பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.
குடும்ப வாழ்க்கை (Family Life)
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவர்கள். குறிப்பாக தாயிடம் அதிக அன்பு செலுத்துவர்கள்.
நண்பர்கள் (Friends)
பல வருடங்கள் பழகிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மணிக்கணக்காகப் பேசினாலும் சொந்த விஷயங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர். சிலர், உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். பிள்ளைகளையும் வாழ்க்கை துணையையும் நண்பராகவே நினைப்பார்கள். மேலும் நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள்.
நட்பு நட்சத்திரங்கள் (Benefit Stars)
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்(Disbenefit Stars or Stars to Avoid)
பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்கார்களின் நடப்பை தவிர்க்கலாம்
தொழில் (Business)
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளில் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சுற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். எந்த வேலையில் ஈடுபட்டால் உங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவர்கள்.
சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்ப வராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தசா பலன்கள்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் தசை முதல் தசையாக வரும். சுக்கிரன் தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிரன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சுக்கிரன் தசை:
சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.
சூரியன் தசை:
இரண்டாவதாக வரும் சூரிய தசை காலங்கள் 6 வருடமாகும். இந்த தசையில் சிறு சிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.
சந்திரன் தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.
செவ்வாய் தசை:
அடுத்து வரும் நான்காவது செவ்வாய் தசை முன்னேற்றத்தை தரும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்
ராகு தசை:
ஐந்தாவதாக வரும் ராகு தசை 18 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும்.மாரக தசை என்பதால் எதிலும் கவனம் தேவை
பொது பரிகாரம்
பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மற்றும் மா மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்த்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்
பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:
திருமணம் பொருத்தம் பார்க்கும் போது
பொருந்தும் நட்சத்திரங்கள்:
பூரட்டாதி, புனர்பூசம், உத்திரம், ரேவதி, உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, அஸ்தம் ஆகும்
பொருந்தா நட்சத்திரங்கள்:
பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. பூசம் வேதை ஆகும்.
(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்!!