மிதுன ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!
பொது பலன்கள்
ü இந்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு ,, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். கடவுள் மீதான பக்தி அதிகரிக்கும். கடின முயற்சி இருக்கும். பண வரவு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. என்றாலும் ஓரளவு பண வரவு இருக்கும். மற்றபடி நன்றாகவே இருக்கும்.
ü இந்த வருடம் வரும் குரு பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு இந்த பெயர்ச்சி சாதகமானது என்று கூற முடியாது. என்றாலும் குருவின் பார்வைகள் இவர்களுக்கு சிறந்த பலனையே தரும்.10ம் வீட்டிற்கு வரும் சனி பெயர்ச்சியால் இந்த ஆண்டு சராசரி பலன்களை பெறலாம்
ü இந்த வருடம் வரும் குரு பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு இந்த பெயர்ச்சி சாதகமானது என்று கூற முடியாது. என்றாலும் குருவின் பார்வைகள் இவர்களுக்கு சிறந்த பலனையே தரும்.10ம் வீட்டிற்கு வரும் சனி பெயர்ச்சியால் இந்த ஆண்டு சராசரி பலன்களை பெறலாம் .
ü கர்ம சனியால் தொழிலில் அசுர வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. ஆனலும் வேலை பளு அதிகமாக இருக்கும்.
ü எதிர்பாரா முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் எனலாம்.வேலை, சொந்த தொழிலில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.
ü கல்வியில் நல்ல ஏற்றம்உண்டும். பணப் புழக்கம் கடந்த வருடத்தை விட சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
ü புதிய வாகனத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். பழைய வாகனத்தை வாங்கும் போது, வாகனத்தின் ஆவணங்கள், நிலை போன்றவற்றை கவனமாக ஆய்வு செய்வது நல்லது.
ü நிலம் மற்றும் கட்டிட விஷயங்களில், இந்த ஆண்டு சாதகமாக இருக்காது.
ü சனி, தார்மீக வணிக நடவடிக்கைகளில் இருந்து வெற்றிகரமான விளைவுகளை தருவார் என்றாலும் வாகன வசதியைப் பொறுத்தவரை சற்று குழப்பத்தை தான் தருவார்.
ü சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனை இருந்தாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இந்த வருடம் இருக்கும் எனலாம்.
ü மார்ச் 2025 இன் இரண்டாம் பாகத்திலிருந்து சனியின் பெயர்ச்சி மிக முக்கியமான நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.
ü 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்களின் ஆண்டாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளில், குறிப்பாக தொழில், உறவுகள், மற்றும் ஆரோக்கியத்தில் முக்கியமான மாற்றங்கள் காத்திருக்கின்றன.
ü இந்த ஆண்டில் திறமைகளை பரிசீலித்து புதிய உயரங்களை அடைய திறம்பட செயல்படுவார்கள். சவால்கள் இருந்தாலும், அவற்றை சமாளிக்கும் முந்தைய அனுபவம் இவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ü நண்பர்களின் ஊக்கம், இவர்களின் முயற்சிகளுக்கு புதிய உற்சாகத்தை தரும். மனநிலையை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு முடிவையும் ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி உறுதி.
தொழில்
ü பத்தாம் வீட்டிற்கு வரும் சனியால் தொழில் நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் சிறந்த வாய்ப்புகளை வழங்கும், ஆனால் அது சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இது வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும்.
ü குரு பெயர்ச்சியின் காரணமாக சிலருக்கு வேலையில் மாற்றம் அல்லது வேலையில் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். வேலை மாற்றத்தை ஏற்கும் முன் அதன் பின் விளைவுகளை யோசித்து ஏற்கவும்.
ü மிதுன ராசிக்காரர்கள் 2025 புத்தாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் தங்களின் வேலை, சொந்த தொழிலில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.
ü என்றாலும் வேலை பளு சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைக்க வேண்டிவரும். ஆனாலும் இந்த உழைப்பை யாரும் பாராட்டப்பட மாட்டார்கள், இதன் காரணமாக சிலர் விரக்தியடைவார்கள். என்றாலும் ஆகஸ்ட் 2025க்குப் பிறகு வரும் காலம் இந்த சூழ்நிலை மாறி நிம்மதி பெருமூச்சு விடலாம்.
ü குரு ஐந்தாம், ஏழாவது மற்றும் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் ் தொழில் துறையில் ஆன்சைட் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் வேலையில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் முடியும்.
ü முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால், மிதுன ராசிகாரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின் அடிப்படையில் சற்று முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ü பொதுவாக கர்ம சனியால் தொழிலில் அசுர வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது.எதிர்பாரா முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் எனலாம் .
ü புதிய வியாபாரம் தொடர்பான யோசனைகள் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த தொழிலைத் தொடங்கும் வாய்ப்பும் உருவாகும்.
ü இந்த ஆண்டில் வரும் ராகு பெயர்ச்சியால், கடின காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும்.
ü நிர்வாகத் திறன் மேம்பட்டு, தொழிலதிபர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோருடன் அறிமுகம் கிடைக்கும்.
ü கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறந்தாக இருக்கும்.
குடும்ப வாழ்க்கை
ü இந்த ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சராசரி பலன்களைப் பெறுவார்கள்.
ü என்றாலும் குடும்ப உறவுகளில் நிறைவையும் புத்துணர்வையும் காணலாம். புதிய உறவுகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைக்கும். நீண்டகால நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உருவாகலாம்.
ü குரு பெயர்ச்சியால் குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பாதிக்கும். குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஈகோ ஏற்படலாம். இதன் காரணமாக மகிழ்ச்சியான குடும்ப சூழ்நிலையை பராமரிக்க முடியாமல் போகலாம்.
ü குருவின் பார்வையின் காரணமாக காதிலில் இருப்பவர்களுக்கு காதல், கல்யாணத்தில் முடியும் அமைப்பும் உண்டு. திருமண வயதை அடைந்து, தொடர்ந்து திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு மிகவும் நன்மை பயக்கும்.
ü அதே வேளையில், திருமண வாழ்வில் சனிப்பெயர்ச்சி பாதிப்புகள் வலுவாக இருக்காது. சனியின் பார்வை 7ம் வீட்டில் விழுவதால் சின்னச் சின்ன விஷயங்களில் குழப்பத்தை உண்டாக்கும்.
ü மேலும் காதலர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் அல்லது சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது.
ü மிதுன ராசிக்காரர்கள் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை தயக்கமின்றி பேசுவது நல்லது, இல்லையெனில் அவர்கள் குடும்பத்தில் கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
ü எல்லா கிரக நிலைகளை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு பொதுவாக திருமணத்திற்கு நன்மை பயக்கும் ஆண்டு எனலாம். மேலும் திருமண வாழ்க்கைகயானது சராசரி அல்லது சராசரி விட சிறந்த நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
நிதி நிலை - பொருளாதாரம்
ü ஏழாவது வீட்டின் அதிபதியான குரு முதல் வீட்டில் அமர்வதால் நல்லது அல்ல. இதனால் பணப் பற்றாக்குறை தொந்தரவு வர வாய்புகள் அதிகம் என்றாலும் குருவின் பார்வையால் 2025 ஆண்டு, நிதி நிதி நிலையை பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானமான ஆண்டாக தான் இருக்கும் எனலாம்.
ü இந்த ஆண்டு மே மாதம் வரை செலவுகள் அதிகமாக தான் இருக்கும். மே 18, 2025 முதல், ராகு மூன்றாமிடத்திலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் பெயர்ச்சி ஆவாது நிதிநிலை சாதகமாக இருக்கும்.
ü 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பெரிய முதலீட்டைச் செய்யத்திட்டம் இருந்தால், அது இவர்ளுக்கு நல்ல வருமானத்தைத் தரும்.
ü பொதுவாக 2025ல் நிதி விவகாரங்களில் பலவிதமான விளைவுகளை மிதுன ராசிகாரர்கள் எதிர்பார்க்கலாம்.
ü சொத்து சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருந்தால் நல்லது.
ü இந்த ஆண்டை பொறுத்தவரை தொழில் முதலீடு செய்யலாம் ஆனால் வண்டி வாகனங்கள், வீடும் இடம் ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கை வேண்டும். என்றாலும் புதிய வீடு, வாகனம் கவனத்துடன் வாங்கலாம்.
ü நேர்மறையான அணுகு முறைகள் இவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
கல்வி - படிப்பு
ü 2025 மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவானின் பார்வைமிதுன ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருக்கும்போது, கல்வியைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் எனலாம்.
ü மிதுன ராசி, மாணவர்களுக்கு பாடங்களில் தெளிவு கிடைக்கும். பெரியோரின் ஆலோசனைகள் மாற்றம் உண்டாக்கும். ஆரோக்கியம் மேம்படும், நண்பர்களால் சில சவால்களை எதிர் கொள்ள வேண்டிவரும்.
ü விளையாட்டு துறையில் உள்ள மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவார்கள்.
ü மிதுன ராசிக்காரர்களின் செயல்பாடுகள் படிப்பில் சிறப்பாக இருக்கும் மற்றும் கல்வியை தொழில் ரீதியாகச் செய்து வெற்றி பெறுவார்கள். மேலும், வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும்.
ü கல்வியில் நல்ல ஏற்றம் உண்டு. என்றாலும் மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
ü ராசியில் குரு இருப்பது நல்லது அல்ல இருப்பினும், குரு பகவான், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை காட்டும் மாணவர்களுக்கு கட்டாயம் நன்மையை கொடுப்பார்.
ü மருத்துவத்துறையில் தொடர்புடைய மாணவர்கள் எல்லா வகையான தேர்விலும் வெற்றி பெறுவார்கள். கல்லுரி படிக்க விரும்பும் மிதுன ராசி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
ஆரோக்கியம்
ü மிதுன ராசி பிறந்தவர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் வரை சிறப்பாக இருக்கும்.
ü கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிரகப் பெயர்ச்சி சற்று சிறப்பாக இருக்கும். என்றாலும் குருவின் சஞ்சாரம் ஆண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கும். குரு பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. உணவில் கவனம் தேவை.
ü பொதுவாக, சனியின் பெயர்ச்சியும் சாதகமான பலன்களைத் தரும்; இருப்பினும், ஏற்கனவே மார்புப் பகுதியில் பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு சற்று சிரமம் கொடுக்கும் எனலாம் .
ü மேலும் சிலருக்கு கர்ம சனயின் காரணமாக , குறிப்பாக செப்டம்பர் மாதம் முதல் உடல் நல பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கவனம் அவசியம்.
ü குரு ராசிக்கு வருவதாலும், மேலும் புதனும் குருவும் பகை என்பதாலும் சிலருக்கு உடல் பருமன் பிரச்னை, சளி, இருமல் போன்ற பிரச்சனை இருக்கும்.
ü இந்த ஆண்டை சுகாதாரக் கண்ணோட்டத்தில் ஓரளவு சிறப்பாக இருப்பதாலும், குருவால் சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனை வந்து வந்து போகும். கவனம் அவசியம்
பரிகாரங்கள்
ü சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்./span>
ü முடித்தவர்கள் ஒரு முறையானும் கும்பகோணம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வர வேண்டும். /span>
ü புதன் கிழமைதோறும் சிவபெருமானை வணங்கி, விநாயகப் பெருமானுக்கு துர்க்கை அர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்./span>
ü ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனை வழிபட்டால், தொழிலில் உள்ள தடைகள் நீங்கி, சுப காரிய முயற்சிகள் கைகூடும். /span>
ü முடிந்தால் வெள்ளியால் நகை அணியலாம். மேலும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம்./span>
ü குருக்கள், துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு சேவை செய்யலாம். இது மன அமைதி ஏற்படுத்துவதுடன், வாழ்வில் சிறந்த முன்னேற்றமத்தை கொடுக்கும்.