Showing posts with label திருவோணம். Show all posts
Showing posts with label திருவோணம். Show all posts

நட்சத்திரம் -திருவோணம்

திருவோணம் -Shraavan/Thiruvonam


திருவோணம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 22 வது பிரிவு ஆகும். திருவோண நட்சத்திர பிரிவு அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் (α, β and γ அக்குயிலய்) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் சமஸ்கிருதப் பெயரான ஷ்ரவன (Shravana) என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும். ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளாவில் வாமன அவதாரத்திற்கு காரணமான மகாபலியை போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரில் மற்றும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்த அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சுரப்பி, முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

280.00 - 293.20

தமிழ் மாதம்

தை

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் குரங்கு

பறவை

நாரை

மரம்

பாலுள்ள எருக்கு மரம்

மலர்

ஜாதி பூ

தமிழ் அர்த்தம்

படிப்பறிவு உடையது, காது

தமிழ் பெயர்

முக்கோல்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

சிவப்பு அரிசி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

பால் ஏடு - அக்காரஅடிசில்

தேவதை

அம்பிகை, வெங்கடேச பெருமாள், ஸ்ரீமகாவிஷ்ணு.

அதி தேவதை

கருடவாகனத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால்.

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

மற்ற வடிவங்கள்

பூங்கொத்து,மூலிகைகொத்து

மற்ற பெயர்கள்

சோனம், உலக்கை, சித்ரம், ரஷகன், மால், மாயன், மாதவன்

வழிபடவேண்டிய தலம்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், திருப்பாற்கடல், திருப்பதி, திங்களூர்

அதிஷ்ட எண்கள்

2, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அத்ரி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஜு, ஜே, ஜோ, கா

அதிஷ்ட நிறங்கள்

மயில் நீலம், வெளிர்ச் சிவப்பு

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து, வைரம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பொய்கையாழ்வார், விபீஷணன், சுவாமி நரசிம்ம பாரதி, வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசார்யர், விக்ரம் சாராபாய், கார்ல்மார்க்ஸ்.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


சந்திரன்




கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :-சந்திரன்

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

சந்திரன்


சந்திரன் சில குறிப்புகள் :
1. நட்சத்திரங்கள் : ரோகிணி, அஸ்தம், திருவோணம்
2. மொத்த திசை இருப்பு : 10 வருடம்
3. தானியம் : நெல்
4. புஷ்பம் : வெள்ளெலி
5. நிறம் : வெண்மை
6. ஜாதி : வைசிய ஜாதி
7. வடிவம் : குள்ளமானவர்
8. உடல் உறுப்பு : முகம், வயிறு
9. உலோகம் : ஈயம்
10. மொழி : தனியாக மொழி குறிப்பிடவில்லை
11. ரத்தினம் : முத்து
12. வஸ்திரம் : வெண்மை (முத்து வெண்மை)
13 தூப தீபம் : சாம்பிராணி
14 வாகனம் : முத்து விமானம்
15 மறைவு ஸ்தானம் (சிறப்பு விதி) : லக்கனத்திற்கு 3,6, 8, 12 ஆகும்
16. சமித்து : முருக்கு
17. சுவை : உப்பு
18 பஞ்பூதம் : அப்புக் கிரகம்
19 நாடி : சிலேஷ்ம நாடி
20. திசை: வடகிழக்கு (வாயு முலை)
21. அதிதேவதை : பார்வதி
22 சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 நாள்
23. தன்மை : சர கிரகம்
24 குணம் : சாத்மீகம்
25 ஆட்சி : கடகம் , உச்சம் : ரிஷபம் , நீசம் : விருச்சகம் , மூல திரிகோணம் : ரிஷபம்
26 நட்பு வீடுகள்: மிதுனம், சிம்மம், கன்னி
27 பகை வீடுகள்: பகை வீடுகள் கிடையாது
28 பார்வை : 7 ம் மட்டும்
29 பலன் தரும் காலம் : காலம் முழுவதும்
30. மாத்ருகாரகன் (மனசு காரகன் )(தாய் காரகன்)
31. தத்துவம் : பெண் கிரகம்

லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :

மேலும் படிக்க ...