ஜோதிடம் பாடம் -4 பக்கம் -10 (பத்தாவது வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)


பத்தாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1 ம் வீட்டில் இருந்தால்:

  • சுயமுயற்சியால் கடின உழைப்பாளியால் தீவிரமாக தொழில் செய்து முன்னேற்றம் காண்பர்.
  • சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பர்.இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு கிடைக்க பெறுவர்

2 ம் வீட்டில் இருந்தால்:

  • நல்ல அழகுடனும் வாக்குவன்மை திறம்பட பேசும் சக்தி செல்வ செழிப்புடனும் மிகவும் அதிஷ்டத்துடனும் இருப்பர் .
  • குடும்பத் தொழிலை பெரிய அளவில் செய்யுது குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை அடைவர்


3 ம் வீட்டில் இருந்தால்:

  1. சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.
  2. சிலர் பகுதி நேர வாழ்க்கை பயணங்களிலே கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும்.
  3. மேலும் இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்


4 ம் வீட்டில் இருந்தால்:

  • அழகான வீடு,கட்டடிங்கள், வண்டி வாகனங்கள் செல்வ செழிப்பான வாழ்க்கை தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும்
  • பலராலும் மதிக்கப்பட்டு தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாகவும் உதாரண மனிதராகவும் இருப்பர்

5 ம் வீட்டில் இருந்தால்:

  • மகிழ்ச்சி, செல்வாக்குவுடன் கூடிய வாழ்க்கை, பெரியமனிதர்களின் நட்பையும் அரசாங்கத்தில் உயர் பதவிக பெற்று இருப்பார்கள்.
  • புத்திரபாக்கியம் அமையும்
  • மறைமுக எதிரிகளும் இருப்பர். மேலும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்துவர் .

6 ம் வீட்டில் இருந்தால்:

  • பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும்.
  • சிலர் உடம்பு மெலிந்தாக காணப்படுவர்
  • பொறுப்பான பதவிகள் வந்து சேர்வதுடன் நடுநிலையாளர் என்று பெயர் பெற்று பலரின் மதிப்பையும் பெறுவர்
  • அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும்.

7 ம் வீட்டில் இருந்தால்:

  1. சிலருக்கு தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பர்.அதுவே அவருடைய
  2. வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும்.
  3. தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புஅமையும்
  4. சிலர் கணவன் அல்லது மனைவி ஒற்றுமையுடன் இருக்கமாட்டாள். ஆனால் அவர்களால் பொருள் சேரும்.
8 ம் வீட்டில் இருந்தால்:

  • நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.
  • நீண்ட ஆயுளை உடையவராக இருப்பர்
  • தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும்.
  • திறமைசாலிகளாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர்

9 ம் வீட்டில் இருந்தால்:

  • துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக இருப்பர்.
  • போதகர். ஆசிரியர் என்பது போன்றவேலைகளை விரும்பிச் செய்வர்.
  • தானதருமங்களிலும் ஆன்மீக வாழ்விலும் ஈடுபாடு மற்றும் தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பர்
  • அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடைய வராகவும் இருப்பர்.
  • தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும்.

10 ம் வீட்டில் இருந்தால்:

  • நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளளப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவர்
  • பெரிய மனிதர்களின் ஆதரவு,உறவினர்களின் ஆதரவு, உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.


11 ம் வீட்டில் இருந்தால்:

  • செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவர்
  • பணத்துடன்,மதிப்பும், மரியாதையுடன் மகிழ்வுடன் இருப்பர்
  • நல்ல நோக்குடையவர்களாகவும் பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்


12 ம் வீட்டில் இருந்தால்:

  • பொருள் நஷ்டம், புத்திரர்களால் கஷ்டங்கள், அனாவசியமான செலவுகள், சொத்துக்கள் விரயம் போன்றவை இருக்கும்
  • சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும்

இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.


முன்புறம் 1,  2,  3,  4 , 5 ,  6 7 8,  910 , 1112