தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - கடகம்



குரோதி வருடம் - 2024-  கடகம்  

கடகம் ராசிக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் , குரு, மூன்றாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் ராகு சேர்க்கை, எட்டாம் இடத்தில் சனி, செவ்வாய் என்ற கிரக நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பை வைத்து பார்க்கும் பொதுவாக அற்புதமான பலன்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு  அமைகிறது


குடும்பத்தில் நிம்மதியும், தம்பதியர் இடைய அன்யோன்னியமும் உருவாகும். திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு, குழந்தைப் பேறும் அமையும் 

 ஒன்பதாம் இடத்தில் இருக்க கூடிய ராகு உங்களுக்கு அதிஷ்டத்தையும், செல்வத்தையும் அள்ளிக் கொடுத்தாலும், தந்தை விஷயத்தில் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.  கடன் பைசல் ஆகும்.

பெண்களுக்கு யோகம் தரக்கூடிய காலமாகவும், முயற்சியில் நற்பலன்கள் கிடைக்கும் 

அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள மிக  அமைதியாக செயல்பட வேண்டும் 

கலை படைப்புத் துறையினருக்கு அரசு வழி பாராட்டு, பெருமைகள் கிட்ட வாய்ப்பு உண்டு. 

பல நன்மைகள் இருந்தாலும், அஷ்டம சனி நடப்பதால், உடல் நல பிரச்னைகள், நோய், நொடிகளால் பிரச்னை சந்திக்க வாய்ப்புள்ளது. அதனால் செலவுகள் சந்திக்க நேரிடும். மனதில் இனம்புரியாத சஞ்சலமும், பயம் ஏற்படும்.

ஆரோக்யத்தில் தோள்பட்டைவலி, முதுகுத்தண்டுவட உபாதை, தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். 
எதிலும் சோம்பல் இல்லாத முயற்சிகள் முக்கியம். அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. 

மேலதிகாரிகள் அனுமதி இல்லாத எந்தச் செயலையும் செயல்படுத்த வேண்டாம். உங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், உன்னதமான எதிர்காலம் உருவாகும். 

புதிய வாய்ப்புகள் சிலருக்குத் தேடிவரும். அதில் வறட்டு கௌரவம் பார்க்க வேண்டாம்.

யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம்

பங்குவர்த்தகம், சூதாட்டம், பந்தயங்களில் முதலீடு தவிருங்கள்.

இரவு பயணத்தை தவிர்ப்பது நலம்

நட்சத்திர பலன்கள் 


புனர்பூசம் 4ம் பாதத்தில் பிறந்த கடக ராசிக்காரர்களுக்கு  பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மனச்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும் காணலாம்.

பூச நட்சத்திரத்தில் பிறந்த கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மனஅமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருப்பது நல்லது.

ஆயில்யத்தில்  பிறந்த கடக ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலை உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது.
பரிகாரம் 

பரிகாரம்


துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும் 

நரசிம்மரைக் கும்பிடுங்கள். நல்லவை அதிகரிக்கும்.

வீட்டில் தினமும் தாமரைத் திரியில், நான்கு ஒரு முக மண் அகல் விளக்கு நெய் விட்டு ஏற்றி வர கெட்டது விலகும்