ஜோதிடம் பாடம் -3 பக்கம் -2


ஐந்தாம் வீடு(Fifth House) :

  1. இதை புத்திர ஸ்தானம் (குழந்தை பாக்கியம் ) என்பர் .
  2. மேலும் இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் (சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அரிதல் ) என்றும் கூறலாம் .
  3. மாமன்மார்கள் மற்றும் மாமன்மார்களின் உறவு பற்றியும் அறியலாம் .
  4. ஆன்மீக வாழ்க்கையையும் மற்றும் கலை துறையில் நாட்டம் உள்ளதா என்பதை பற்றி அறியவும் எந்த வீடு உதவும்.
  5. ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம்.
ஆறாம்வீடு (Sixth House):

  1. ஆறாம் வீட்டை ரோகஸ்தானம் அல்லது பகைஸ்தானம் என்பர்.
  2. கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள், கவலைகள், துக்கங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம்.
ஏழாம்வீடு (Seventh House):

  1. இந்த வீட்டை களத்திர ஸ்தானம் என்பர்
  2. திருமணம், வியாபாரம் மற்றும் மரணத்தை குறிக்கும் வீடு இதுதான் .
  3. பிரயாணத்தை இந்த வீட்டை கொண்டும் குறிக்கலாம்
எட்டாம் வீடு (8th House):

  1. இந்த வீட்டை "துஸ்தானம்" என்பர் .
  2. ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம்.
  3. அவமானம், கண்டம், மரணம், கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம்.,பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான்.
  4. துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான்.

முன்புறம்,     1,       2,      3