மீன ராசி வருட பலன்கள் - 2025

மீன ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü மீன ராசியை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு வரும் சனி மற்றும் குரு பெயர்ச்சிகள் சாதாகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்றாலும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ü குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். வேகத்தை விட விவேகம் முக்கியம் என்பதை உணர்ந்தால் அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

ü சில எதிர்பாராத செலவுகள் வரும் மேலும் பணவரவில் ஏற்ற இறக்கத்தை சந்திக்க வேண்டி வரும். நண்பர்கள் மூலம் சிறிய விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.

ü ஏப்ரல் 2025 முதல், ஜென்ம ராசியில் சனியின் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சதிகளில் சிக்க நேரிடும். எனவே இந்த சவாலான கட்டத்தில் கட்டாயம் ஆன்மீகத்தை வலுப்படுத்த வேண்டும்.

ü பொதுவாக மீன ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு சாரசரியை விட சுமாராகவே இருக்கும். கவனம் அவசியம். இந்த சனி பெயர்ச்சியால் இந்த வருடம் சில பல பாடங்களை சனி பகவான் சொல்லி கொடுப்பார்.

ü குடும்ப விவகாரங்களை நெருக்கமானவர்களிடம் கூட பகிர வேண்டாம். தாய், தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் கவனத்துடன் ஈடுபடுவது சிறந்தது.

ü வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். வேலையில் இருக்கும் இளம் வயதினருக்கு சாதகமற்ற சூழல் நிலவும் என்றாலும் 6ம் வீட்டுக்கு வரும் கேதுவால் பாதுப்பான அமைப்புகள் உண்டாகும்.

ü மீன ராசிக்காரர்கள் 2025 புத்தாண்டில், உங்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் சில மாற்றங்கள் சந்திக்க நேரிடும். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழலும், கருத்து மோதல், மன கசப்பு என இருக்கும். அதே சமயம் சொந்த வளர்ச்சி தொடர்பாக புதிய வாய்ப்புகளும், அதுகுறித்த சாத்தியக்கூறுகளும் உண்டு.

ü மீன ராசிகாரர்களின் காதல் வாழ்க்கையில் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் சிறிய தவறான புரிதல்கள் இருக்கலாம்.

ü இந்த ஆண்டு பிற்பகுதியில் வீடு மற்றும் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் தவறான அல்லது பொருத்தமற்ற வாங்க நேரிடும். கவனம் அவசியம்.

ü என்றாலும் ஆண்டின் முதல் பகுதி நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான விஷயங்களில் சற்று சிறப்பாக இருக்கும்.



தொழில்



ü மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரும் சனி பெயர்ச்சியால், இந்த ஆண்டு மீன ராசிக்காரர்கள் தொழில் துறையில் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல.

ü இருப்பினும், மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் வீட்டிற்கு வரும் சனி இவர்களின் பொறுமையை சோதிக்கும். இந்த காலகட்டத்தில், சிலருக்கு தொழில் மாற்றம் மற்றும் சிலருக்கு வெளிநாட்டிற்கு வேலை செல்லும் அமைப்பும் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் மனநிறைவின்மையால் வேலை மாறுவதைக் காணலாம்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு நான்காவது வீட்டிற்கு வரும் குரு, பத்தாம் வீட்டை பார்ப்பதால், தொழில் பிரச்ச்னைகளை சமளிக்க முடியும். இதன் விளைவாக, தொழிள் சற்று சாதகமானதாக இருக்கும். என்றாலும் சனியின் பார்வையின் பார்வையும் 10ம் வீட்டை பார்த்தால் சாதகமற்ற நிலையும் உண்டாகும்.

ü மேலும் சனி பகவான் 13 ஜூலை 2025 முதல் 28 நவம்பர் 2025 வரை வக்ர நிலையில் இருப்பதால் தொழில் துறையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இந்த நேரத்தை தொழிலுக்கு சாதகமானதாகக் கூற முடியாது.

ü மேலும் வியாபாரம் செய்பவர்கள் மிக கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ü அதே நேரத்தில், மே மாதத்திற்குப் பிறகு ஆறாம் வீட்டில் கேதுவின் பெயர்ச்சியால் தொழில் சற்று இவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ü வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற வாதங்களையும், கருத்துகளையும் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

ü வர்த்தக பணிகளில் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவுகளை எடுப்பது நல்லது. சிலருக்கு அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்கும். கடின உழைப்பும், சிந்தனையும் முன்னேற்றத்திற்கு உதவும்.

ü வணிக திட்டங்கள் சீர் குலையும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் வழிநடத்துவது அவசியம். இருப்பினும், காலப்போக்கில், நிதி நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் எழும்.

ü பணியிடத்தில் உங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம். அதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். சுய-கற்றல் மற்றும் மன வலிமையை உருவாக்க இந்த வருடம் உதவும்.

ü எதிர்மறை எண்ணம் தவிர்க்க வேண்டும். பொறுமையாகவும், நெகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை



ü மீன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாதம் வரை சனியின் மூன்றாம் பார்வையால் இரண்டாவது வீட்டில் இருப்பதால் குடும்ப உறவுகளை பலவீனப்படுத்தலாம். பிறகு பிரச்சினைகள் படிப்படியாக முடிவடையும்.

ü பொதுவாக தற்போது வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இது மேலும் தொடரும் என்று தான் சொல்ல வேண்டும். அனுசரித்து செல்வதும், வாழ்க்கைதுணையின் கருத்துகளையும் காது கொடுத்து கேட்பது மற்றும் வாழ்க்கைதுணையிடம் ஒளிவு மறைவு இன்றி பேசுவது ஆகியவற்றால் உறவை வலுபடுத்த முடியும்.

ü பெண்களுக்கு உடன்பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் உறவின் ஒற்றுமை குறையாது. மனதில் புதிய சிந்தனைகள் மற்றும் புதிய ஆசைகள் உருவாகும். மேலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும், ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தவும்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு குடும்ப விவகாரங்கள் அல்லது வீட்டு விஷயங்களில் சில குழப்பங்கள் ஏற்படலாம். இதனால் இல்லற வாழ்க்கை கொஞ்சம் பலவீனமாக இருக்கும். எனவே குடும்ப விஷயத்தில் அலட்சியம் கூடாது.

ü சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால் டிசம்பர் மாதம் சிறந்த மாதமாக இருக்கும்.

ü பொதுவாக தொழிலில் கூட்டு முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும் என்றும் சொல்லாம். என்றாலும் புதிய முதலிட்டில் அகல கால் வைக்க வேண்டாம்.

ü இளம் வயதினருக்கு இந்த சனி பெயர்ச்சியில், சனி பணம் என்றால் என்ன என்ற பாடத்தை சொல்லி கொடுப்பார். யாரையும் நம்ப வேண்டாம்.

ü 30 முதல் 40 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சுப செலவுகள் வரும். அதற்கு உண்டான வரவுகளும் இருக்கும். மேலும் சிலருக்கு வெளியூர் பயணங்களை மெற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü 2025 ஆம் ஆண்டின் மீன ராசிக்காரர்களின் நிதி வாய்ப்புகள் கலவையான பலன்களை தான் தரும் என்று சொல்லாம்.

ü மேலும் கடந்த சில மாதங்களில் நிதி நிலைமை பாதிக்கப்பட்டிருக்கலாம். என்றாலும் இந்த புத்தாண்டின் ஆரம்பம் 3வது வீட்டில் உள்ள குருவால் சில நல்ல அதிர்ஷ்டங்கள் உண்டாகும். மேலும் வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

ü சிலருக்கு எதிர்பாரத பணவரவால் கடன்களை அடைக்கும் சூழ்நிலை உண்டாகும்.

ü ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு பல முறை யோசிக்கவும்.

ü சனி மற்றும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நிதி நிலையை பொறுத்தவரை அமைதியாகச் செயல்படவேண்டிய ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அவசரமும் அலட்சியமும் எந்த சமயத்திலும் கூடவே கூடாது.

ü சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால் டிசம்பர் மாதம் சிறந்த மாதமாக இருக்கும்.

ü பொதுவாக தொழிலில் கூட்டு முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும் என்றும் சொல்லாம். என்றாலும் புதிய முதலிட்டில் அகல கால் வைக்க வேண்டாம்.

ü இளம் வயதினருக்கு இந்த சனி பெயர்ச்சியில், சனி பணம் என்றால் என்ன என்ற பாடத்தை சொல்லி கொடுப்பார். யாரையும் நம்ப வேண்டாம்.

ü 30 முதல் 40 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சுப செலவுகள் வரும். அதற்கு உண்டான வரவுகளும் இருக்கும். மேலும் சிலருக்கு வெளியூர் பயணங்களை மெற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

கல்வி - படிப்பு



ü குரு 3ம் வீட்டில் இருப்பதால் மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமைகளை பெறுவார்கள். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மற்றும் எழுத்து, கட்டுரை போன்ற போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மேலும் செயல்பாடுகளில் வேகம் மற்றும் துரிதம் காணப்படும்.

ü என்றாலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, குரு நான்காவது வீட்டிற்குச் செல்கிறார். எனவே இந்த போக்குவரத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கும் பயனளிக்கும். வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களும் சாதகமான முடிவுகளை அடையலாம்.

ü மற்ற மாணவர்களுக்கு சராசரியை விட சற்று குறைவாகவே இருக்கும் எனலாம்.

ü சனி மற்றும் குரு பெயர்ச்சி காரணமாக மாணவர்களுக்கு அலட்சியம் அதிகரிக்கும். மேலும் ஆரோக்கிய தொல்லைகளையும் அனுபவிக்க நேரும். படிப்பில் முழு கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே திருப்திகரமான முடிவுகள் உண்டாகும்.

ü தகவல் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்

ü மே மற்றும் ஜூன் மாதங்கள் போட்டித் தேர்வுகளில் தகுதி பெறுவதற்கும் வேலைகளைப் பெறுவதற்கும் சாதகமான மாதங்கள் எனலாம்.

ü ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவாரகள். அதாவது கற்பித்தல் பணியில் இருக்கும் நபர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

ü வெளிநாட்டில் ஆராய்ச்சி துறையில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சற்று சாதகமாகவே இருக்கும்.

ü ராகு, கேது பெயர்ச்சியால் புதிய துறைகள் சார்ந்த பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்து, திறமைகளை மேம்படுத்துவார்கள்.

ஆரோக்கியம்



ü மீன ராசியை பொறுத்தவரை,ஆரோக்கியம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த ஆண்டு சற்று சவாலான ஆண்டாகவே இருக்கும்.

ü சோம்பல் மற்றும் உணவு முறைகளில் ஏற்ற தாழ்வுகளால் உடல் நிலை பாதிக்க கூடும். கைகள், இடுப்பு அல்லது முழங்கால்கள் போன்ற பகுதிகளில் வலிகள் வரலாம்.

ü மேலும் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அல்சர் உபாதைகள் வரலாம்.

ü கவனத்துடன் இருப்பது மற்றும் சீரான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியம். அப்படி செய்யும் போது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும், குறிப்பாக சளி தொடர்பான பிரச்சனைகள் குறையும். காரசார உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

ü அதிக சிந்தனை மற்றும் மன அழுத்தம் தலைவலிகளை ஏற்படுத்தலாம், எனவே அவற்றை குறைக்க முயற்சிக்கவும். ஒழுங்கான உணவு மற்றும் போதுமான ஓய்வு கடைப்பிடிப்பது அவசியம். இதன்மூலம் மன அமைதியையும் உடல் நலத்தையும் மேம்படுத்த முடியும்.


பரிகாரங்கள்



ü வியாழக்கிழமை குரு பகவானையும், சனிக்கிழமை சனி பகவானையும் வழிபட வேண்டும்.

ü சனிக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

ü ராகவேந்திரர் வழிபாடு நன்மை தரும். மேலும் ஆரோக்கியத்தில் மேன்மை தரும்.

ü 2025ம் ஆண்டு சிறப்பாக இருக்க பைரவர் வழிபாடு மிகவும் சிறந்தது.

ü முடிந்தவர்கள் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டால், நினைத்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும்.

ü மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் வேண்டும்.

ü கடன் சுமை குறைய செவ்வாய் கிழமைகளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வந்தால் நல்லது.