-
இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு,சூரியன், பன்னிரண்டாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய் ஆறாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு துலா ராசிகாரர்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
-
எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு நிம்மதி, நிரந்தரமாகும். பொதுவாக துலாம் ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு சற்று சிரமமாக தான் இருக்கும். சில விரய செலவுகள், மருத்துவச் செலவுகள், ஏற்பட வாய்ப்பு உள்ளது
-
என்றாலும் பொதுவாக சனி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று இருப்பதால் அவரவர் கர்மாவுக்கு ஏற்றபோல் பலன்கள் ஏற்படும்
-
வார்த்தைகளில் நிதானம் இருந்தால், வாழ்க்கையில் வளம் பெறுலாம்
-
சிலருக்கு பணி சார்ந்த வெளி நாட்டுப் பயண வாய்ப்பும் ஏற்படும்.
-
இல்லத்தில் இனிமை இருக்கும் தம்பதியரிடையே இருந்த சச்சரவுகள் மறையும்.
-
குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனை கேட்டால் சுபகாரியங்கள் கைகூடும். வாரிசுகள் உடல்நலம் சீராகும்.
-
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமைகள் வெளிப்படும்
-
பெண்கள் யாரிடமும் கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுவது கூடாது.
-
அரசியலில் இருப்பவர்களுக்கு சில சண்டைகள், சச்சரவுகள், விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்கள் வரக்கூடும். கவலை வேண்டாம். பேச்சில் கவனம் செலுத்தவும்.
-
மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது முக்கியம். மிகவும் கவனமாக படிக்க வேண்டிய காலம்
-
இரவில் வெகுநேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள்.
-
வாகனத்தில் நிதானம் முக்கியம். தனியே வெகுதொலைதூரம் வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டாம்.
-
மேலிடத்திடம் பேசும்போது பணிவே நல்லது. யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசிக்கவும்
-
புதிய வாய்ப்புகளில் வீணாக பேதம் பார்க்க வேண்டாம்
-
பூமி சார்ந்த வர்த்தகங்களில் நிதானம் தேவை. சட்டப்புறம்பு விவகாரங்களுக்கு கனவிலும் சம்மதிக்க வேண்டாம்.
-
சுப விரைய செலவு ஏற்படும்
-
அடிவயிறு, முதுகு, நரம்பு, கண் உபாதைகள் வரலாம். தோல் அலர்ஜி, கால், பாதம், முட்டியில் கவனம் தேவை. பொதுவாக தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த துலா ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு அனுகூலமான காலமாக இருந்தாலும், சகோதரர், சகோதரிகள் வகையில் ஏதேனும் சங்கடங்கள், பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. அதனால் எல்லா இடத்திலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
-
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த துலா ராசிக்காரர்களுக்கு பொறுத்தவரையில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்றாலும், எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக உங்களின் வாக்கிலும், நகை, பணம் சார்ந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
-
விசாக நட்சத்திரத்தில் பிறந்த துலா ராசிக்காரர்களுக்கு பணம் சார்ந்த விஷயத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தட்டுப்பாடு அதிகம் இருக்கும். குழந்தைகளால் மன சங்கடம் ஏற்பட வாய்ப்புள்ளது.
-
குல தெய்வ வழிபாடு செய்வது அவசியம்.
-
திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவர் வழிபாடு செய்து வருவது நல்லது.
-
ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது தேய்பிறை அஷ்டமி திதியில் சரபேஷ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது நன்மை தரும்.
-
வைதீஸ்வரர் கோவில் தரிசனம் நல்லது.
-
அங்காளம்மனை வணங்க ஆனந்தம் சேரும்
நட்சத்திர பலன்கள்
பரிகாரம்