சனி பெயர்ச்சி- 2025- மகர ராசி


மகர ராசிக்கு ஏழரை  சனி தீர்ந்தது ... சகாய  சனி ஆரம்பம் ...இனி நல்லது தான் .. கொண்டாட்டம்

சகாய சனி என்றால் என்ன?

  • ஏழரை சனி பிடியில் இருந்து விடுபடுவதை அதாவது  சனி பகவான் 3ம் இடத்திற்கு செல்வதை தான் சகாய  சனி என்று சொல்வார்கள்.
  • இந்த சகாய  சனியில் ஏழரை சனி ஏற்பட்டு வந்த துன்பங்கள் விலகி, நல்ல பலன்களும், பல்வேறு இன்பங்களும் கிடைக்கும்.
  • நல்ல பலன்களை அள்ளித்தரக்கூடிய அமைப்பாக சனி பகவான் அமைந்திருப்பதற்குச் சகாய சனி என்பார்கள்.
  • எண்ணங்கள் ஈடேறுவதற்கும், நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தருவதாகவும் இருக்கும்.
  • குடும்ப உறவில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், சுப நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடக்கக்கூடிய அமைப்பாக இருக்கும்.
  • சகாய சனி இல்லங்களில் சுபநிகழ்ச்சிகளால் இன்பங்களை தரக்கூடியவர்.
  • மேலும் எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்று இழந்த பொருட்களை மீட்க வைப்பார்.
  • என்றாலும் 5 மற்றும் 9ம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளும், தந்தையாலும் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் ஏழரை சனியில் இருந்து விடுதலை என்பது தான் இந்த சகாய சனியின் சிறப்பு ஆகும்.
  • பொது கண்ணோட்டம்
  • மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியில் இருந்து விடுதலையாகக் கூடிய காலம். இனி உங்களுக்கு பொற்காலமாகத்தான் இருக்கும என்று சொல்லாம்.
  • எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணலாம். உங்கள் வாழ்வில் பல்வேறு அம்சங்களில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணலாம்.
  • மகர ராசி பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • குடும்பத்தில் தாய், தந்தை மற்றும்  சகோதரர்களுடனான பிரச்சனைகள் தீரும். மேலும்  வர வேண்டிய சொத்துகள்  பேசி சுமூகமான தீர்வு காண முடியும்.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் இந்த சனி பெயர்ச்சியின் நல்ல பலன்கள் 3 முதல் 4 மாதங்களுக்கு பிறகு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தைத் தரும்.
  • ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரை ஒரு வருடத்திற்கு குரு மகர ராசியின் 6வது வீட்டிற்குச் சென்றாலும், பெரிய தடைகள் எதுவும் இருக்காது. கவலை வேண்டாம்.
  • புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இப்போது ஒரு சிறந்த நேரம். ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை, குரு உச்சம் பெற்று சனியுடன் திரிகோணப் பார்வையில் சஞ்சரித்து, அதிர்ஷ்டத்தை பல மடங்கு பெருக்குவார்.
  • ஏழரை சனியால் இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து, நன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்து இருந்த தயக்கங்கள் நீங்கி, தெளிவான புரிதல் உருவாகும்.
  • என்றாலும் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலை புரிந்து செயல்படுவது முக்கியம்.
  • மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறைந்து, சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் ஊக்கமும், அவர்களுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான புதிய முயற்சிகள், முக்கிய மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாகும்.
  • வெளிநாட்டு பயணங்களில் தாமதம் ஏற்படலாம். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
  • ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை சனி வக்ர நிலையால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும். எச்சரிக்கை தேவை.
  • 3ஆம் இடத்தில் அமரும் சனி பகவான் மூலம் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தைரியம், வெற்றி, முயற்சியை குறிக்கும் இடமாக இவைகள் விளங்குகின்றது. மனதில் தைரியம் பிறக்கும். முயற்சிகள் கைக்கூடும்.
  • ஒட்டுமொத்தமாக, மகர ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையின் சிறந்த கட்டங்களில் ஒன்றில் நுழைகிறார்கள். எனவே  வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆக இந்த பெயர்ச்சியை  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப வாழ்க்கை

  • குடும்பத்திலிருந்து விலகிய மகர ராசிக்காரர்கள், மீண்டும் திரும்பி வருவதற்கான சூழல்கள் உருவாகும்.
  • காதல் வாழ்க்கை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • விருப்பமான உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது வீட்டுக்கு ராகு வருவதால் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், கவனம் அவசியம்.
  • சனி பகவான் ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளை பார்க்கிறார். எனவே இது பயணங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
  • குடும்ப வாழ்க்கையை பொறுத்தளவில் பிப்ரவர 2026 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
  • உங்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணங்களை இறுதி செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • மார்ச் 2026 வாக்கில் சிறிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆனால் விரைவில் விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  • காதலில் இருப்பவர்கள், குடும்பத்தாரின் ஆதரவுடன், நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்து கொள்ள இது ஒரு சிறந்த நேரம்.
  • ஆகஸ்ட் 2027 முதல் நவம்பர் 2027 வரையிலான காலத்தில் காதல் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைத் தரக்கூடும். எனவே இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
  • குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு  போன்ற நிகழ்வுகளால், குடும்ப சூழலில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
  • புதிதாக நண்பர்கள், முகம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மேலும் நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.
  • பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது நல்லது இல்லை. கவனம் அவசியம்.
  • இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வாழ்கையில் எதை நோக்கி செல்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். என்றாலும் பிடிவாதம் கொள்ளாமல் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • இந்த சனி பெயர்ச்சியில் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்கையை வாழும் நிலையை சனி பகவான் ஏற்படுத்தி தருவார்.

ஆரோக்கியம்

  • இந்த சனி பெயர்ச்சி பொறுத்த வரை உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
  • ராகு இரண்டாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆவதால் உணவு விசயங்களில் கவனம் அவசியம். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கல்லீரல், கொழுப்பு போன்ற உடல் உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மேலும் சிலருக்கு சிறுநீரக கல், பித்தப்பை கல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ஜூலை முதல் நவம்பர் வரை, வயிறு தொடர்பான நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் தந்தையையும் தாயையும் தொந்தரவு செய்யலாம். அதன் பின் காலம் நன்றாக இருக்கும்.
  • 2025 ஆண்டை பொறுத்தவரை நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும். மார்ச் 2026 ஆண்டை நெருங்கும்போது, சில சிறிய நோய் தாக்கங்கள் ஆரம்பிக்கும். கவனம் அவசியம்.
  • பொதுவாக இந்த சனி பெயர்ச்சி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்லாம்.
  • தொழில் மற்றும் நிதி நிலை
  • ஏழரை சனி முடிவுக்கு வருவதால், உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் செலவுகள் தடையின்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து, புதிய வேலை முயற்சிகள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறும்.
  • வேலையில்லாதவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். எதிரிகளால் உங்களை எதுவும் செய்ய முடியாது. தொழிலில் பெரிய ஒப்பந்தம் ஏற்படலாம்.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் நிலத்தில் முதலீடு செய்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் யோகம் உண்டு.
  • கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வியாபாரம் விஸ்தரிப்பு, புதிய வியாபார முயற்சிகள், வெளிநாட்டு தொடர்புகள் நிறைய கிடைக்கும். என்றாலும் சில ஆபத்தான முடிவுகளை எடுப்பீர்கள். சற்று கவனம் அவசியம்.
  • புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. அரசு விதிகளை பின்பற்றுவது நல்லது.
  • வியாபாரத்தை நவீனமயமாக மாற்றி, வேலைகளை திட்டமிட்டு செயல்படுவீர்கள். மேலும் விளம்பர யுக்திகளை சரியாகப் பயன்படுத்தி வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்களை விருப்பப்படியே அமையும்.
  • அரசியல் மற்றும் சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். தேவையற்ற செலவுகள் இருந்தாலும், வருங்காலத்தில் அதனால் ஆதாயம் கிடைக்கும்.
  • நிதிநிலையை பொறுத்து வரை திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கமிஷன், ஷேர் மார்க்கெட், தகவல் தொழில்நுட்பம், கனிணி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு பெருத்த நன்மைகள் ஏற்படும்.
  • நீண்ட காலமாக உயர் பதவி கிடைக்காதவர்களுக்கு உயர் பதவிகளில் அமரும் நிலை உண்டாகும். மேலதிகாரிகள் உடன் இருந்த மன கசப்புகள் முடிவுக்கு வரும்.
  • இந்த சனி பெயர்ச்சி தொழில் மற்றும் வேலை ரீதியாக நல்லது செய்யும். எனவே பயன்படுத்தி கொள்ளவும். தொழில் முறை வாழ்க்கையில், கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

  • இந்த சனி பெயர்ச்சியில் ஆரோக்கியம் சிறக்க ஹனுமான் சாலிசாவைக் கேட்கலாம்.
  • திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
  • சனி, புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேலை நல்ல மாற்றும் விரைவில் வரும்.
  • ஞாயிற்றுக்கிழமை தோறும் பத்ரகாளி வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும்.
  • சனிக்கிழமை விரதம் இருப்பது, அசைவ உணவு, மது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
  • இயன்றவர்கள் சனிக்கிழமை அன்று ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யலாம்.