சித்திரை தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி செவ்வாய் பகவான் என்பதால் முன் கோபம் அதிகமிருக்கும். அழகிய உடல் வாகும், நீலவிழியும், கட்டான உடலமைப்பும், சிறந்த ஒழக்கமும் அமைந்திருக்கும். பலவகை கலையம்சம் கொண்ட ஆடை அணிகலன்களை விரும்பி அணிபவர்களாக இருப்பார்கள். பிரபஞ்சம் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள்.

அழகிய தோற்றம், அன்போடு பழகும் தன்மை, பேச்சுத் திறமை, ஆடம்பரத்தில் பிரியம், தற்புகழ்ச்சியில் ஆர்வம், பொருட்களில் பற்று ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான இயல்புகள். தெய்வ பக்தியும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பிறருக்கு கொடுத்து உதவ கூடிய தாராள குணமும் இருக்கும். சொன்ன சொல்லை தன் தலையை வைத்தாவது காப்பாற்றுவார்கள். நல்ல அறிவு கூர்மையும் நடைமுறையை பற்றி பேசுபவர்களாகவும் இருப்பார்கள். வாசனை பொருட்களை விரும்பி உபயோகிப்பார்கள்.


குடும்ப வாழ்க்கை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான குடும்பம், தந்தை தாய்க்கு குறைவில்லா வாழ்க்கை அமையும். வாழ்க்கை துணையிடம் அதிக பிரியம் உடையவராகவும் வாழ்க்கை துணையின் பேச்சை கேட்பவராகவும் இருப்பார்கள். பரம்பரை கௌரவத்தை எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள் நந்தி வாக்கியம் என்ற நூலில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பற்றி கூறுகையில் பாதி வாழ்க்கை சுக போகமாகவும் மீதி வாழ்க்கை துறவறத்திலும் கழியும் என்று கூறுகிறது. மணவாழ்க்கை சற்று தாமதமாக அமையும். பிள்ளைகளிடம் மிகுந்த அன்பு காட்டும் அதே நேரத்தில், அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்க மாட்டார்கள்.


நண்பர்கள்

நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, நண்பர்களால் முன்னேற்றம் பெறுவதும், பணம் முதலீடு செய்யாமல் திறமையை முதலீடு செய்து கூட்டாகத் தொழில் செய்வதும் சித்திரையின் தனித்தன்மைகள் ஆகும்


நட்பு நட்சத்திரங்கள்

அஸ்வினி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நண்பராகவோ அல்லது வாழ்க்கை துணையாகவோ அமைந்தால் மிகவும் நல்லது


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பூசம், சித்திரை, மிருகசீரிஷம், அவிட்டம் நட்பை தவிர்ப்பது நல்லது


தொழில்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த துறையை சார்ந்திருந்தாலும் அதில் சாதனைகள் பல செய்ய கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள். எதிலும் முதலிடத்தை பிடித்து விடுவார்கள். பல பட்ட படிப்புகள் படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கு படிப்பிற்கும் சம்மந்தம் இருக்காது. எல்லோரிடத்திலும் கனிவாக பேசி வேலை வாங்குவார்கள். பலரை வைத்து நிர்வகிக்க கூடிய நிர்வாகத் திறன் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்கள். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்து கொண்டே இருந்தால் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலையும் நிறைய இருக்கும்.


தசா பலன்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை முதல் திசையாக வரும். செவ்வாய் தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் செவ்வாய் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தசை:
உடல் உஷ்ணத்தால் பிரச்சனை உண்டாக வாய்ப்பு உண்டு. தாய் தந்தைக்கு உடல் நல குறைவு, பூமி லாபம் ஆகியவை உண்டாகும்.
ராகு தசை:
இரண்டாவதாக வரும் தசை ராகு தசை. இது மொத்தம் 18 வருட காலங்களாகும். இத்தசை காலங்களில் ராகு நின்ற வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் மட்டுமே இளமை கால வாழ்வில் கல்வியில் முன்னேற்றமும், சுகவாழ்வும் கிட்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் கல்வியில் ஈடுபாடு இருக்காது. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் அவப் பெயரை எடுக்க நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் அதனால் வம்பு வழக்குகள் ஏற்படும்.
குரு தசை:
மூன்றாவதாக வரும் குரு தசை காலங்கள் 16 வருடம் நடைபெறும். இத்தசை காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை, முரட்டு சுபாவம் மறைந்து அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பு உண்டாகும். சுகவாழ்வும் கிட்டும்.
சனி தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சனி தசையாகும். இது 19 வருட காலங்கள் நடைபெறும் சனி தசை மாரக தசை என்றாலும் சனி பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் பலவகையில் மேன்மைகளும் சமுதாயத்தில் உயர்வும் உண்டாகும். உடனிருப்பவர்களால் உயர்வுகள் கிட்டும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயர்வடையும்.


பொது பரிகாரம்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் வில்வ மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் திருமணம் பூ முடித்தல், குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், பெயர் வைத்தல், புது மனை புகுதல், அன்னதானம் செய்தல், கல்வி, ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் வண்டி வாகனங்கள் வாங்குவது, நாட்டிய அரங்கேற்றம் போன்றவற்றை தொடங்கலாம். புத்தகம் வெளியிடுதல், குளம் கிணறு வெட்டுதல் தானியத்தை களஞ்சியத்தில் சேர்த்தல் போன்ற வற்றை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

அவிட்டம், மிருகசீரிஷம், போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் நமோ பகவதே, மஹா ஸீதர் சனாய தீப்த்ரே
ஜ்வாலா பரீதாய ஸர்வ திக்ஷோபணகராய
ஹீம் பட் ப்ரஹ்மனே பரஞ் ஜ்யோ திஷே நம!