விசாகம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

விசாகம் நட்சத்திர அதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குண சாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும்.

எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எவர் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு தருவார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மன அடக்கமும் புலனடக்கமும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை கவரும் அழகிய தோற்றம் பெற்றிருப்பார்கள். கொண்ட கொள்கையில் இருந்து எவருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஆன்மீக வாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தும் தன்னடக்கத்துடன் இருப்பர்கள். எப்போதும் சத்தியத்தையே பேசுவர்கள். சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியும் பேசுவர்கள்


குடும்ப வாழ்க்கை

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை (ஆண்களாக இருந்தாலும்) திருமணம் செய்ய கூடிய நிலையும், ஏற்கனவே மணமானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். ஆனாலும் வாழ்க்கை துணையையும் குழந்தைகளையும் அதிகம் நேசிப்பார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டை போட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கும். அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்சனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.


நண்பர்கள்

எப்போதும் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள்.. அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர் ஆதலால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர். மற்றவர்களிடம் நேசத்துடனும்,மரியாதையுடனும் பழகுவர்கள். உங்கள் உதவி ஒருவருக்கு தேவைப்பட்டால் தயங்காமல் சென்று உதவுவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், பூரட்டாதி ஆகியவை தவிர்க்க வேண்டிய நட்சத்திரம் ஆகும்.


தொழில்

விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அடிக்கடி வேற்று மாநிலம், வேற்று நாடுகளுக்குச் சென்று வருவார்கள். வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் பட்டம், பதவி, பணம் யாவும் இவர்களைத் தேடி வரும். ்கள்.


தசா பலன்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை முதல் திசையாக வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் குரு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு தசை:
பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் தசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியவர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
சனி தசை:
இரண்டாவதாக வரும் சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்ப்பட நேரிடும்.
புதன் தசை:
மூன்றாவதாக வரும் புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
நான்காவது கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
சுக்கிரன் தசை:
ஐந்தாவதாக வரும் சுக்கிரன் தசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.


பொது பரிகாரம்

விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம் மரம் உள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரகப்பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திராடம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸ்தா வல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோத யாத்