சனி பெயர்ச்சி - 2025- சிம்மம் ராசி
சிம்மம் ராசிக்கு பஞ்சம சனி தீர்ந்தது ...அஷ்டம சனி ஆரம்பம் ...ஜாக்கிரதை!
அஷ்டம சனி என்றால் என்ன?
- ஒரு ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி பகவான் இருக்கும்போது அஷ்டம சனி ஏற்படுகிறது. அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள்.
- அஷ்டம சனி காலத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது, மற்றவர்களை நம்பி ஏமாறும் நிலை வரலாம். மேலும் சட்டப்பூர்வ விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
- அஷ்டம சனியால் உண்டாகும் தீமைகளை பற்றி விவரமான செய்யுள் உண்டு.மேலும் அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி எனபார்கள். என்றாலும் அஷ்டம சனி எல்லாருக்கும் தீமை செய்யுமா? என்றால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
- பொதுவாக முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்ம வினைகளை பொறுத்து சனி பகவான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பது ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனிகாலத்தில் என்று தான் சொல்லுவார்கள்
- வயதிற்கேற்ப இந்த அஷ்டம சனி பிரச்சனைகளை தரும். அதாவது நான்கு வயது முதல் 15 வயது வரையுள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்கள் படிப்பில் சற்று மந்த தன்மை நிலவும்.
- 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களுடைய குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.
- குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுகள், உறவினர்களால் சில பிரச்சனைகள், மனதில் எப்போதும் குழப்ப நிலை, சிலருக்கு வேலை பறிபோகும், பணியிடத்தில் தொடர்ந்து பிரச்சனை, பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை இந்த இரண்டரை வருடத்தில் தரும் என்று சொல்வார்கள்
- சனியின் தீமைகள் ஒவ்வொரு ராசியையும் பொறுத்து மாறுபடும். சில ராசிகளுக்கு அவர் கெடுதல் செய்வதில்லை என்றும் ஜோதிடத்தில் கூற பட்டு உள்ளது.
- பொதுவாக சனிபகவான். ஏழரை சனி காலத்தை விட அதிகம் கஷ்டப்பட வைப்பது அஷ்டம சனி காலம் என்றும் சொல்வது உண்டு .
- சிம்ம ராசிக்கு அஷ்டம சனி எனவே சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும்.
பொது கண்ணோட்டம்
- கடந்த இரண்டு ஆண்டுகளில், கண்டக சனியால் ஆரோக்கியம் மற்றும் உறவுககள் பாதிப்பை சந்தித்து இருக்கும். இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு அஷ்டம சனி நடைப் பெறும். அதாவது சனி சிம்மத்திற்கு 8 ஆம் வீட்டிற்குச் செல்கிறார்.இது நல்லது அல்ல. இந்த பெயர்ச்சி வாழ்க்கையின் பல்வேறு நல்ல அம்சங்களை சீர்குலைக்கலாம். பயப்பட வேண்டாம். இந்த பிரச்சனை இரண்டரை வருடமும் நீடிக்காது.
- சனி படிப்பினையை தரும் நியாயமான ஆசிரியர். சனி பாதகம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் சரியான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். கட்டாயம் குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்கக் கூடும்.
- என்றாலும் அஷ்டம சனியால் உண்டாகும் சில நன்மைகளும் உண்டு. உங்கள் தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு இனிமையாகும்.உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள முடியும்.
- முதல் 6 மாதங்கள் கல்வியை பொறுத்து பெரிய பிரச்சனைகள் வராது. சிலருக்கு புகழ்பெற்ற பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைக்கும்.
- ஜூலை 2026 முதல், அஷ்டம சனிப் பெயர்ச்சியின் உண்மையான தாக்கத்தை உணர முடியும்
- பொதுவாக எல்லோருக்கும் அஷ்டம சனி பாதிப்பை ஒரே மாதிரி ஏற்படுத்தாது. ராசிகளுக்கு தக்கபடி மாறுபடும். அதில் சிம்ம ராசிக்கு கஷ்டம் கொஞ்சம் அதிகமாக கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
- இந்த சனி பெயர்ச்சியில் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது என்பதால் பிறரை நம்ப வேண்டாம்.
- சட்டப்பூர்வ விஷயங்களில் கவனம் தேவை. வழக்கு, மாறுதல் போன்ற சட்டப்பூர்வ விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது
- நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.பொறுமையாக இருந்து, நேர்மறையாக சிந்தித்து செயல்பட்டால் இந்த காலகட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து செல்லலாம்.
- மார்ச் 2025 பிறகு முதல் ஒரு ஆண்டு, முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி சிம்ம ராசியில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- இந்த நேரத்தில் ஜனன கால ஜாதகத்தில் நல்ல தச மற்றும் புத்திகள் இருக்கும் பட்சத்தில், திருமணம் கை கூடும். மேலும் வேலை மற்றும் தொழிலில் அணுகூலமான சூழ்நிலை உண்டாகும்.
- என்றாலும் கடன் உபாதைகள் மற்றும் குடும்ப உருப்பினரகளுடன் மனஸ்தாபம் ஆகியவை உண்டாகும்.
- பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் புதிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த அஷ்டம சனியை பயன்படுத்த வேண்டாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
குடும்ப வாழ்க்கை
- இந்த அஷ்டம சனியில் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவது நல்லது.குடும்ப விஷயங்களில் அவமானம் ஏற்படலாம்.
- சனி தனது 7ம் பார்வையாக, இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வாக்கில் கவனம் அவசியம். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
- பூர்விக சொத்து விவாகாரத்தில் சில தாமதங்கள் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பக்குவமாகவும் அரவணைத்து செல்வது நன்மை தரும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது.
- பெண்கள் சுய தொழில் தொடங்குவது போன்ற விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
- வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப பொருளாதாரம் குறித்த விஷயங்களில் ரகசியம் பாதுக்காக வேண்டும்.
- செயல்திறனில் ஒரு விதமான சோர்வும் ஆர்வமின்மையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் சற்று கவனம் வேண்டும்.
- சம்மந்த இல்லாத விஷயங்களில் தலையிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- மேலும் விவாகரத்து வழக்கு மற்றும் குழந்தை சம்மந்த பட்ட வழக்குகள் இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு சாதக இருக்காது. என்றாலும் குரு 11ம் வீட்டுக்கு வருவதால் இந்த வருடம் சனி தாக்கம் வெகுவாக குறையும்
- குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காது. குடும்ப அரசியல் தலை தூக்கும். தூக்கமின்மை உண்டாகும்.
- ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை பொறுமையாக இருப்பது முக்கியம். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
- குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் போன்றவை வர வாய்ப்பு உள்ளது.
- திருமணம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் குரு பெயர்ச்சிக்கு பிறகு முயற்சி செய்யவும்.முக்கியமாக ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தை நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் செய்யும் அமைப்பு உண்டாகும்
- காதலர்கள் குறிப்பாக 2027 ஆம் ஆண்டின் இறுதியில் பல அதிர்ச்சிகரமான செய்திகளால் மனம் உடையும் சூழ்நிலை வரலாம். எச்சிரிக்கை அவசியம்
- இந்த சவாலான காலங்களில் உங்கள் துணையுடன் தொடர்பு மற்றும் புரிதலைப் பேணுவது மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளவும்
- மேலும் காதலை பொறுத்தவரை கண்மூடித்தனமாக நம்புவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே உறவை அமைத்துக் கொள்ளும் முன் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
- திருமணமான தம்பதிகள் தற்காலிக சவால்களை சந்திக்க நேரலாம். நினைத்து போல் எதுவும் நடக்காது.
- பொறுமையுடன் செயல்பட்டு, கருத்து வேற்றுமைகளை தவிர்க்கவும்.வாழ்க்கை துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
ஆரோக்கியம்
- ஏழாவது வீட்டில் இருந்த சனி பகவான் உங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை கொடுத்து இருப்பார். மேலும் சனியின் தற்போதைய சஞ்சாரம் அதிக மன அழுத்தம், பதட்டத்தை அதிக படுத்தும்.
- என்றாலும் குருவின் துணையால் உடல் நிலை பாதிப்பு இந்த வருடம் சற்று கட்டுக்குள் தான் இருக்கும். கவலை வேண்டாம்.
- உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக மூட்டு வலி, தலைவலி, தோல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தூக்கமின்மை, உணவு செரிமான கோளாறுகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
- உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஏதேனும் பழைய நோய் மீண்டும் தோன்றக்கூடும்.
- பயணத்தின் போதும், வாகனத்தை இயக்கும் போதும் கவனம் அவசியம்.
- சிறிய காயங்கள் கூட ழுமையாக குணமடைய நீண்ட காலம் எடுத்து கொள்லாம்.
- முறையான உணவை உட்கொள்வது, யோகா பயிற்சியை மேற்கொள்ளவது. அவசரமில்லாத வாகனம் இயக்குதல் ஆகியவை வலுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். மேலும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க முயற்சிசெய்யவும்.
தொழில் மற்றும் நிதி நிலை
- பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
- உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
- என்றாலும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகளும் பதவி உயர்வுக்கான சாதகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது
- மேலும் வெளி நாட்டில் வியாபாரம், வேலை, கல்விக்காக செல்ல முயற்சி செய்பவருக்கு எனது அருமையான காலம் எனலாம்.
- சிம்ம ராசி வியாபாரிகள் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். செய்யும் தொழிலில் புதிய திட்டங்களும் ஆர்வங்களும் உருவாகும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும்.
- பூர்விக தொழில் அதாவது தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
- உணவு தொழில்களில் இருப்பவர்கள் தரமான பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வரவினை மேம்படுத்தும்.
- கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மூத்த கலைஞர்களிடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறைந்து,மகிழ்ச்சியான செய்திகள் வரலாம்.
- சமூக பணிகளில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையுடனும் அமைதியுடனும் செயல்பட வேண்டும். தொண்டர்கள் இடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிறிய சவால்களை சந்திக்க நேரலாம். என்றாலும் இலக்கை அடைய முடியும். சற்று கடினமாக உழைக்க வேண்டும்.
- நிதிநிலையைப் பொறுத்தவரை ஒரு இலக்கை அமைத்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். கவனம் அவசியம்.
- பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தான் செய்ய வேண்டும். புதிய முயற்சிகளுக்கு இது சரியான நேரமாகத் தெரியவில்லை.
- மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
- நிதி சம்மந்தமாக யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது.
- குழப்பம், பயம் வேண்டாம். உங்களை நீங்களே செதுக்கும் காலம் இது என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
பரிகாரம்
- அமாவாசை அன்று குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு போடலாம்.
- முடிந்தவர்கள் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லாம் அல்லது கேட்கலாம்.
- சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள், மேலும் முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யலாம்.
- சிவ ஆலயத்திற்கு சென்று, சனி பகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்ய வணங்கி வரலாம். வாழ்க்கையில் உண்டாகும் பிரச்னைகள் குறையும். மேலும் சிவபெருமானை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர இன்னல்கள் ஓரளவு குறையும்.
- பைரவ அஷ்டகம் கேட்பது மற்றும் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் வலிமையையும் பெற உதவும்.
- திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை சென்று வணங்க தடைகள் நீங்கும்.