Showing posts with label மூலம். Show all posts
Showing posts with label மூலம். Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - தனுசு

 


தனுசு ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். தொழில் ஸ்தானம் (10ம்  வீடு), விரைய ஸ்தானம்(12ம்  வீடு), தனவாக்கு ஸ்தானம்(2ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இத்தகைய அமைப்பினால் உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். 
  • வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். 
  • அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். 
  • எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். 
  • அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். 
  • மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சல் வேண்டாம். 
  • செலவுகள் உண்டு.  செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்
  • குடும்பத்தில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி மிகவும் மகிழ்ச்சியான, இணக்கமான சூழல் நிலவும். ஆனாலும் விட்டுக்கொடுத்தல் முக்கியம்
  • அசையும் அசையா சொத்து சேரும். கடன் வாங்கி  அசையா சொத்துக்கள் வாங்கும் அமைப்பு சிலருக்கு  உண்டு. இது நல்லது தான் 
  • வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். 
  • பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
  •  ஆடம்பரத்திற்காக கையிருப்பை  கரைக்க வேண்டாம். 
  • பெண்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்களில் நிதானம்வேண்டும்
  • தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். 
  • வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.
  • அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 
  • பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது.
  • அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். 
  • சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். 
  • மாணவர்கள் தவறான பாதையில் போக வேண்டாம். எதிர்பாலரிடம் வரம்புடன் பழகவும். 
  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும்.  
  • கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். பண விசயங்களில் கவனம் தேவை.
  • உடல் ஆரோக்கியம் முன்பை விட முன்னேறும். என்றாலும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும்.
  • மேலும் அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். 

மூலம்

  • இந்த குரு பெயர்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும்.
  • பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. 
  • உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. 
  • விற்பனையில் லாபத்தை எதிர் பார்க்கலாம். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். 
  • பெற்றொர்கள், பெரியோர்களின்  சொல்படி நடப்பது நன்மை தரும். 
  • பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். 
  • எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம்.  நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். 
  •  காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம்

  • இந்த குரு பெயர்ச்சியால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். 
  • தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். 
  • கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். 
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். 
  • குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. 
  • கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 
  • பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். 
  • நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்

உத்திராடம் 1ம் பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். 
  • கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 
  • தெய்வ வழிபாடுகள் வெற்றி உண்டாகும். 
  • பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். 
  • மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 
  • நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். 
  • இவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். 
  • வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்

முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் மூலம்  கஷ்டங்கள் குறைந்து  மனதில் நிம்மதியை தரும் வியாழக்கிழமை தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட்டு வர வாழ்க்கை சுகமாகும்.

மூலம்

 நட்சத்திரம் - மூலம்


மூலம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 19 வது பிரிவு ஆகும். மூல நட்சத்திரப் பிரிவு விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் 9 நட்சத்திரங்களைக் கொண்ட மூலத்தின் ε, ζ, η, θ, ι, κ, λ, μ மற்றும் ν இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. மூலத்தின் சமஸ்கிரத பெயரான மூல (Mula) என்பது "மூலம்" அல்லது "வேர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வேர்களின் கட்டு" ஆகும்.

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும். தனுசு ராசியில் பூரண நட்சத்திரம் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும் என்பர். மூலம் நட்சத்திரத்தில் தான் அனுமன் மற்றும் ராவணன் பிறந்தார்கள். 

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

இடுப்பு, தொடை, நரம்புகள்

பார்வை

கீழ்நோக்கு

பாகை

240.00  & 253.20

தமிழ் மாதம்

மார்கழி

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

பெண் நாய்

பறவை

240.00 - 253.20

மரம்

பாலுள்ள மாமரம்

மலர்

அசோக புஷ்பம் (சிவப்பு)

தமிழ் அர்த்தம்

வேர்

தமிழ் பெயர்

குருகு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

சர்க்கரைவள்ளி வேர்

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

தயிர் வடை

தேவதை

அஷ்டதிக்பாலர்களில் வடமேற்குக்கு  அதிபதியான நிருதி

அதி தேவதை

ஸ்ரீஆஞ்சநேயர்

அதிபதி

கேது

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், அலி நட்சத்திரம்

உருவம்

அங்குசம் போன்ற வடிவத்தில் ஆறு  நட்சத்திரக் கூட்டமைப்பு

மற்ற வடிவங்கள்

அங்குசம்,சிங்கத்தின் வால்,பொற்காளம்,யானையின் துதிக்கை

மற்ற பெயர்கள்

அசுரர், இராக்கதர், அவுணர், கொக்கு, தேட்கடை, ஆனி

வழிபடவேண்டிய தலம்

சிங்கீயஸ்வரர்,  திருவள்ளுவர்

அதிஷ்ட எண்கள்

5, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

 குட்சா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

யே, யோ, பா, பீ

அதிஷ்ட நிறங்கள்

பழுப்பு, மஞ்சள்

அதிஷ்ட திசை

வடமேற்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், செவ்வாய்

அணியவேண்டிய நவரத்தினம்

வெண் ஓபல் (Opal)

அதிஷ்ட உலோகம்

பிளாட்டினம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அனுமன்

குலம்

இராட்சச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

கேது



கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் - கேது

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

கேது


1. நட்சத்திரங்கள்(Stars) : மகம், மூலம், அசுவனி
2. மொத்த திசை இருப்பு : 7 வருடம்
3. தானியம் (Grains) : கொள்ளு
4. புஷ்பம் (Flower) : செவ்வல்லி
5. நிறம் (Color) : சிவப்பு (red)
6. ஜாதி (caste): சங்கிரம ஜாதி
7. வடிவம் (Structure) : உயரமானவர்
8. உடல் உறுப்பு : கை , தோள்
9. உலோகம் (Metal) : துருக்கல்
10. மொழி(Language) : அந்நிய மொழிகள்
11. ரத்தினம் (Gems) : வைடூர்யம்
12. வஸ்திரம் : புள்ளிகள் (பல நிறங்கள்) உடைய சிவப்பு
13 தூப தீபம் : செம்மரம்
14 வாகனம் : சிங்கம்
15 மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
16. சமித்து : தர்ப்பை
17. சுவை (Taste) : உறைப்பு
18 பஞ்பூதம் : ஆகாயகிரகம்
19 நாடி : பித்த நாடி
20. திசை: வடமேற்கு
21. அதிதேவதை : கணபதி, சண்டிகேஸ்வர்
22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடங்கள்
23. தன்மை : சரக்கிரகம்
24 குணம் (Character) : தாமஸம் மகரம்
25 ஆட்சி : மீனம் உச்சம் : விருச்சிகம், நீசம் : ரிஷபம், மூல திரிகோணம் : விருச்சிகம்
(ராகு , கேதுக்கு சொந்த வீடு , உச்ச, நிச்ச வீடுகள் மற்றும் மூல திரிகோணம் கிடையாது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகிறது)
26 நட்பு வீடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
27 பகை வீடுகள்: கடகம், சிம்மம்
28 பார்வை : 7ம் மடடும்
29 பலன் தரும் காலம் : பிற்காலம் (பிற்கூற்றில்)
30. மாத்ருகாரகன் : மாதாமகாகாரகன் ( தாய்வழி அதாவது மாதர் வழி பாட்டன் வம்சம்)
31. தத்துவம் : அலி கிரகம்


12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் (First House) இருந்தால் :

மேலும் படிக்க ...