Showing posts with label ஓரை. Show all posts
Showing posts with label ஓரை. Show all posts

ஜோதிடம் பாடம் -2




சூரியன் (Sun) முன்பு பூமி(Earch) சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்கினம் (Laginam)எனப்படும்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

லக்கினம் எப்படி கணிப்பது என்பது பெரிய கணிதம். நாம் அவற்றை பின்னால் பார்க்கலாம். நமது ஜாதகத்தை எடுத்தல் "ல" என்று போட்டு இருப்பதுதான் லக்கினம்.

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால் ஒவ்வொரு ராசியும் 2, 3, 4 ,5 ,6, 7, 8, 9, 10, 11, 12 என்று வரிசைப்படி வரும். லக்கினத்தை வைத்துதான் ஜாதகம் கணிக்கப் படுகிறது

ராசி (Rasi)கட்டம் :

எந்த ஜாதகத்தை கையில் எடுத்துப் பார்த்திர்கள் என்றால் அதில் பொதுவாக இரண்டு கட்டங்கள் போடப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்று ராசிகட்டம் (Rasi) மற்றொன்று அம்சம் கட்டம் (அம்சம் என்பது நவாம்சம்) (Amsam or NavaAmsam) என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த ராசிச் கட்டத்தில் "ல" என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் இதைத்தான் லக்கினம் என்று குறிப்பிடப்படுகிறது.
மேஷம் (Mesham) முதல் மீனம் (Meenam) வரையில் எங்கு சந்திரன் (Moon) இருக்குகிறாரோ அதுதான் ராசியாகும் . உதாரணத்திற்கு ஒரு ராசி (Zodiac) கட்டம் பார்க்கவும் .


நவாம்ச (Nava Amsam)கட்டம் :

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம். குறிப்பாக திருமணத்தின் (For Marriage Time) போது இந்த கட்டத்தை பார்ப்பார்கள் அதாவது இது கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்.

நவாம்சம் இல்லாமல் ஜோதிடரால் துல்லியம்மாகப் பலன் சொல்ல முடியாது. எனவே ராசி கட்டத்திற்கு அடுத்தபடி நவாம்ச கட்டம் மிக முக்கியம் .
கட்டத்தை சக்கிரம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள் .மேலும் ஜோதிடத்தை மிக துல்லியமாக சொல்வதற்கு மேலும் சில கட்டங்கள் (சக்கிரங்கள்) உள்ளன .

    • பாவம்
    • திரேக்காணம்
    • ஓரை
    • திரிசாம்சம்
    • சப்தாம்சம்
    • சஷ்டியாம்சம்.