அல்லது வேலையில் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். வேலை மாற்றத்தை ஏற்கும் முன் அதன் பின் விளைவுகளை யோசித்து ஏற்கவும்.

ü மிதுன ராசிக்காரர்கள் 2025 புத்தாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் தங்களின் வேலை, சொந்த தொழிலில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.

ü என்றாலும் வேலை பளு சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைக்க வேண்டிவரும். ஆனாலும் இந்த உழைப்பை யாரும் பாராட்டப்பட மாட்டார்கள், இதன் காரணமாக சிலர் விரக்தியடைவார்கள். என்றாலும் ஆகஸ்ட் 2025க்குப் பிறகு வரும் காலம் இந்த சூழ்நிலை மாறி நிம்மதி பெருமூச்சு விடலாம்.

ü குரு ஐந்தாம், ஏழாவது மற்றும் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் ் தொழில் துறையில் ஆன்சைட் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் வேலையில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் முடியும்.

ü முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால், மிதுன ராசிகாரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின் அடிப்படையில் சற்று முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ü பொதுவாக கர்ம சனியால் தொழிலில் அசுர வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது.எதிர்பாரா முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் எனலாம் .

ü புதிய வியாபாரம் தொடர்பான யோசனைகள் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த தொழிலைத் தொடங்கும் வாய்ப்பும் உருவாகும்.

ü இந்த ஆண்டில் வரும் ராகு பெயர்ச்சியால், கடின காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும்.

ü நிர்வாகத் திறன் மேம்பட்டு, தொழிலதிபர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோருடன் அறிமுகம் கிடைக்கும்.

ü கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறந்தாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை



ü இந்த ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சராசரி பலன்களைப் பெறுவார்கள்.

ü என்றாலும் குடும்ப உறவுகளில் நிறைவையும் புத்துணர்வையும் காணலாம். புதிய உறவுகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைக்கும். நீண்டகால நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உருவாகலாம்.

ü குரு பெயர்ச்சியால் குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பாதிக்கும். குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஈகோ ஏற்படலாம். இதன் காரணமாக மகிழ்ச்சியான குடும்ப சூழ்நிலையை பராமரிக்க முடியாமல் போகலாம்.

ü குருவின் பார்வையின் காரணமாக காதிலில் இருப்பவர்களுக்கு காதல், கல்யாணத்தில் முடியும் அமைப்பும் உண்டு. திருமண வயதை அடைந்து, தொடர்ந்து திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு மிகவும் நன்மை பயக்கும்.

ü அதே வேளையில், திருமண வாழ்வில் சனிப்பெயர்ச்சி பாதிப்புகள் வலுவாக இருக்காது. சனியின் பார்வை 7ம் வீட்டில் விழுவதால் சின்னச் சின்ன விஷயங்களில் குழப்பத்தை உண்டாக்கும்.

ü மேலும் காதலர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் அல்லது சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது.

ü மிதுன ராசிக்காரர்கள் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை தயக்கமின்றி பேசுவது நல்லது, இல்லையெனில் அவர்கள் குடும்பத்தில் கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ü எல்லா கிரக நிலைகளை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு பொதுவாக திருமணத்திற்கு நன்மை பயக்கும் ஆண்டு எனலாம். மேலும் திருமண வாழ்க்கைகயானது சராசரி அல்லது சராசரி விட சிறந்த நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü ஏழாவது வீட்டின் அதிபதியான குரு முதல் வீட்டில் அமர்வதால் நல்லது அல்ல. இதனால் பணப் பற்றாக்குறை தொந்தரவு வர வாய்புகள் அதிகம் என்றாலும் குருவின் பார்வையால் 2025 ஆண்டு, நிதி நிதி நிலையை பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானமான ஆண்டாக தான் இருக்கும் எனலாம்.

ü இந்த ஆண்டு மே மாதம் வரை செலவுகள் அதிகமாக தான் இருக்கும். மே 18, 2025 முதல், ராகு மூன்றாமிடத்திலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் பெயர்ச்சி ஆவாது நிதிநிலை சாதகமாக இருக்கும்.

ü 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பெரிய முதலீட்டைச் செய்யத்திட்டம் இருந்தால், அது இவர்ளுக்கு நல்ல வருமானத்தைத் தரும்.

ü பொதுவாக 2025ல் நிதி விவகாரங்களில் பலவிதமான விளைவுகளை மிதுன ராசிகாரர்கள் எதிர்பார்க்கலாம்.

ü சொத்து சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருந்தால் நல்லது.

ü இந்த ஆண்டை பொறுத்தவரை தொழில் முதலீடு செய்யலாம் ஆனால் வண்டி வாகனங்கள், வீடும் இடம் ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கை வேண்டும். என்றாலும் புதிய வீடு, வாகனம் கவனத்துடன் வாங்கலாம்.

ü நேர்மறையான அணுகு முறைகள் இவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

கல்வி - படிப்பு



ü 2025 மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவானின் பார்வைமிதுன ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருக்கும்போது, ​​ கல்வியைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் எனலாம்.

ü மிதுன ராசி, மாணவர்களுக்கு பாடங்களில் தெளிவு கிடைக்கும். பெரியோரின் ஆலோசனைகள் மாற்றம் உண்டாக்கும். ஆரோக்கியம் மேம்படும், நண்பர்களால் சில சவால்களை எதிர் கொள்ள வேண்டிவரும்.

ü விளையாட்டு துறையில் உள்ள மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவார்கள்.

ü மிதுன ராசிக்காரர்களின் செயல்பாடுகள் படிப்பில் சிறப்பாக இருக்கும் மற்றும் கல்வியை தொழில் ரீதியாகச் செய்து வெற்றி பெறுவார்கள். மேலும், வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும்.

ü கல்வியில் நல்ல ஏற்றம் உண்டு. என்றாலும் மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

ü ராசியில் குரு இருப்பது நல்லது அல்ல இருப்பினும், குரு பகவான், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை காட்டும் மாணவர்களுக்கு கட்டாயம் நன்மையை கொடுப்பார்.

ü மருத்துவத்துறையில் தொடர்புடைய மாணவர்கள் எல்லா வகையான தேர்விலும் வெற்றி பெறுவார்கள். கல்லுரி படிக்க விரும்பும் மிதுன ராசி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

ஆரோக்கியம்



ü மிதுன ராசி பிறந்தவர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் வரை சிறப்பாக இருக்கும்.

ü கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிரகப் பெயர்ச்சி சற்று சிறப்பாக இருக்கும். என்றாலும் குருவின் சஞ்சாரம் ஆண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கும். குரு பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. உணவில் கவனம் தேவை.

ü பொதுவாக, சனியின் பெயர்ச்சியும் சாதகமான பலன்களைத் தரும்; இருப்பினும், ஏற்கனவே மார்புப் பகுதியில் பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு சற்று சிரமம் கொடுக்கும் எனலாம் .

ü மேலும் சிலருக்கு கர்ம சனயின் காரணமாக , குறிப்பாக செப்டம்பர் மாதம் முதல் உடல் நல பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கவனம் அவசியம்.

ü குரு ராசிக்கு வருவதாலும், மேலும் புதனும் குருவும் பகை என்பதாலும் சிலருக்கு உடல் பருமன் பிரச்னை, சளி, இருமல் போன்ற பிரச்சனை இருக்கும்.

ü இந்த ஆண்டை சுகாதாரக் கண்ணோட்டத்தில் ஓரளவு சிறப்பாக இருப்பதாலும், குருவால் சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனை வந்து வந்து போகும். கவனம் அவசியம்


பரிகாரங்கள்



ü சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்./span>

ü முடித்தவர்கள் ஒரு முறையானும் கும்பகோணம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வர வேண்டும். /span>

ü புதன் கிழமைதோறும் சிவபெருமானை வணங்கி, விநாயகப் பெருமானுக்கு துர்க்கை அர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்./span>

ü ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனை வழிபட்டால், தொழிலில் உள்ள தடைகள் நீங்கி, சுப காரிய முயற்சிகள் கைகூடும். /span>

ü முடிந்தால் வெள்ளியால் நகை அணியலாம். மேலும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம்./span>

ü குருக்கள், துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு சேவை செய்யலாம். இது மன அமைதி ஏற்படுத்துவதுடன், வாழ்வில் சிறந்த முன்னேற்றமத்தை கொடுக்கும்.

ரிஷப ராசி வருட பலன்கள் - 2025

ரிஷப ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்... 1

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்...

பரிகாரங்கள்

 


பொது பலன்கள்



ü ரிஷப ராசிக்காரர்கள் 2025 புத்தாண்டில், புதிய தொழில், வியாபாரம் தொடங்க சாதகமாகவும், புதிய வாய்ப்புகளும் அமையும். அதனால் புதிய வழிகளில் வருமான ஆதாரங்கள் திறக்கும். .

ü  வேலை, வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளவும் அதில் லாபம் ஈட்டவும் முடியும். .

ü  சுப விரையங்களுக்காக புதிய கடன்களை வாங்க நேரலாம். எந்த பிரச்னைகளும் இன்றி எளிதாக கடனும் கிடைக்கும். என்றாலும் செலவுகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். .

ü 2025 ஆம் ஆண்டில், ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் நிழல் கிரகமாக இருக்கும். ராகு பத்தாம் வீட்டில் கும்பத்திலும், கேது நான்காம் வீட்டில் சிம்ம ராசியிலும் அமைகிறார். இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உங்களுக்கு சராசரி வெற்றியைத் தரும். .

ü  இருப்பினும், 2025 ஆம் ஆண்டில், கும்பத்தில் ராகுவும் சிம்மத்தில் கேதுவும் இருப்பதால் வாழ்க்கையில் ஆடம்பரங்களைக் குறைக்கலாம். மேலும் சிலருக்கு இந்த இரண்டு கிரகங்களால் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பெறும் வெற்றியைப் பாதிக்கலாம்..

ü  ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டின் தொடக்கம் ஆக்கப்பூர்வமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புத்தாண்டு பல விதமான மகிழ்ச்சியான நிகழ்வுகளை தரவுள்ளது எனலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..

ü  கடினமாக உழைக்க வேண்டி வரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். திருமண உறவு நன்றாக இருக்கும். காதல் கை கூடும். வேலையில் சிக்கல் இருக்கும். பொருளாதாரத்தில் பெரிதளவில் பாதிப்பு இருக்காது..


தொழில்



ü  ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2025ம் ஆண்டில் மே மாதத்திற்குப் பிறகு குரு இரண்டாவது வீட்டிற்கு வருவதால் வேலையில் நல்ல பலன்களை வழங்கும்.

ü  தொழிலுக்கு காரணமான கிரகமான சனி, மார்ச் 2025 , நடுபகுதியில் பதினொன்றாவது வீட்டிற்கு வருகிறார். அத்தகைய சூழ்நிலையில், அது ரிஷபம் ராசிக்காரர் வாழ்க்கையில் மரியாதையை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், வேலைத் துறையில் பதவி உயர்வு மற்றும் ஊக்கத்தொகை போன்ற பிற நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ü  அதாவது ஆண்டின் இரண்டாம் பாதி, அதாவது ஏப்ரல் 2025 க்குப் பிறகு தொழில் முன்னேற்றத்தைப் பொறுத்தவரை மிகவும் சாதகமாக இருக்கும்.

ü  கடின உழைப்பு மற்றும் முயற்சியின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைப் பெற முடியும். மேலும் தொழிலில் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும். இதன் காரணமாக தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். 2024 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு உங்கள் தொழிலில் பெறும் வெற்றி விகிதம் மிக அதிகமாகவே இருக்கும். இது இவர்களின் கடின உழைப்பும் ஒரு காரணம் எனலாம். சாதகமாக இருக்கும்.

ü  வேலை தேடுபவர்களுக்கு மார்ச் 2025 க்குப் பிறகு புதிய வேலை கிடைக்கும். அதுவும் மிக திருப்தியானதாக தோன்றலாம். புதிய வேலையில் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும்.

ü  ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் பத்தாம் வீட்டில் இருப்பார் மற்றும் குரு ராசியில் அமைந்திருப்பார்.இந்த நிலை இந்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு, பணித் துறையில் வலுவாக முன்னேறி வெற்றியை அடைய செய்யும் .

ü  மேலும் இது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மற்றும் பணி வேலைத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் .

ü  மார்ச் மாத இறுதியில் பதினொன்றாவது வீட்டிற்கு சனியால் மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். அவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் நல்ல வெற்றியைகிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும் மற்றும் சம்பள உயர்வுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும்.

ü  ஆனால் மே மாதத்தில் ராகு பத்தாம் வீட்டில் நுழைவதால் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த வித அவசரமும் அல்லது குறுக்குவழியும் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் எந்த வகையான சதித்திட்டத்திலும் ,ஒரு பகுதியாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ü சக ஊழியர்களில் சிலர் இவர்களை பார்த்து போட்டி அல்லது பொறாமை கொண்டவர்களாக இருந்தாலும், இது இவர்களின் வேலையில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. செயல்களுக்கு ஏற்ப வேலையில் நல்ல பலன்களைத் தொடர்ந்து பெறுவார்கள். வேளையில் மாற்றம் விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு மிக சாதகமாக இருக்கும்..


குடும்ப வாழ்க்கை



ü ரிஷப 2025 ராசி பலன் படி குடும்ப வாழ்க்கைக்கு நன்றாகவே இருக்கும். ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் சற்று கடினமாக இருக்கும்.

ü ஆனால் மே மாதத்தின் பாதியில் இருந்து நான்காம் வீட்டிற்கு கேது பகவான் வருவதால் கஷ்டம் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கேதுவின் பெயர்ச்சியால் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். எனவே கட்டாயம் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்கத்தைப் பேணு வேண்டும்.

ü இந்த ஆண்டு குடும்பத்தில் புதிய விருந்தினர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு குழந்தை பிறப்பு அல்லது திருமணமான உறுப்பினரின் திருமணம் போன்ற அழகான தற்செயல் நிகழ்வுகள் இருக்கும்.

ü மே மாத குரு பெயர்ச்சி குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவை ஆழப்படுத்த உதவியாக இருக்கும்.மேலும் உங்களின் ஆளுமை அனைவராலும் ஈர்க்கப்படும்.

ü இந்த வருடம் ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பான நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவார்கள்.

ü மே 2025 காலகட்டத்தில் குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏப்ரல் 2025 குடும்பத்தில் ஈகோ தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.

ü 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வரும் காலம் ரிஷப ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு சிறந்தது காலமாகும்.

ü திருமண வயதை அடைந்து திருமண முயற்சியில் ஈடுபட்டிருந்தால் இந்த ஆண்டு நல்ல பலனைத் தரும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை குரு முதல் வீட்டில் இருந்து உங்கள் ஐந்தாம் மற்றும் ஏழாவது வீட்டைப் பார்க்கிறார். திருமணத்திற்கு சாதகமான சூழ்நிலைகள் இது உருவாக்கும்.

ü என்றாலும் பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பெயர்ச்சி ஆவது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ü பொதுவாக இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை, வியாபாரத்திற்காக குடும்பத்தை விட்டு வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார்கள். புதிய பொருள் சேரும். எண்ணங்கள் நிறைவேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பொறுப்புடன் நடப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் நிலையறிந்து நடந்து கொள்வார்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறு அமைப்பும் உண்டாகலாம்.


நிதி நிலை (பொருளாதாரம்)



ü 2025 ஆம் ஆண்டில், ரிஷப ராசிக்காரர்களின் நிதிநிலை என்று பார்க்கும் சாதகமான பலன்களைத் நடக்கும் என்று சொல்லாம்.

ü சனி பதினோராவது வீட்டில் மார்ச் மாதம் பெயர்ச்சி ஆகிறார். மேலும் மே 2025க்குப் பிறகு குருவின் பெயர்ச்சியும் சாதகமாக இருக்கும். எனவே வாழ்க்கையை செல்வம் நிறைந்ததாக மாற்றும்.

ü என்றாலும், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதாவது ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதினொன்றாம் வீட்டில் ராகு பகவானும் நிதி நிலைமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்குவார்

ü மார்ச் 2025 முதல் வருமானம் மெதுவான வேகத்தில் அதிகரிக்கும். மே 2025 யில் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலையை பலப்படும். எனவே இவர்கள் கணிசமான அளவு பணத்தை சேமிக்க முடியும். பெரிய முதலீடு செய்ய விரும்பினால், மே 2025 க்குப் பிறகு செய்யலாம். நல்லது சிறப்பாக நடக்கும்.

ü ரிஷப ராசிக்காரர்ளுக்கு ,நிதி விஷயங்களில் , 2025 ஆம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் சாதகமான பலன்களைத் தரும்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு, பொருளாதாரச் சவால்கள் குறையும் மற்றும் நிதி ஆதாயமும் உண்டாகும். செல்வத்தை குவிப்பதில் வெற்றி பெறலாம் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் நிதி ஆதாயம் கிடைக்கும்.

கல்வி - படிப்பு



ü 2025 ஆம் ஆண்டின் மே 2025க்குப் பிறகு ரிஷபம் ராசி மாணவர்களுக்கு கல்வியை பொறுத்தவரை சிறந்த காலம் என்று தான் சொல்ல வேண்டும். சனி மற்றும் குரு, இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டில் கல்வித் துறையில் இவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

ü என்றாலும் இந்த ஆண்டு மார்ச் வரை கல்வியில் வெற்றி பெற படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். என்னேரால் எதைப் படித்தாலும் நினைவில் இருக்காது.

ü உயர்கல்வி படிக்க விரும்பும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, மே 2025 க்குப் பிறகு சாதகமாக இருக்கும். மே மாதத்திற்கு முன் உயர்கல்வி சம்பந்தமாக எடுக்கும் எந்த முடிவும் சில பிரச்சனைகளை உண்டாக்கும் எனவே கவனம் அவசியம். இந்த காலகட்டத்தில் கவனம் செலுத்தும் திறன் சற்று பலவீனமாக இருக்கலாம்.

ü ஆண்டின் தொடக்கத்தில் நான்காம் வீட்டில் சனியின் தாக்கமும், பிற்காலத்தில் கேதுவின் தாக்கமும் இருப்பதால் மனம் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டியிருக்கும். அதாவது, அமைதியாக இருந்து படிப்பில் கவனம் செலுத்தினால், இந்த ஆண்டு மிகச் சிறந்த வெற்றிகள் அடைய முடியும்.

ü பொதுவாக ரிஷப ராசி மாணவர்கள், இந்த ஆண்டு பிடித்த பாடங்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் போட்டித் தேர்வுகளில் பயிலும் மாணவர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்கும்.

ü கேது ஐந்தாம் வீட்டில் இருப்பதால், ஆண்டின் தொடக்கத்தில் இருப்பதால் மாணவர்கள் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ü என்றாலும் இந்த ஆண்டின் பிற்பாதியில் கேது நான்காம் வீட்டில் நுழையும் போது,கல்வி பிரச்சினைகள் குறையும் மற்றும் இவர்களால் கல்வியில் அதிக கவனம் செலுத்த முடியும்.

ü சிலர் படிப்பிற்காக குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.

ஆரோக்கியம்



ü ரிஷபம் ராசி பலன் 2025 யின் படி, 2025 ஆம் ஆண்டு ஆரோக்கியத்தின் பார்வையில் பார்த்தால் சாதகமாக இருக்கிறது எனலாம்.

ü இந்த ஆண்டு பெரிய அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக மார்ச் மாதத்திற்குப் பிறகு சனி உங்கள் லாப வீட்டில் பெயர்ச்சிக்கும் போது ஏற்கனவே ஆரோக்கிய ​​பிரச்சினைகளில் உள்ளவர்களுக்கு அந்த பிரச்சனை குறையும் குறையும்.

ü ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் வரை சனி நான்காம் வீட்டில் பார்வை பெறுவதால் இதயம் அல்லது மார்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த வருடம் மார்ச் வரை சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும் மார்ச்க்கு பிறகு நாள்பட்ட மற்றும் நீர்க்கட்டி நோய்களை அகலும்.

ü என்றாலும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு கேதுவின் தாக்கம் தொடங்கும். எனவே, அந்த காலகட்டத்திலும் சிறிய முரண்பாடுகள் தொடரலாம். ஆனாலும் பெரிய பிரச்சனைகள் எல்லாம் குறையும் என்பதால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குருவின் அனுகூலம் இவர்களின் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்துவதற்கு உதவார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி முன்பை விட வலுவாக இருக்க செய்வார்.

பரிகாரங்கள்



ü பசுவிற்கு உங்களால் முடிந்தளவில் பழம், கீரைகள் கொடுக்கலாம்.

ü சனி பெயர்ச்சி அல்லது குரு பெயர்ச்சி அல்லது ராகு கேது பெயர்ச்சி ஆகும் நாட்களில் கோவிலுக்கு சர்க்கரை தானமாக கொடுப்பது நல்லது.

ü முடிந்தால் ஏதாவது வெள்ளியில் நகைகளை அணிந்து கொள்ளவது மிகவும் நல்லது.

ü சிவபெருமானை வணங்குவது மற்றும் லலிதா சஹஸ்ர நாமம்த்தை படிப்பது அல்லது கேட்பது உங்கள் ஆன்மீக பலத்தை அதிகரிக்க உதவும்.

ü கால பைரவர் அஷ்டகத்தைக் படிப்பது அல்லது கேட்பது உங்களையே நீங்கள் நன்றாக உணர உதவும்.

மேஷ ராசி வருட பலன்கள் - 2025

Contents

பொது பலன்கள்.... 1

தொழில்... 1

குடும்ப வாழ்க்கை........ 2

நிதி நிலை (பொருளாதாரம் ). 2

கல்வி - படிப்பு. 3

ஆரோக்கியம்... 3

பரிகாரங்கள்.... 3

 

பொது பலன்கள்

ü  மேஷ ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் ராசி பலன் படி, இந்த ஆண்டு சராசரியான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மார்ச் மாதம் வரை சனியின் சிறப்பு அருளால் பல்வேறு விஷயங்களில் நல்ல பலன்களைப் பெற முடியும். இதற்குப் பிறகு, சற்று ஏழரை சனி ஆரம்பிப்பதால் சற்று பலவீனமாக தான் இருக்கிறது என்றாலும் இருப்பினும், வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல பலன்களைப் பெறலாம்.

ü  மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் 2025 யில் தொடங்கும் ஏழரை சனி இவர்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். எளிமையான வார்த்தைகளில், நன்மைகளும் உண்டு அதுபோல் செலவுகளும் இருக்கும். இவர்களின் மனம் ஆன்மீகப் பணியில் ஈடுபடும். மனதில் நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்கள் வரும்.

ü  மேஷ ராசிக்காரர்களின் மிகப்பெரிய பிரச்சனை மனசு சம்மந்த பட்ட பிரச்சனை தான் இந்த வருடம் இருக்கும் எனலாம்.

ü  மேஷ ராசி இளம் வயதினர்கள் தங்கள் வேலையில் அதிக மன அழுத்தத்தை உணர்வார்கள். மேலும் அதிக வேலை அழுத்தம் காரணமாக இந்த ஆண்டு சற்று குழப்பமும், நிம்மதின்மையும் உண்டாக வாய்ப்பு உள்ளது. என்றாலும் தொழில் மற்றும் வேலையில் செலவுக்கு ஏற்ற வருவாய் இருக்கும்.

தொழில்

ü  மே 14ம் தேதி நடக்க இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு, குரு மேஷ ராசிகார்ர்களின் நிதிப் பக்கத்தை வலுவாக வைத்து இருக்க உதவுவார் என்று சொல்லாம். இந்த ஆண்டு வியாபாரத்தில் சிறப்பாக இருக்கும் இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கவனமாக அவசியம். மார்ச் மாதத்திற்குப் பிறகு பன்னிரண்டாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி ஆவதால் சிலருக்கு சிரமங்களை உருவாக்கலாம். இருப்பினும், தங்கள் பிறந்த இடம் அல்லது வீட்டை விட்டு விலகி சென்று தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் ஓரளவுக்கு திருப்திகரமானவே இருக்கும்.

ü  வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களும் நல்ல பலன்களைப் பெற முடியும், மற்றவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். கவனம் அவசியம். மேலும் தொலைத்தொடர்பு துறைகள், கூரியர் சேவைகள் மற்றும் பயணம் தொடர்பான அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மே மாதத்திற்குப் பிறகும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

ü  புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், விரும்பிய இடத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடின உழைப்புக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ü  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு காதல் மற்றும் சுய புதிய வாய்ப்புகளை நன்றாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தின் வாய்ப்புகள் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை

ü  வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். அதே நேரத்தில், ஒருவருக்கொருவர் உறவுகளைப் பேணுவதும் முக்கியம். காதல் விவகாரங்களின் இந்த ஆண்டு ஓரளவு சுமாராக தான் இருக்கலாம்.

ü  மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு ஐந்தாம் பார்வையில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும்போது திருமண வாய்ப்புகளை உருவாக்குவார். காதலலில் இருப்பவர்கள திருமணம் செய்ய விரும்பினால் , இந்த ஆண்டு குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற முடியும்.

ü  தனிமையில் இருப்பவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை அடையாளம் காணலாம். என்றாலும் மே மாதத்திற்குப் பிறகு ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் உறவுகளில் சில சிரமங்களை உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.

ü  இந்த ஆண்டின் ஆரம்பம் இவர்களுக்கு வாழ்க்கையில் குடும்ப மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும்.

நிதி நிலை (பொருளாதாரம் )

ü  நிதிநிலை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் 2025 ஆம் ஆண்டில், மேஷ ராசிக்காரர்கள் சராசரியை விட சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ü  2025 ஆம் ஆண்டில் சேமிப்புகள் ஓரளவு பலவீனமாக இருக்கலாம். என்றாலும்,வருமானத்திற்கு வாய்ப்பும் நன்றாக இருக்கும். எனவே ஆண்டு முழுவதும் நிலையான நிதி நிலையை பராமரிக்க முடியும். செலவுகள் அதிகமானாலும் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நிதி நிலை இருக்கும். இடம் இருப்பவர்கள் வீடு கட்ட விரும்பினால், முயற்சி செய்வதன் மூலம் அதைச் செய்ய முடியும். என்றாலும் புதிதாக எந்த ஒரு பெரிய சாதனையும் ஏற்பட வாய்ப்பில்லை.

ü  பொதுவாக நிலம், கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற விஷயங்களில் ஆண்டு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை.

கல்வி - படிப்பு

ü  பொதுவாக மே மாதத்தின் நடுப்பகுதி வரை உயர்கல்விக்குக் காரணமான குருவின் நிலை சாதகமாக இருப்பதால் இக்காலத்தில் படிப்பின் நிலை சிறப்பாக இருக்கும்.

ü  இதற்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியே படிக்கும் மாணவர்களுக்கும் சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான கல்வியைப் பெறும் மாணவர்களுக்கும் மாஸ்காம் அல்லது தொலைத்தொடர்பு தொடர்பான பாடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் நல்ல பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

ü  மாணவர்களும் இந்த ஆண்டு அதிக ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.

ü  பொதுவாக ஏப்ரல் மாதத்திற்கு முன், உயர்கல்வி படிக்க முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ü  வெளி நாட்டில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மாணவர்கள் தொடர் முயற்சிகளின் மூலம் வெற்றி பெறலாம்.

ü  பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

ஆரோக்கியம்

ü  ஏழரை சனி ஆரம்பிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கட்டாயம் வேண்டும். கால் சம்மந்த பட்ட வலிகள் வர வாய்ப்பு உள்ளது.

ü  இந்த வருடம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய வருடம் ஆகும்.

ü  யோகா, தியானம், உடற்பயிற்சி செய்யவும். அடிக்கடி தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்கு வர வாய்ப்பு உள்ளதால் மனதை ஒருநிலை படுத்த வேண்டும்.

ü  இந்த வருட கடைசியில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதாவது மலச்சிக்கல், அஜீரணம் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உணவு சம்மந்த பட்ட விசயத்தில் கவனம் அவசியம்

ü  குடும்பத்தினர் உடல்நலனில் மேஷம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய மருத்துவ பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ü  உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

பரிகாரங்கள்

ü  சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள். அல்லது முதியோர் இல்லங்களுக்கு தொண்டுகள் புரியலாம்.

ü  செவ்வாய் கிழமை தோறும் அனுமனை வணங்க எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

ü  முடிந்த அளவு சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ü  துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ü  வியாழக்கிமை தோறும் லட்டுகளை பிரசாதமாக கொடுக்க தொழில் இருந்து வரும் அழுத்தம் குறையும் .