ஜோதிடம் பாடம் -4 பக்கம் -9 (ஒன்பதாவது வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)

ஒன்பதாவது  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்

1ல் இருந்தால்:

  • பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். 
  • தெய்வ நம்பிக்கையோடும் ,தான தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். 

 2 ம் வீட்டில் இருந்தால்:

  • அயல் நாட்டுத் தொடர்பு மூலமாகயும் தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.
  • ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பர். மேலும் அவருடைய சொத்துக்கள் கிடைத்து சிறந்து வாழ்வர் 

 3 ம் வீட்டில் இருந்தால்:

  • இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் அன்பும் உள்ளவனாக இருப்பர் 
  • நன்றாக எழுதக்கூடிய திறமை இருக்கும் 

4 ம் வீட்டில் இருந்தால்:

  •  தாயின் ஆதரவுடன் நல்ல செல்வாக்கு பெற்று வண்டி வாகன வசதியுடன் இருப்பர் 

5 ம் வீட்டில் இருந்தால்:

  • புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பர். 
  • தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்
  • மொத்தத்தில்  அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வர் 

6 ம் வீட்டில் இருந்தால்:

  • சிலருக்கு  வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. அதாவது  உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும்.
  •  தகப்பனார் உடல் நிலை பாதிக்க வாய்ப்புள்ளது.  மேலும் தந்தையின் சொத்துக்களை போராடி பெறுவர் 

7 ம் வீட்டில் இருந்தால்:

  •  நல்ல தெய்வபக்தியுள்ள மனைவி அல்லது கணவன் அமையும் .
  • சிலருக்கு அந்நிய வாழ்க்கை துணை அமையும் 
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
  • தந்தையின்சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய பெறுவர் .
  • வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டி  செளகரியமாக வாழ்வார்கள்.
8 ம் வீட்டில் இருந்தால்:

  • தந்தைக்கு கண்டம்  தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும்.
  • தந்தையின்சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும்.

9 ம் வீட்டில் இருந்தால்:

  • தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார் மேலும் தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும். 
  • தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர் 

10 ம் வீட்டில் இருந்தால்:

  •  அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர் மேலும் சிலருக்கு அமைச்சர் பதவி போன்ற சிறப்பான பதவிகளும் கிடைக்கும் 
  •  தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும். 
  • பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பர்

11 ம் வீட்டில் இருந்தால்:

  • தகப்பனாரால் லாபம் கிடைக்கும். 
  • குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும்.  மேலும் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும் 
  •  அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் அமையும் 
  • செல்வாக்கும், அதிகாரமுமுள்ளபல நண்பர்களை உடையவனாக இருப்பர் .

12 ம் வீட்டில் இருந்தால்:

  • தந்தையாருக்கு கெடுதல் மற்றும் வெளிநாட்டு பயணம் உண்டு 
  • பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும். 


ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.
இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.


முன்புறம் 1,  2,  3,  4 , 5 ,  6 7 8,  910 , 1112