
இந்த வருடம் - 2025 ராகு , கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த பெயர்ச்சியில் ராகு, துலா ராசிக்கு 5ம் வீடான கும்பத்திற்கும், கேது, துலா ராசியின் 11ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.ராகு , கேது பெயர்ச்சி
பொது பலன்கள்
- இந்த பெயர்ச்சியால் , துலா ராசிகாரர்களுக்கு பல வகைகளிலும் திடீர் யோகங்கள் ஏற்படும். புது வாகனம், சொந்த வீடு அமையும்.
- இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலும் உங்களின் தேவைகளை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவுவாரகுள். தம்பதியினருக்கு இடையிலான தொடர்பு மேம்படும்.
- துலாம் ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைவாக குணமடையவும் வழிவகுக்கும். மேலும் புதிய சிகிச்சை செய்ய விரும்புவருக்கு இது சரியான நேரம் எனலாம். வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.
- அத்துடன் வருமானமும் நன்றாக இருக்கும்.. தடைபட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
- கடன், நோய், மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் விலகும். இரவு தூக்கமின்றி தவித்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றாலும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்ப பெரியவர்கள் மூலம் பண ஆதாயம் உண்டாகும். சமூகத்திலும், வீட்டிலும் மதிப்பு மரியாதை கூடும். பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயமும், லாபம் உண்டாகும். குழந்தைகள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் கல்வி சார்ந்து முன்னேற்றம் அடைவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் மூலம் பாக்கியம் பெறுவீர்கள்.
- திருமணத்திற்கு தயாராக இருக்கும் துலா ராசிகாரர்களுக்கு திருமணம் கை கூடும். காதலில் இருப்பவர்களுக்கு கல்யாண செய்யும் எண்ணம் இருந்தால், அது சிறப்பாக ஈடேறும்.
- இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக குடும்ப செலவுகளை அதிகமாகலாம். மேலும் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.
- தொழில் மற்றும் குடும்ப உறவுகளில் இதுவரை இருந்து வந்த மன உளைச்சல்கள் தீரும். பணியிடங்களில் இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் படிப்படியாக நீங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளை பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- உங்களின் அணுகுமுறை எதிர்கால வெற்றிக்கான வலுவான அடித்தளங்களுக்கு வழிவகுக்கும்.என்றாலும் யோசிக்காமல் முடிவெடுப்பது மற்றும் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது .
- அரசு ஊழியர்களுக்கு, இடமாற்றம் இருக்கலாம். சிலருக்கு வீடு மாற்றம், இட மாற்றம், உத்யோக மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும்.
- சிலருக்கு குடும்பத்துடன் சுற்றலா செல்ல வாய்ப்பு உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக பயணத்திற்கும் செல்லவும் வாய்ப்பு உண்டு.
- வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சில தாமதங்களை சந்திக்க நேரிடும். மனம் தளர வேண்டாம். ஆசிரியர் அல்லது அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் பெற்றோரின் ஆதரவு முக்கியமானது.
- பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்வதுடன், குரு பார்வையும் பெற்று இருப்பதால் துலா ராசிக்கு ராஜ யோகம் ஏற்படும். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் கிடைக்கும்.
- கடன் பிரச்னைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். ராகு கேது பெயர்ச்சியால் அதிகளவு பயன்பெற போவது துலாம் ராசியினர் தான்.
- நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணத்தால் மாற்றம் ஏற்படும். என்றாலும் வேற்று மொழி நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசிக்கு ராகு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிப்பதும் சில நல்ல பலன்களைத் தரும்.
உங்களின் அறிவுத்திறன் , ஞாபக சக்தி கூர்மையாக மாறும். எனவே தோல ராசி மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும்.
இந்த ராகு பெயர்ச்சியால் காதல் உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆனால் தேவையில்லாத பொய்களை சொல் வேண்டாம்.
இந்த நேரத்தில், உங்கள் மனம் பங்குச் சந்தையை நோக்கிச் செல்லக்கூடும் மற்றும் அதில் முதலீடு செய்வதன் மூலமும் லாபம் ஈட்டலாம். என்றாளுன் பந்தயம், சூதாட்டம், லாட்டரி போன்றவற்றியில் சிறப்பாக இருக்காது. கவனம் தேவை.
எந்த வேலை கடினமாக இருந்தாலும் அதை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ராகுவின் பெயர்ச்சியால் , சில நேரங்களில் உங்கள் மனதில் தவறான எண்ணங்கள் வரலாம். கவனம் தேவை
5ம் வீட்டில் ராகு வருவதால் , காதலில் உள்ளவருக்கு சிறப்பாக இருக்கும். மேலும் சிலர் காதலிக்க ஆரம்பிக்கலாம். மேலும் 5ம் வீட்டு ராகுவால் தவறான புரிதல் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையும், பரஸ்பர புரிதலும் கட்டாயம் தேவை.
துலாம் ராசிக்கு கேது பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சிக்கும். பதினொன்றாவது வீட்டில் கேதுவின் பெயர்ச்சி பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த கேது பெயர்ச்சியால் நன்மைகளு உண்டாகும்.
உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளை உருவாக்கும். உங்கள் ஆசைகளை வரம்பிற்குள் வைத்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி கட்டாயம் வெற்றி உண்டு.
கேது பெயர்ச்சி 2025 காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்காது, எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிய பிரச்சினை கூட உங்களுக்கு இடையே வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும். கவனம் அவசியம்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.
மூத்த உடன்பிறப்புகளுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரும்.
11 ஆம் வீட்டில் உள்ள கேது உறவினர்கள் அல்லது நட்புகளிடம் இருந்து சில பிரிவினைகள் வர வாய்ப்பு உண்டு.
இந்த காலகட்டத்தில் கடந்த கால முதலீடுகள் அல்லது பரம்பரை சொத்துக்களிலிருந்து எதிர்பாராத லாபங்கள் ஏற்படலாம்