மிதுன ராசி - குரு பெயர்ச்சி - 2025


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மிதுன ராசிக்கு 12 வீட்டில் இருக்கும்  குரு பகவான், ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் ,பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து தான் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முயற்சி  செய்யும் மிதுன ராசிகாரர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும்.  ஜன்மத்தில் குரு வந்தால், எல்லாமே சங்கடம்தான் என்று சொல்வது உண்டு . புதன், குருவின் நட்பு கிரகம். எனவே நட்பு வீட்டுக்கு வரும் குரு நல்லதையே செய்வார் என்று சொல்லாம். இந்த அடிப்படையில்  உழைப்புக்கு ஏற்ப உயர்வுகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

கல்வி பயிலும்ம் மாணவர்கள் நல்ல இலக்குகளை அடைவார்கள். மேலும் அதிகமாக கற்றுக்கொள்ளவும் விரும்புவார்கள்.  திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் குறைவாக இருக்கும், மேலும் பரஸ்பர நல்லிணக்கம் மேம்படும். இது திருமண இன்பத்திற்கு வழிவகுக்கும். நன்மை பயக்கும் வணிக வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இருக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க மற்றும் மதிக்கப்படும் நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். இதன் விளைவாக பொருளாதார வருவாய் அதிகரிக்கும் மற்றும் சமூக முன்னேற்றமும்  ஏற்படும்.

மேலும் 10 ம் வீட்டில் பெயர்ச்சியாகி இருக்கும் சனி பகவானும்  உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக லாபகரமானதாக இருக்கும். தொழிலில் பெரும் வெற்றி கிடைக்கும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில், எதிர்பாராத பல நல்ல செய்திகளை வரும்.

சிலருக்கு ஒரு புதிய வணிக ஒப்பந்தம் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். ஆன்மீக பயணங்களும் செல்லும் வாய்ப்பு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். குடும்ப வாழக்கையில் இருந்த, பிரச்சனை குறைந்து, குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர ஒற்றுமை உண்டாகும்.

என்றாலும் ஜென்ம குருவால் சில பிரச்சனைகளை குடும்பத்தில் பார்க்க நேரிடும்.அக்டோபர் மாதத்தில் குரு இரண்டாவது வீட்டிற்குச் செல்வதன் மூலம் பணம் தொடர்பான சிக்கல்கள் நீங்கும். செல்வம் சேரும்.   மற்றும் வேலையில் அதிக வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாகும். டிசம்பர் மாதத்தில் வக்ர நிலையில் உங்கள் ராசிக்கு குரு வருகையால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம் மற்றும் திருமண உறவுகள் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குரு பார்வையின் பலன்கள்



1ம் வீட்டிற்கு  அதாவது ஜென்ம ராசிக்கு  வரும் , குரு ,தனது 5, 7,ஒன்பதாம் பார்வையாக முறையே  5, 7,ஒன்பதாம்  வீடுகளை பார்க்கிறார். அதாவது புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமாகிய   தகப்பனர்  ஸ்தானம் பார்க்கிறார். இது மிகவும் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

இது  குழந்தைகளைப் பற்றிய மிக நல்ல  செய்திகளைக் கொண்டுவரும். குழந்தையைப் பெற விரும்புபவருக்கு , அவர்களின்  ஆசை நிறைவேறும்.  கல்விப் படிப்பில் வெற்றி கிட்டும்.

ஜென்ம குரு என்றால் உறவுகள் மேம்படும். எனவே உங்களின் மரியாதை அதிகரிக்கும். 7ம் வீட்டை குரு பார்ப்பதால் நெருங்கிய உறவுகளில் புரிதலையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும் காதல் உறவுகள் வலுப்படும்.வாழ்க்கை துணையுடன்நல்லுறவு இருக்கும்

இந்த குருவின் பார்வையால் நிலையான வருமான வளர்ச்சி உண்டு என்றாலும் பண வரவு சற்று திருப்திகரமாக இருக்காது. தொழில் முன்னேற்றங்கள் அல்லது புதிய கூட்டு  தொழில்  மூலம் நிதி வளர்ச்சி ஏற்படலாம். பணத்தை சேமித்தல், திட்டம் போட்டு செலவுகள் கட்டு படுத்தல் ஆகியவை மிகவும் முக்கியம்