தனுசு ராசி - குரு பெயர்ச்சி - 2025



இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு ராசி  மற்றும் நான்காவது வீட்டின் அதிபதி ஆவார். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போதைய பெயர்ச்சியில் ஏழாம் இடத்திற்கு வருகிறார்.

பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரும். என்றாலும்  சிலருக்கு அயல்பநாட்டு வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம், கவலை வேண்டாம். அது உங்களின் நன்மைக்காக இருக்கலாம். பொறுப்புகளில் நேரம் தவறாமை முக்கியம்.

திருமண உறவு இனிமையாக இருக்கும். உங்களுக்கும் உங்களின் வாழ்க்கை துணைக்கும் இடையே இருந்த சச்சரவுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். பலகாலக் கனவுகள் நிறைவேறும்

குரு பெயர்ச்சி 2025 உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் உயர்வைக் காணலாம். உங்கள் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும்.

எந்த தொழில் செய்தால் அதிலும் நல்ல வெற்றியை பெறலாம்.அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும்.

அதேசமயம் புதிய பொறுப்புகளும் அதிகரிக்கும். வேலைகளை திட்டமிட்டு, நேரம் தவறாமல் செய்து முடிப்பது முக்கியம். மேலும் நீங்கள் மூன்றாம் நபர் விஷயத்தில்  தலையிட வேண்டாம்.

இந்த குரு பெயர்ச்சியினால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். சிலருக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.

அரசுத் துறையினருக்கு செல்வாக்கு உயரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் அதனால் ஆதாயமும் வந்து சேரும்.

செய்யும் தொழிலில் பிரச்னைகள் குறையும். என்றாலும்  புதிய ஒப்பந்தக்களில் அவசரம் வேண்டாம். பிறர் கட்டாயத்திற்காக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். சிலருக்கு திடீர்ப் பொறுப்புகள் திக்குமுக்காடச் செய்யும்.

பல வகையில் நன்மைகள் உண்டானாலும் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உங்களுக்கு கழுத்து, முதுகு, அடிவயிறு, இடுப்பு உபாதைகள் வரலாம். குல தெய்வ வழிபாடு அவசியம்.

அக்டோபரில் குரு எட்டாவது வீட்டிற்குச் செல்லும்போது, ​​நீங்கள் ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்களை அனுபவிக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து  சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆனால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். மேலும்  எதிர்களின் பலம்  அதிகரிக்கும். என்றலும் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வக்ர காலகட்டத்தில் குரு மீண்டும் டிசம்பரில் ஏழாவது வீட்டிற்குள் நுழைவார். தற்போது திருமண உறவுகளில் பரஸ்பர நல்லிணக்கம் இல்லாததால் தொந்தரவு ஏற்படலாம் மற்றும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது ஐந்தாம் பார்வை  தனுசு ராசியின் 9ம் வீட்டையும், ஏழாம்பார்வை   தனுசு ராசியின் ராசியை ,ஒன்பதாம் பார்வை 3ம் வீட்டையும் பார்க்கிறார். அதாவது தகப்பனர் ஸ்தானம் , உடல்  ஸ்தானம் மற்றும்  தைரிய  ஸ்தானம் பார்க்கறார்.

இந்த  குருபார்வை உங்கள் ராசியில் பதிவது விசேஷம். இந்த அமைப்பு உங்களுக்கு உன்னதமான பலன்கள்  அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். அதேசமயம் செயல்களில் நிதானமும் வாக்கில் இனிமையும் முக்கியம்.