ஜோதிடம் பாடம் -4 பக்கம் -12 (பன்னிரண்டாம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)



பன்னிரண்டாம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்

1ம் வீட்டில் இருந்தால்:

  • ஜாதகன் மெலிந்த தேகத்துடன் அழகான தோற்றதுடனும் மனதில் துணிவின்றி இருப்பர்.
  • சிலருக்கு நல்ல உணவு, நல்ல நித்திரை, நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகள் பெற்று வாழ்வர்

2 ம் வீட்டில் இருந்தால்:

  • பலமுறை பல இடங்களில் பண விரையம் கடன் தொல்லைகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் அவதிப்பட்டு வாழ்வர்
  • தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வர்
  • தேவையில்லாத பேச்சுகளை பேசுவர் மேலும் பேச்சிற்க்கு மதிப்பு இருக்காது
  • சிலருக்கு கண் பார்வை கோளாறு ஏற்படும்

3 ம் வீட்டில் இருந்தால்:

  • இளைய சகோதர சகோதரிகளாலும்,நண்பர்களாலும் செலவு ஏற்பட்டு சொத்துகளை இழப்பர்
  • சிலர் இளைய சகோதர சகோதரியை இழக்க நேரிடலாம்.
  • சிலர் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பர்
  • எப்பொழுதும் அழுக்கான தோற்றத்துடன் திரிபவனாக இருப்பார்

4 ம் வீட்டில் இருந்தால்:

  • சிலர் சிறுவயதிலே தாயை இழக்க நேரிடும்
  • சொந்தங்களால்,நண்பர்களாலும் செலவு போன்று குடும்ப செலவினங்கள் அதிகமாக இருக்கும்
  • மனப் போராட்டங்கள் நிறைந்து தேவையில்லாத கவலைகளுடனும் உறவினர்களில் விரோதத்துடனும் குடியிருக்கும் இடங்களில் வீட்டு சொந்தக்காரர்களால் தொல்லையுடனும் வாழ்க்கை அமையும்

5 ம் வீட்டில் இருந்தால்:

  • குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால்பிரச்சினை இருக்கும்.
  • மிகுந்த இறைபக்தி உடையவராகவும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பர்.
  • சிலருக்கு மூத்த சகோதரர்களால் விரயம் ஏற்படும்.

6 ம் வீட்டில் இருந்தால்:

  • எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், செழிப்புள்ளடனும், எல்லா வசதிகளும் நிறைந்து இருப்பர்
  • ஆரோக்கியமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பர்
  • எதிரிகளின் தொல்லை இருக்காது மேலும் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும்
  • சிலசமயம் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும்.
7 ம் வீட்டில் இருந்தால்:

  • மனைவி வழியில் அதிக செலவினங்கள், வறுமையில் வளர்ந்த மனைவி மகிழ்ச்சி அற்ற திருமண வாழ்க்கை அமையும்
  • சிலர் உடல் உபாதைகளாலும், காம சம்மதப்பட்ட உணர்வுப் போராட்டங்களாளும் செலவினங்கள் ஏற்படும்,
  • எதையும் கற்கும் ஆர்வம் இருக்காது. மேலும் சிலருக்கு சொத்து சுகங்களும் இல்லாமல் போகும்


8 ம் வீட்டில் இருந்தால்:

  • செல்வந்தனாகவும் மக்களால் அறியப் பட்டவனாகவும் பல வேலையாட்கள் வேலை செய்ய
  • சௌகரியமான வாழ்க்கை வாழ்வர்
  • சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடையவராகவும் தர்ம சிந்தனைகள் உடையவராகவும் இருப்பர்

9 ம் வீட்டில் இருந்தால்:

  • சிறுவயதிலே தந்தையை பறிகொடுக்க நேரிடும் அல்லது தந்தையால் செலவுகள் ஏற்படும்
  • வெளிநாட்டில் வாழ்ந்து,அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவாராகவும் நேர்மையுடையவராகவும் இருப்பர்

10 ம் வீட்டில் இருந்தால்:

  • கடின உழைப்பாளி, வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
  • சிறைக் காவலர் வேலை, மருத்துவத் துறையில் வேலை மாயானங்களில் வேலை செய்ய நேரிடும்.


11 ம் வீட்டில் இருந்தால்:

  • மூத்த சகோதரர்களால் நஷ்டமும் செலவும், தொல்லைகளும் ஏற்படும்.
  • வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபட்டு குறைந்த வருமான ஈட்டுவர்
  • குறைந்த நண்பர்களும் அதிக எதிரிகளும் பெற்று இருப்பர்


12 ம் வீட்டில் இருந்தால்:

  • தர்ம செலவுகள் செய்வாராக இருப்பர்
  • கண் பார்வை நன்றாக இருக்கும்
  • நல்ல நித்திரை சுகம் ஏற்படும்.
  • சிலர் ஓய்வு ஒழிச்சல்இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டே இருப்பர்

இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.