Showing posts with label ஜியேஷ்ட்டா (Jyeshta). Show all posts
Showing posts with label ஜியேஷ்ட்டா (Jyeshta). Show all posts

கேட்டை தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினால் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் வசதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும். மேலும் கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். மன தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். கேட்டையின் நட்சத்திர அதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன்கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்களை செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும்.

செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுபவர்கள். அதே நேரத்தில் சில நேரங்களில், 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதற்கேற்ப கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்து விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமை பேசுவார்கள்.. சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவார்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல் சுயமாகத் தொழில் செய்து பணம் ஈட்டுவார்கள்.

நீர் நிலைகளில் குளிப்பது அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பது அதிக விருப்பம் கொண்டவர்கள். அடிக்கடி எதையாவது கொரித்து கொண்டே இருப்பர்கள் ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றி மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமாதானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர் களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர் களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறான ஒன்று


குடும்ப வாழ்க்கை

கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள் ஆதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன்கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள்.

வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்பு களிடையே நிறைய பாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

உறவினர்களால் மாற்றத்துக்கு உள்ளாகி வருத்தப்படுவார்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்க மாட்டார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகமானாலும் யாராவது ஒருவரிடத்தில் மட்டும் தான் நெருக்கமாக இருப்பார்கள். அதாவது நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர் களாகவும், பத்திரிகை நிருபர் களாகவும், மனோ தத்துவ நிபுணர் களாகவும், நடிகர் நடிகை களாகவும், கட்டிட காண்டிராக்டர் களாகவும், அழகு கலை நிபுணர் களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்ப்யூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.


தசா பலன்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை முதல் திசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


புதன் தசை:
புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடன் இருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலம் இழந்து இருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.
கேது தசை:
இரண்டாவதாக வரும் கேது தசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.
சுக்கிரன் தசை:
மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.
சூரியன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சூரிய தசை. இந்த தசை நடைபெறும் 6 வருடம் சூரியன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்
சந்திரன் தசை:
ஐந்தாவதாக வரும் சந்திர தசை 10 வருட காலங்கள். சந்திரன் நீசம் அடைந்தால் நல்லோர் நட்சத்திரம் ஏறி இருந்தாலும் நல்லோர் பார்வை பெற்று இருந்தாலும் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்.
6 வதாக வரும் ராகு தசை மாரக தசையாக கூறப்படுகிறது.


பொது பரிகாரம்

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்குகளை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

கார்த்திகை 2, 3, 4, அஸ்தம், மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. அஸ்வினி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பூவராஹாய வித்மஹே
வஜ்ர ருபாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்

கேட்டை

நட்சத்திரம் - கேட்டை


Astrology

கேட்டை என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 18 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்கள் தழுவி இடப்பட்டவை. இதன்படி கேட்டை நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களை கொண்ட கேட்டை நட்சத்திரத்தின் (α, σ, τ இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. கேட்டையின் சம்ஸ்கிருதப் பெயரான ஜியேஷ்ட்டா (Jyeshta) என்பது "மூத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காதணி"யும் "குடை"யும் ஆகும்.

கேட்டைய வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு தான். விருச்சிக ராசியை சேர்ந்து ஆகும்.


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சிறு குடல், குதம், பிறப்பு உறுப்புகள், கருப்பை

பார்வை

சமநோக்கு

பாகை

226.40 - 240.00

தமிழ் மாதம்

ஐப்பசி

நிறம்

மஞ்சள்

இருப்பிடம்

வெட்டவெளி

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

கலைமான்

பறவை

சக்கரவாகம்

மரம்

பாலுள்ள பராய் மரம்

மலர்

புடலை பூ

தமிழ் அர்த்தம்

மூத்தது

தமிழ் பெயர்

துளங்கொளி

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 உபயம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

சேனைக் கிழங்கு

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

சித்ரான்னம்

தேவதை

தேவேந்திரன்

அதி தேவதை

ஸ்ரீவராகர்

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

குண்டல வடிவத்திலிருக்கும்     மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு

மற்ற வடிவங்கள்

குடை,குண்டலம்,ஈட்டி

மற்ற பெயர்கள்

அளிகீடம், அதம், வல்லாரை, ஒளி,நாழி

வழிபடவேண்டிய தலம்

வரதராஜப்பெருமாள், தஞ்சாவூர்

அதிஷ்ட எண்கள்

1, 6, 9

வணங்க வேண்டிய சித்தர்

கௌசிகா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள்

நோ, யா, யீ, யூ

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ஆரஞ்சு

அதிஷ்ட திசை

வடக்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, ஞாயிறு

அணிய வேண்டிய நவரத்தினம்

ஜேட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

தொண்டரடிப்பொடி ஆழ்வார், கலிய நாயனார், கோட்புலி நாயனார்

குலம்

 வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்