ராசியின் தன்மைகள் :
பெண் ராசி அல்லது இரட்டை ராசி
நீர் ராசி
உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : குரு
ஊமை ராசி
தூர அளவு : 330" to 360"
நட்சத்திரங்கள் : புரட்டாதி 4 பாதம் , உத்திரட்டாதி , ரேவதி
ஜாதி : பிராமண ஜாதி
உருவம் : மீன்
நிறம் : பச்சை
உடல் அமைப்பு (Type of Body or structure of Body):
அழகிய அங்கலட்சணத்துடனும், தோற்றத்துடனும் இருப்பார்கள். நடுத்தர உயரம் உடையவர்கள். ஏர் நெற்றி, நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள்.
குணங்கள் (General Characteristics):
தான் செய்த காரியங்கள், செய்ய போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்ல மாட்டார்கள். எவரிடமும் மனம் விட்டு பழக மாட்டர்கள். பயந்த சுபாவம் உடையவர்கள். கல்வி அறிவு, தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டங்கள் ஆகியவை பற்றி நன்கு அறிந்து இருப்பர், என்றாலும் அதை வாழ்க்கையில் கடைபிடிக்க மாட்டார்கள். பிறர் பொருள்களை அபகரிக்கும் குணம் உடையவர்கள். கற்பனை உலகில் மிதப்பவர்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். கெட்ட பழக்கங்கம், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகி விடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள்.
மணவாழ்க்கை (Marriage Life):
விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். தாமதப்பட்ட மணவாழ்க்கை நல்லது. பெரும்பாலான இந்த ராசி ஆண்களுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
பொருளாதாரம் (Economy):
நல்ல செல்வம், செல்வாக்கு சந்தோஷங்கள் பெற்று இருந்தாலும் எதிர்பாராதவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டு சிரமமான வாழ்க்கையை வாழ நேரிடும். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள். நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.
புத்திரபாக்கியம் (Children):
குழந்தை பாக்கியம் குறைவாக இருக்கும். சிலருக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். புத்திரர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.
தொழில்கள் (Business or Jobs):
இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். ஜோதிடர்கள் பெரும்பாலும் மீன ராசியினராக இருப்பார்கள். இரக்கம் மற்றும் பச்சாதாபம் தேவைப்படும் துறைகளில் இவர்களின் உள்ளுணர்வு உதவுகிறது. கலைஞர், செவிலியர், உடல் சிகிச்சை, வள்ளல், கால்நடை மருத்துவர், உளவியலாளர் சிறந்த வேலைகள் எனலாம்.
நோய்கள்:
நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள், சித்த பிரமை, குடிபழக்கத்தால் வரும் நோய்கள் ஆகியவை உண்டாகும்.