கும்ப ராசிக்கு ஜென்ம சனி தீர்ந்தது... பாத சனி ஆரம்பம்
பாத சனி என்றால் என்ன?
- ராசிக்கு 2ம் வீட்டில் சனி, பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை பாத சனி என்பார்கள்.
- பாத சனி காலத்தில் அஷ்டம சனி, ஜென்ம சனி போன்று கடுமையான பலன்கள் ஏற்படாது என்றாலும், அதிகம் பொருள் விரையம், உடல் நல பாதிப்புகள் மற்றும் மனச்சோர்வு அதிகம் ஏற்படும் காலமாக இருக்கும்.
- மேலும் பாத சனியில் காலில் அடிபட்டு நொண்டி நடக்க வைக்கும் என்றும் சொல்ல்வார்கள். இது அனைவருக்கும் பொருந்தாது.
- இரண்டாம் வீட்டில் சனி இருப்பதால் பேச்சினால் வில்லங்கம் உண்டாகும்.
- ஜென்ம சனி காலத்தில் பல பிரச்சனைகளை சனி தந்து இருப்பார். ஆனால் பாத சனி காலத்தில் பிரச்சனைகள் குறைந்தாலும் முழுமையாக விலகாது.
- பாத சனி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திருமண தாமதம் உண்டாகலாம். பண வரவு மந்த தன்மை காணப்படும்.
- எந்த செயல் செய்தாலும் பிரச்சனைகள் வரும் என்றாலும் இறுதியில் நன்மை உண்டாகும்.
- சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
- என்றாலும் மற்றவர்களுடைய ய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடதல் கூடாது.
பொது கண்ணோட்டம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து விட்டது என்பது மிக மகிழ்ச்சியான செய்தி எனலாம். ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனியில் நுழைகிறார்கள்.
- கடந்த 5 வருடத்தில் அனுபவித்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும் எனலாம்.
- வேலை இழந்தவரகளுக்கு வேலை கிடைக்கும். மேலும் பணிச்சூழலில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம்.
- குருவும் 5ம் வீட்டுக்கு செல்வதால் ஜூன் 2026 வரை நல்ல அதிர்ஷ்டங்களை அனுபவிக்க முடியும்.
- என்றாலும் ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரையிலான காலம், பல ஏற்ற தாழ்வுகளுடன் வாழ்க்கை பயணம் இருக்கும்., மேலும் பதற்றம் அதிகரிக்கும்.
- எனவே ஜூன் 2026க்குள், பணத்தை சேமித்து வைத்து கொள்ளவது நல்லது. எதிர்பார்ப்புகள் குறைந்தால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும்.
- இந்தக் காலகட்டத்தைக் கடக்க, ஆன்மீக பலத்தை அதிகரிக்க வேண்டும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
- நெருக்கமான உறவுகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உதவிகள் மற்றும் கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
- பங்காளிகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவுகளை எடுப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்
- உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உறவுகளை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளும் தெளிவுகளும் பிறக்கும்.
- தந்தை வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த இழுபறிகள் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
- ஏழரை சனி இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் சுப விரயங்கள் மற்றும் சுப செலவுகள் அதிகரிக்கும். இந்த செலவானது பிற்காலத்தில் சில ஆதாயங்களை கொடுக்கும்.
- தாராளமாக திருமணம் முயற்சி செய்யலாம். சிலா தாமதங்களை கொடுத்தாலும் நல்ல செய்தி வரும். சுப செலவு காலம் என்பதால் திருமணம கட்டாயம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புதிய இடம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டு.
- மனதில் இருந்த குழப்பங்கள், குறிப்பாக சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடுமாற்றங்கள், விரைவில் நீங்கி தெளிவு ஏற்படும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகி, உங்கள் உறவில் இனிமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களை பாதித்து வந்த தூக்கமின்மை பிரச்சனைக்குத் தீரும்.
குடும்ப வாழ்க்கை
- கும்ப ராசிகார்களின் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு என்பதால் தாராளமாக திருமணம் முயற்சி செய்யலாம். மேலும் உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எனவே பேச்சில கவனம் தேவை.
- மகன், மகள் திருமணம் நடைபெறும். பூர்வீகத்தில் இருந்த சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் விலகும்.
- குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை உங்களால் திருப்திபடுத்த முடியாமல் போகலாம். உறவுகளுக்கு இடையே சற்று அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
- திருமணத்திருக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு நல்ல பெயர்ச்சியாக தான் இருக்கும். எனவே துணையை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக அவசியம்.
- பிரிந்து இருக்கும் தம்பதிகள் கடந்தகால காயங்களை மறந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. கருத்து வேறுபாடுகளைக் களைந்து புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் சுமுக உறவை பராமரிக்கலாம்.
- ஜூலை 2025 முதல் குடும்பத்தில் நல்ல நிலை வரும். மேலும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025க்குள் நல்ல செய்தி வர வாய்ப்பு உண்டு.
- இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் அதிகமாக கடன் வாங்குவதை தவிர்த்து வேண்டும். சகோதர சகோதரிகளின் உறவு முறைகள் சுமுகமாக இருக்காது .
- புதிய வீடுகளை வாங்கி குடியேற இது சிறந்த நேரம் என்று சொல்லாம். வருகிற குரு பெயர்ச்சியால் ஜூன் 2026 வரை நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். என்றாலும் 2026க்குப் பிறகு சற்று மந்த நிலை ஏற்படுவதுடன் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். அத்துடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் குறையும்.
- பொதுவாக ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை பொறுமையாக இருப்பது முக்கியம். மேலும் குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிட வேண்டும்.
- இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
- இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை குடும்ப உறவுகளிடம் பொறுமையாக பேச வேண்டும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுவார்த்தைகளின் போது அமைதி காப்பது நலம். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுத்தால் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
- குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தனக்கு கீழ் உள்ளவர்கள் தானே என்று யாரையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.
- இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் தனம், வாக்கு, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
- என்றாலும் சனி பெயர்ச்சிக்கு பிறகு புத்துணர்வும், தைரியமும் கிடைக்கும். மனதில் தெளிவு கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்னைகள் விலகும்.
ஆரோக்கியம்
- 7ம் பார்வையாக 8ம் இடத்தை சனி பார்ப்பதால் தேவை இல்லாத உடல் உபாதைகள், சிறு விபத்துக்கள் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.
- இந்த பெயர்ச்சி அதிக மன அழுத்தம், பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் தூக்கத்தின் தன்மையை சீர்குலைக்கக்கூடும்.
- குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
- மார்ச் 2025 முதல் ஜூன் 2026 வரை சிறப்பாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மூல காரணத்தைக் கண்டு அறிய முடியும் மேலும் அறுவை சிகிச்சை தேவைபடுபவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவது நல்லது.
- ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை, உங்களுக்கு மட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். இது உங்களுக்கு பதற்றம் மற்றும் மனச்சோர்வை அனுபவிக்க நேரிடும்.
- கொழுப்பு, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவைக் கண்காணிப்பது நல்லது.
- இந்த சனிபெயர்ச்சியில், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
தொழில் மற்றும் நிதி நிலை
- உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொறுப்புக்களும் மூலம் புதிய அனுபவங்களும் கிடைக்கும். பணி மாற்ற விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
- பணி நிமிர்த்தமான ரகசியங்களை யாருடனும் பகிந்து கொள்ள வேண்டாம். பணி செய்யும் இடத்தில், உங்களுடன் இருப்பவர்களால் அவ்வப்போது சில நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு மறையும். மேலும் உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.
- பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். வேலைகள் மலை போல குவிந்து காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும்.
- உழைப்புக்கு ஏற்ற நற்பலன்களை அனுபவிக்க முடியும். தொழிலில் மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பவர்க்கு இது சிறந்த நேரம் எனலாம். என்றாலும் மாற்றத்தை ஏற்று கொள்ளும் முன் நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
- 10ம் பார்வையாக 11ம் இடமான தனுசு ராசியை சனி பகவான் பார்ப்பதால் தொழிலிலும், பணியிடத்திலும் தடை தாமதங்கள் உண்டாகும். பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் தாமதம் ஆகும்.
- மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தேர்வுகளில் வெற்றி அடையலாம். ஆராய்ச்சி படிப்பில் இருப்பவர்களுக்கு, இருந்து வந்த தாமதங்கள் நீங்கி எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். உயர்நிலைக் கல்வி மற்றும் முதுநிலை கல்வியில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
- கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பேச்சுக்களில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். என்றாலும் வெளியூர் மற்றும் வெளிநாடு வாய்ப்புகள் சற்று தாமதப்படும்.
- அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தொண்டர்களின் ஆதரவு கிடைத்தாலும் எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும் உடலில் ஒரு விதமான சோர்வுகளும் ஏற்பட்டு மறையும்.
- வியாபார விஷயங்களை சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
- வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
- வியாபாரம் செய்யும் கும்ப ராசிகாரர்களுக்கு தங்களுது வேலை ஆட்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
- விவசாய பணிகளில் உழைப்புக்கு ஏற்ப லாபங்கள் கிடைக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.
பரிகாரம்
- சனிகிழமை தோறும், ஹனுமான் சாலிசாவைக் கேட்பது ஆறுதலையும் உணர்ச்சி ரீதியான நிவாரணத்தையும் அளிக்கும்.
- முடிந்தால் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அபிஷேகத்திற்காக நல்லெண்ணெய் வழங்கவும்.
- நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரை கொடுக்கலாம்.
- தினமும் கணபதி மற்றும் அனுமனை வழிபட்டு வந்தால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். மேலும் சிவ வழிபாடு நல்லது.
- மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்யலாம்.
- திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்.