தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கன்னி

  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கன்னி ராசிக்கு எட்டாமிடத்தில் குரு, சூரியன், ஜன்ம ராசியில் கேது, ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு, புதன் சுக்கிரன் கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் படியும், மேலும் அடுத்து வரும் குரு பெயர்ச்சியின் படி இந்த ஆண்டு கன்னி ராசிகாரர்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.



  • மேலும் கன்னி ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு மிக மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும்

  • நீண்ட நாட்களாக உடல் நலப் பிரச்சினைகள், நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்

  • தொழில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து, நல்ல லாபம கிட்டும் . புதிதாக ஒரு தொழில் தொடங்க நல்ல காலகட்டமாக அமையும்.

  • குடும்பத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

  • ஜன்ம ராசியில் இருக்கும் கேதுவால் மனதில் இனம் புரியாத மனக்குழப்பம், கவலை இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் ஏற்படும்

  • மாணவர்களுக்கு பொறுத்த வரை நல்ல கல்வி ஆண்டாக இருக்கும். உயர்கல்வியில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும், சாதக சூழல் நிலவும்.

  • பெண்களுக்கு மிகவும் அனுகூலமான பலன் கிடைக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.

  • கன்னி ராசிக்காரர்களுக்கு சித்திரை முதல் பாக்ய ஸ்தான குருவாக 9ஆம் வீட்டில் வருவார் மேலும் ஆறாம் வீட்டில் இருக்கும் சனி நல்லதை தர போகிறார்.

  • ராசியில் உள்ள கேதுவின் மீது குருவின் பார்வை கிடைப்பதால் மிக நல்ல ஆண்டு எனலாம் மேலும் தைரியம் அதிகரிக்கும்

  • குழந்தை பாக்கியம் உண்டு , இரண்டாவது குழந்தைக்கு முயர்ச்சிப்பவர்க்கும் நினைத்து நிறைவேறும்

  • திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்காது. என்றாலும் கணவன் மனைவியுடன் வாக்குவாதம் கட்டாயம் வேண்டாம்

  • குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். வண்டி, வாகனம் யோகம் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும்.

  • உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சூரிய நமஸ்காரம், யோகா போன்றவற்றை செய்யலாம். உணவு விஷயத்தில் சுயக்கட்டுப்பாடு தேவை.

  • புதிய பணி மாறும் முன் நன்கு யோசித்து முடிவெடுத்தல் வேண்டும். அசையும், அசையா பொருட்சேர்க்கை ஏற்படும். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.

  • ஆரோக்கியத்தில் குதிங்கால், கண்கள், வயிறு உபாதைகள் வரலாம்.

நட்சத்திர பலன்கள்

  • உத்திரம் பாதம் 2,3,4 நட்சத்திரத்தில் பிறந்த கன்னி ராசிகாரர்கள் எதிலும் சற்று பொறுமையை கையாள வேண்டும். அவசரப்படாமல் எந்த வேலையை பொறுமையாகச் செய்வதோடு, முடிவு எடுப்பதிலும் அவசரம் கூடாது. நலம் விரும்பிகளிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

  • அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த கன்னி ராசிகாரர்கள் பெரியளவிற்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றாலும், உடல் ரீதியாகச் சிறு சிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். இருப்பினும் அவை எல்லாம் படிப்படியாக குறைந்து, வாழ்க்கை சீரும் சிறப்புமாக மாறும்

  • சித்திரை பாதம் 1,2 நட்சத்திரத்தில் பிறந்த கன்னி ராசிகாரர்கள்நல்ல ஒரு காலகட்டமாக இருக்கும். நினைத்த விஷயங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். இருந்தாலும் நீங்கள் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உங்களின் உடல் நிலையிலும் அக்கறை செலுத்தவும். உங்களின் பேச்சுயில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்

  • அருகில் இருக்கும ஐயப்பன் கோயிலுக்கு சென்று வணங்குவது பாவங்களை போக்கும். பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

  • பிள்ளையார் பட்டி கற்பக விநாயகரை வழிபடுவது நல்லது

  • தேய்பிறை அஷ்டமிகளில் பைரவர் வழிபாடு செய்வதும், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை வழிபாடு செய்து வருவதும் மிக சிறப்பான பலனை தரும்.