ஜோதிடம் பாடம் -4 பக்கம் -5 (ஐந்தாம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் ; இருந்தால் பலன்கள் )


ஐந்தாம்  வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள் விவரம் :
1 ஆம் வீட்டில் இருந்தால்:
  • சுப பலனாக இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழ்வர்
  • தெய்வ அனுக்கிரகம்தலைமைப் பதவி , சிலருக்கு அரசங்க பதவிநிறைய வேலை ஆட்கள் பெற்று சிறப்புடன் வாழ்வர்.
  • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை  இருந்தால்  எதிர்மறையான பலன்கள் மற்றும் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பர்.


 2 ஆம் வீட்டில் இருந்தால்:
  •  சுப பலன் பெற்று இருந்தால் அழகான மனனவி மற்றும் அன்பான குழந்தைகளால் தனம் சந்தோஷம் நிறைந்த  வாழ்க்கை அமைய பெற்று இருப்பர்
  • கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் , அரசு மரியாதையுடன் இருப்பர்
  •  5, 2 யுடையவரின் திசா புத்தியில் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைத்து சிறப்புடன் வாழ்வர் .
  • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை  இருந்தால்  எதிர்மறையான பலன்கள் மற்றும் தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவர் மேலும் அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர். ரேஸ் , லாட்டரியில் பணத்தை கோட்டை விட்டு மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாவர்.


3 ஆம் வீட்டில் இருந்தால்:
  • தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர்.
  • புத்திர பாக்கியமும் , நல்ல சகோதர சகோதிரிகளையும் பெற்றவர்
  • அசுப பலன் பெற்று இருந்தால் குழந்தைகளின் இழப்பு, தொழிலில் பிரச்சனை , சகோதர சகோதிரி பிரிவு ஏற்ப வாய்ப்பு உள்ளது .


4 ஆம் வீட்டில் இருந்தால்:
  •  5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம்வீடு எனவே  5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். எனவே இது அவ்வளவு நல்லது அல்ல.   புத்திரதோஷம் ஏற்படும்.
  • சுபலன் இருந்தால்  புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பர் மேலும் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்
  • சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் கிடைக்கும். சிலருக்கு அரசுக்கு ஆலோசகராக  அல்லது அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவராக இருப்பர்
5 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  புத்திரர்கள் உயர் பதவிகளில் இருப்பர்
  • படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவர்
  • கல்வியில் நல்ல ஞானத்துடன் அரசாங்கத்தில் உயர்பதவிகள் வசிப்பர். 
  • அசுபலன் பெற்று இருந்தால்  எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவர்.குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. 

6 ஆம் வீட்டில் இருந்தால்:

  • மறைவு ஸ்தானம் எனவே நல்லதுல்ல.  குழந்தை பாக்கியம் குறைந்து (புத்திரதோஷம்) சிலருக்கு  தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க நிலை ஏற்படும் 
  • மேலும்  சிலருக்கு பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும்
  • தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.

7 ஆம் வீட்டில் இருந்தால்:

  • 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிப்பதால்  காதல் திருமணம்செய்து கொள்வர்.  
  • அதிக நல்ல குழந்தைகளை உடையவராக இருப்பர்  அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவராக இருப்பர் 
  • அசுப பலன் பெற்று இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும் ரிடும்

8 ஆம் வீட்டில் இருந்தால்:

  • புத்திர சந்தான தோஷம் ஏற்பட்டு மேலும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார்
  • அதிர்ஷ்டக்குறைவானவர் என்று சொல்லாம்.
  • மூதாதையர் சொத்துக்கள்  கிடைப்பதில் சிரமமும் அப்படியே கிடைத்தாலும் அந்த சொத்தை கடனுக்காக இழக்க நேரிடும்.

 9 ஆம் வீட்டில் இருந்தால்:

  • இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார்
  • கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும். 
  • பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். 
  • சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பர்

10 ஆம் வீட்டில் இருந்தால்:

  • புத்திர சந்தான விருத்தி ஏற்பட்டு   புத்திரர்களால் நல்ல தொழில்கள் அமைய பெற்றவர் 
  • சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பர்
  • தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பர்
  • அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பர் 
  • அசுப பலன் ஆனால்  எதிர்மறையான பலன்கள் அமையும்

 11 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் 
  • குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடைந்து  பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவுடம் இருப்பர் கிடைக்கும்.
  • 11-ம் வீடு லாபஸ்தானம் எனவே இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். மேலும் புத்திரர்களால் உதவி கிடைக்கும்
  • குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடைந்து  பெரிய மனிதர்களின், அரசின்  அன்பும் ஆதரவும் பெற்று வாழ்வர் 
  • சிலர்  அதிக சூழந்தைகளுடன் வாழ்வர் 

12 ஆம் வீட்டில் இருந்தால்:

  • மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படும்
  • குடும்பம் அமைதி, சந்தோஷமும்  இல்லாமல் இருக்கும்.
  • எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். 
  • தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.


இவையாவையும் பொது பலனே. சுப, அசுப  கிரக பார்வையினால்  மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.



முன்புறம் 1,  2,  34 , 5 ,  6 , 78910 , 1112