இந்த வருடம் - 2025 ராகு , கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த பெயர்ச்சியில் ராகு, விருச்சிக ராசிக்கு 4ம் வீடான கும்பத்திற்கும், கேது, விருச்சிக ராசியின் 10ம் வீடான சிம்மத்திற்கு செல்கிறார்கள்.ராகு , கேது பெயர்ச்சி
பொது பலன்கள்
- இந்த ராகு கேதுவின் பெயர்ச்சி காரணமாக பலவிதத்தில் உங்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும். உங்கள் செயலில் அதிர்ஷ்டம் துணை நிற்கும். உங்கள் வாழ்க்கையில் சில போராட்டமான சூழ்நிலை இருந்தாலும் லாபம் அதிகமாக கிடைக்கும்.
- வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும்.
- இந்த பெயர்ச்சி உங்கள் உறவில் ஒற்றுமை ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. மேலும் உங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை காணப்படும்.
- உடன் பிறப்புகளுடன் உங்களில் உறவு சிறப்பாக இருக்கும். மேலும் தந்தையுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். என்றாலும் உரையாடல்களைத் தவிர்ப்பது நல்லது.
- 4 ஆம் இடத்தில் ராகு இருப்பதுடன் குரு பார்வையை ராகு பெறுவதால் பண சேமிக்கும் அளவுக்கு வருமானம் இருக்கும். எந்த துறையில் இருந்தாலும் அருமையான காலகட்டமாக இருக்கும்.
- பொதுவாக இந்த பெயர்ச்சியில் செல்வத்தை சேர்க்க முன்னுரிமை கொடுப்பிர்கள். முதலீடுகள் மூலம் நல்ல வருவாயைக் காணலாம்.
- செய்யும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
- உத்தியோக வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு வரும்.
- உத்தியோகத்தில் உங்களின் செயல் திறன் அங்கீகரிக்கப்படும். மேலும் பாராட்டும் கிட்டும்.
- உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் வயதில் முத்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்க கூடும். எச்சிரிக்கை தேவை.
- மேலும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், ஆனால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது.
- விருச்சிக ராசி மாணவர்களின் கல்வி திறன் சற்று மெதுவாக இருக்கும். தேர்வில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை. உங்கள் திறமையில் நீங்கள் சந்தேகம் கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு நான்காம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். எனவே இந்த ராகு பெயர்ச்சி, உங்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
- உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் மோதல்களைத் தவிர்த்து, தெளிவான தகவல்தொடர்பைப் பேணு வேண்டும்.
- தொழில் காரணமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரியும் சூழ் நிலை வரலாம்.எனவே குடும்ப உறுப்பினர்களிடையே இடைவெளி அதிகரிக்கலாம்.
- ரியல் எஸ்டேட் அல்லது முதலீடுகள் மூலம் நல்ல ஆதாயங்கள் உண்டு. என்றாலும் திடீர் நிதி முடிவு எடுக்க வேண்டாம்.
- செலவுகள் அதிகரிக்கும் எனவே சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
- சொந்த வீட்டில் இருப்பவர்களை காட்டிலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள, சற்று அதிகமான மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
- தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் உங்களுக்கு பலன்களை தரும். ஏதாவது ஒரு இடத்தில் கமிஷன் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் அமைப்புன் உண்டு எனலாம்.
- இந்த பெயர்ச்சியின் விளைவு காரணமாக, மார்பு சம்மந்த பட்ட தொற்றுகள் அல்லது பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
- குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தாலும் பரஸ்பர அன்பின் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.
- உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கேது கெடுக்கலாம்.அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
- இந்த கேது பெயர்ச்சியால் வேலை செய்பவர்களுக்கு மிக சிறப்பான நிலை உண்டாகும். பணியிடத்தில் சில மோசமான நிலைகள் வந்தாலும் உத்தியோகத்தில் நல்ல யோகம் உண்டாகும்.
- வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் விருப்பம் படி வேலை அமையாது. எனவே ஏமாற்றத்திற்கு உள்ளவீர்கள்.
- சொந்த வியாபாரம் செய்ய நினைக்கும் விருச்சிக ராசிகாரர்களுக்கு முயற்ச்சிக்கு ஏற்ப வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
- அதிகப்படியான உழைப்பைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவு முறைகளை பரமாரிக்க வேண்டும்.
- உயர்கல்வி அல்லது தொழில்முறை பயிற்சி கல்வியில் உள்ள விருச்சிக ராசி மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் எனலாம்