Showing posts with label Business. Show all posts
Showing posts with label Business. Show all posts

உத்திரட்டாதி தொடர்ச்சி

உத்திரட்டாதி- Uthrattathi / Uthra bhadrapada


பொதுவான குணங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சுவதில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மை பேசக்கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்தியசாலிகள். வெற்றிலை போடுவது மற்றும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். வெளி உலகுக்காகப் போலியாக வாழாத யதார்த்தவாதி. வேத, உபநிடதங்களில் கரைகண்டவர். நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டு விலகாதவர். இவர்களுக்குள் எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும். 

கல்வி சுமாராகத் தான் இருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவாகம் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கை வாழ்வார்கள்

குடும்ப வாழ்க்கை

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். வாழ்க்கை துணையிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவு பிரியர்களாக இருப்பார்கள்.  இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்..

 நண்பர்கள்:

உறவினர், நண்பர்களை உடையவர் எனலாம்.  மேலும் கற்றறிந்தவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள் நடுநிலைமை நடந்து கொள்வார்கள். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவி கேட்க மாட்டார்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவார்கள்.

 நட்பு நட்சத்திரங்கள் :

ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறு உதவி கூடசெய்ய மாட்டார்கள்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உதவியும், நன்மையும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் அந்த நட்சத்திரகார்களுக்கு செலவு செய்ய வேண்டியது வரும். உங்களுக்கு வரும் ஆதாயங்களில் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பங்கு தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கூடுதல் சுமையாகவே இருப்பார்கள். 

மிருகசீருடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரகார்களையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

தொழில்:

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், எந்த தொழில் செய்தாலும் விரைவில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள், குறிப்பாக உணவு தொழில் மிகுந்த பக்கபலமாக இருக்கும். மிக சிறந்த வளர்ச்சியைத் தரும். எனவே உணவு தொழில் செய்வதும், பயணங்கள் தொடர்பான தொழில் செய்வதும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில்கள், வழக்கறிஞர், ஆசிரியர், பேச்சை தொழிலாக செய்தல், உபன்யாசம், கதாகாலட்சேபம், ஜோதிடம், நீதிபதி, மருத்துவர், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், மூலிகை வைத்தியம்/ தகவல் தொழில்நுட்பம், பத்திரிகை துறை, ஊடகத் துறை, கலை இலக்கிய ஆர்வம், கலைத்துறை சார்ந்த நடிப்பு, பாட்டு, இசை போன்ற துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.

கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

உத்திரட்டாதி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சனி தசை:

சனி தசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கை, நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

புதன்  தசை:

இரண்டாவதாக வரும் புதன் தசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் நல்ல  ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக  அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.  

கேது  தசை:

மூன்றாவதாக வரும் கேது தசை சாதகமற்று இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்ற மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.

சுக்கிரன்  தசை:

அடுத்து வரும் 4வது தசை சுக்கிர தசை 20 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன்  தசை:

ஐந்தாவதாக தசை சூரியன் தசை ஆகும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு இருக்கும். சிலர் இதை மராக தசை என்று சொல்வதும் உண்டு. குரியன் நல்ல பலம் பெற்று இருந்தால் மிக சிறப்பான சூழ்நிலை அமையும்.


பொது பரிகாரம்:

உத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரம் உள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். 

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானத்தில் காண முடியும் 

செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிவது, வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குளம், கிணறு வெட்ட  இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.

 பொருந்தும் மற்றும்  பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது திருவாதிரை  நட்சத்திரத்திற்கு

 பொருந்தும் நட்சத்திரங்கள் :

ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள் :

பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

(குறிப்பு: மிக பொருந்தும்  நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

 சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் காமகா மாய வித்மஹே

       ஸர்வசித்யை ச தீமஹி

     தன்னோ தேனு ப்ரசோதயாத்


ரேவதி தொடர்ச்சி

 ரேவதி /  Revathi


பொதுவான குணங்கள்:

ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும்.எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.

 
ரேவதி நட்சத்திரம் குருவின் சொந்த வீடான மீன ராசியில் அமைகின்றது. இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்திற்குரிய அறிவாற்றலும் மிக சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை உணரக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.


அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் பெற்று இருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.

காதல் திருமணம் செய்வார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். எனவே திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்த்தது செய்வது நல்லது.

 நண்பர்கள்:

இவர்கள் ஆண்ணாக இருந்தால் பெண் நண்பர்களும் பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் வரம்பு மீறமாட்டார்கள். காதல் திருமணம் செய்பவராக இருப்பதால் நண்பர்கள் அதிகம். 

 நட்பு நட்சத்திரங்கள் :

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மிகவும் சிறந்த நண்பராக இருப்பார்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நல்ல நண்பராகுவதுடன்  குடும்பத்தில் ஒருவராகவும் இருப்பர்கள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் நன்மைகள் அதிகம் ஆகும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் எந்த அளவிலும் நன்மைகள் கிடைக்காது. பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களால் தொல்லைகளும், சிரமங்களும் ஏற்படும்

தொழில்:

முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.:

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

ரேவதி   நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் தசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன்   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதன் தசை:

புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும்  அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

கேது  தசை:

இரண்டாவதாக வரும் கேது தசை  7 வருட காலங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.

சுக்கிரன்  தசை:

மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.

சூரியன்  தசை:

அடுத்து வரும் நான்காவது தசை 6 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

சந்திரன்  தசை:

ஐந்தாவதாக வரும் சந்திர தசையும் சூரிய தசை போல் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

பொது பரிகாரம்:

ரேவதி  நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் இலுப்பை மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காண முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

ரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ரேவதி நட்சத்திரத்திற்க

பொருந்தும் நட்சத்திரங்கள் :

கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தாத நட்சத்திரங்கள் :

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. மகம்வேதை ஆகும்.

குறிப்பு:மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது

சொல்ல வேண்டிய மந்திரம்:

பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்

ச மீருத்யே வராபயோஜ்வயகரம்

ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.

திருவோணம் தொடர்ச்சி




 பொதுவான குணங்கள்

திருவோண நட்சத்திர அதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வள்ளலார் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பேசி பழகுவார்கள். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொறுத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளை விரும்பி அணிவார்கள்

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள். வாழ்க்கை துணைக்கு பயந்து நடப்பார்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள். செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் குறைவேயில்லை என்று சொல்லும்படி அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவர்கள். தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சுவார்கள்.

நண்பர்கள்

நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பதில் கவனம் தேவை.

நட்பு நட்சத்திரங்கள்

அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த ஆறு நட்சத்திரக்காரர் நண்பர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வார்கள். எந்த பிரதிபலனும் பாராமல், குடும்ப நலன் பேசுபவர்களாகவும், பொருளாதார உதவிகளை செய்பவர்களாகவும், சுக துக்கங்களில் பக்கத் துணையுடனும் இருப்பார்கள். நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்வதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை (மேஷம்) உத்திரம் (கன்னி) உத்திராடம் (தனுசு) மிருகசீரிடம் (மிதுனம்), சித்திரை(துலாம்) அவிட்டம் (கும்பம்) இந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டும்.

தொழில்

பொதுவாக இவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நிச்சயமாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதில் கூட்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என யாருடனாவது கூட்டாக தொழில் செய்வார்கள். மற்றவர்கள் வியக்கும் படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர் களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள்.

தசா பலன்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் தசையாக வரும். சந்திரன் தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சந்திரன் தசை:


இந்த தசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகள், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.


செவ்வாய் தசை:


இரண்டாவதாக வரும் செவ்வாய் தசை மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.


ராகு தசை:


மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.


குரு தசை:


நான்காவதாக வரும் குரு தசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்


சனி தசை:


ஐந்தாவதாக வரும் சனி தசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயர் உண்டாகும்.

பொது பரிகாரம்

திருவோண நட்சத்திரத்தின் தலவிருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசக்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. திருவாதிரை வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்


 

உத்திராடம் தொடர்ச்சி


 
பொதுவான குணங்கள்

உத்திராடத்தின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர். அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.

சமூக நலனுக்காக பாடுபடும் குணம் உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். வீண் விவாதத்துக்கு வந்தால், கொஞ்சம் கூட சளைக்காமல் அவர்களுக்கு பதிலடி தருவர்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பார்கள். அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்

உற்றார் உறவினர்களால் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.

நண்பர்கள்

எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். நண்பர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடுவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மூலம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், உத்திரம், விசாகம், கார்த்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது.

தொழில்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்றுக் தேர்ந்திருப்பார்கள். சமூகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாகக் கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். ராணுவத்தில் படை தலைமை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதாடும் வக்கீல் களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.

தசா பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தசை முதல் தசையாக வரும். சூரியன் தசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சூரியன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் தசை:


சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.


சந்திரன் தசை:

இரண்டாவதாக வரும் சந்திர தசை 10 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.

செவ்வாய் தசை:


மூன்றாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

 
ராகு தசை:


அடுத்து வரும் நான்காவது தசை ராகு தசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

 
குரு தசை:


ஐந்தாவதாக வரும் தசை குரு தசை. இந்த தசையில் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
அடுத்து வரும் சனி தசையும் குரு தசை போல் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.

பொது பரிகாரம்

உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும் இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திராட நட்சத்திரத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையைத் தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்து படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புது வேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், அஸ்தம், பூராடம் ஆகியவை பொருத்தமான நட்சத்திரங்கள் ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. புனர்பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

பூராடம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள் (Common 
Characteristics)

பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.

குடும்ப வாழ்க்கை (Family Life)

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவர்கள். குறிப்பாக தாயிடம் அதிக அன்பு செலுத்துவர்கள்.

நண்பர்கள் (Friends)

பல வருடங்கள் பழகிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மணிக்கணக்காகப் பேசினாலும் சொந்த விஷயங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர். சிலர், உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். பிள்ளைகளையும் வாழ்க்கை துணையையும் நண்பராகவே நினைப்பார்கள். மேலும் நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள்.

நட்பு நட்சத்திரங்கள் (Benefit Stars)

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்(Disbenefit Stars or Stars to Avoid)

பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்கார்களின் நடப்பை தவிர்க்கலாம்

தொழில் (Business)

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளில் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சுற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். எந்த வேலையில் ஈடுபட்டால் உங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவர்கள்.

சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்ப வராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தசா பலன்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் தசை முதல் தசையாக வரும். சுக்கிரன் தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிரன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சுக்கிரன் தசை:

சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.

 
சூரியன் தசை:


இரண்டாவதாக வரும் சூரிய தசை காலங்கள் 6 வருடமாகும். இந்த தசையில் சிறு சிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.

 
சந்திரன் தசை:


மூன்றாவதாக வரும் சந்திர தசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.

செவ்வாய் தசை:


அடுத்து வரும் நான்காவது செவ்வாய் தசை முன்னேற்றத்தை தரும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்

ராகு தசை:


ஐந்தாவதாக வரும் ராகு தசை 18 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும்.மாரக தசை என்பதால் எதிலும் கவனம் தேவை

பொது பரிகாரம்

பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மற்றும் மா மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்த்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பூரட்டாதி, புனர்பூசம், உத்திரம், ரேவதி, உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, அஸ்தம் ஆகும்

பொருந்தா நட்சத்திரங்கள்:


பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்!! 

கேட்டை தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினால் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் வசதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும். மேலும் கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். மன தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். கேட்டையின் நட்சத்திர அதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன்கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்களை செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும்.

செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுபவர்கள். அதே நேரத்தில் சில நேரங்களில், 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதற்கேற்ப கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்து விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமை பேசுவார்கள்.. சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவார்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல் சுயமாகத் தொழில் செய்து பணம் ஈட்டுவார்கள்.

நீர் நிலைகளில் குளிப்பது அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பது அதிக விருப்பம் கொண்டவர்கள். அடிக்கடி எதையாவது கொரித்து கொண்டே இருப்பர்கள் ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றி மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமாதானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர் களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர் களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறான ஒன்று


குடும்ப வாழ்க்கை

கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள் ஆதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன்கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள்.

வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்பு களிடையே நிறைய பாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

உறவினர்களால் மாற்றத்துக்கு உள்ளாகி வருத்தப்படுவார்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்க மாட்டார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகமானாலும் யாராவது ஒருவரிடத்தில் மட்டும் தான் நெருக்கமாக இருப்பார்கள். அதாவது நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர் களாகவும், பத்திரிகை நிருபர் களாகவும், மனோ தத்துவ நிபுணர் களாகவும், நடிகர் நடிகை களாகவும், கட்டிட காண்டிராக்டர் களாகவும், அழகு கலை நிபுணர் களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்ப்யூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.


தசா பலன்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை முதல் திசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


புதன் தசை:
புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடன் இருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலம் இழந்து இருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.
கேது தசை:
இரண்டாவதாக வரும் கேது தசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.
சுக்கிரன் தசை:
மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.
சூரியன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சூரிய தசை. இந்த தசை நடைபெறும் 6 வருடம் சூரியன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்
சந்திரன் தசை:
ஐந்தாவதாக வரும் சந்திர தசை 10 வருட காலங்கள். சந்திரன் நீசம் அடைந்தால் நல்லோர் நட்சத்திரம் ஏறி இருந்தாலும் நல்லோர் பார்வை பெற்று இருந்தாலும் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்.
6 வதாக வரும் ராகு தசை மாரக தசையாக கூறப்படுகிறது.


பொது பரிகாரம்

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்குகளை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

கார்த்திகை 2, 3, 4, அஸ்தம், மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. அஸ்வினி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பூவராஹாய வித்மஹே
வஜ்ர ருபாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்