பூராடம் Poorva Ashaada/ Pooraadam
பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20 வது பிரிவு ஆகும். டி பூராட நட்சத்திர பிரிவு தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் (δ மற்றும் ε சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. பூராடத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ ஆஷாடா (Purva Ashadha) என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும். "பூர்வாஷாடா" என்றும் அழைக்கப்படும்.
நட்சத்திர காரத்துவம்
ஆளும் உறுப்புகள் |
1, 2, 3-ம் பாதங்கள் - கணுக்கால்கள். 4-ம் பாதம் - கால், முன்னங்கால். |
பார்வை |
கீழ்நோக்கு |
பாகை |
253.20 - 266.40 |
தமிழ் மாதம் |
மார்கழி |
நிறம் |
கருமை |
இருப்பிடம் |
பட்டினம் |
கணம் |
மனுஷ கணம் |
குணம் |
உக்கிரம் |
மிருகம் |
ஆண் சிங்கம் |
பறவை |
உள்ளான் |
மரம் |
வஞ்சி அல்லது நாவல் மரம் (பாலுள்ள மாமரம்) |
மலர் |
எருக்கம் பூ |
தமிழ் அர்த்தம் |
முந்தைய வெற்றி |
தமிழ் பெயர் |
உடைகுளம் |
சராதி நட்சத்திரப்பிரிவுகள் |
ஸ்திரம் |
நாடி |
தட்சிண பார்சுவ நாடி |
ஆகுதி |
பூசணித் துண்டு |
பஞ்சபூதம் |
ஆகாயம் |
நைவேத்யம் |
தயிர், நெய் சாதம் |
தேவதை |
அஜைகபாதன் - 11 ருத்ரர்களில் ஒருவர் |
அதி தேவதை |
ஸ்ரீ லக்ஷ்மி குபேரன் |
அதிபதி |
சுக்கிரன் |
நட்சத்திரம் தன்மைகள் |
சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம் |
உருவம் |
சதுர வடிவில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுப்பு |
மற்ற வடிவங்கள் |
கட்டில்கால் |
மற்ற பெயர்கள் |
நீர், புனல், பயம், அறல், கோ, பொய்வாவி, உடைகுளம் |
வழிபடவேண்டிய தலம் |
ஆகாசபுரீஸ்வரர், தஞ்சாவூர் |
அதிஷ்ட எண்கள் |
2, 3, 7 |
வணங்க வேண்டிய சித்தர் |
ஹரிதா |
பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் |
ஸே, ஸோ, தா, தீ |
அதிஷ்ட நிறங்கள் |
ஊதா, கிரீம் |
அதிஷ்ட திசை |
வடகிழக்கு |
அதிஷ்ட கிழமைகள் |
வியாழன், சனி |
அணியவேண்டிய நவரத்தினம் |
மார்கா (மஞ்சள்) |
அதிஷ்ட உலோகம் |
வெண்கலம் |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம். |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
குபேரன், கின்னரன், ராமகிருஷ்ண பரமஹம்சர்,நாராயண குரு, மறைமலையடிகள், காமராசர், கலிலியோ |
குலம் |
பிரம்ம குலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
மோட்சம் |