ஜோதிடம் பாடம் - 4 பக்கம் -3 (மூன்றாம் வீட்டு அதிபதி12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)



மூன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் : 1ம் வீட்டில் இருந்தால்:
  • இளைய சகோதர சகோதிரி விருத்தி, ஆதரவு ஏற்படும்
  • பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் யோகம் கிடைக்கும்
  • சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும்.
  • பொன் , வைரம் முதலான நகைகளை பெறுவார்களாக இருப்பர்
2ம் வீட்டில் இருந்தால்:
  • சகோதர சகோதரிகளின் ஆதரவில் காலங்களைகழிக்க நேரிடும்
  • மூன்றாம் வீட்தின் அதிபதி கெட்ட கிரகங்கலின் பார்வைகள் இல்லாமல் இருந்தால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.
  • தைரியம் குறைந்தும் வியாதிகள் உடையவராக இருப்பர்
  • சுப கிரங்களின் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் செல்வங்கள் நிறைந்து மகிழ்ச்சியுடனும் இருப்பர்

3ம் வீட்டில் இருந்தால்:
  • குறிப்பாக இளைய சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார் மேலும் அவர்களின் ஆதரவு பெற்று இருப்பர்
  • ஆடை ஆபரணங்களில் ஆசையுடையவராக இருப்பர் .
  • தெய்விக வழிபாடுகள், சாஸ்திர அறிவுகள் , விசுவாசம் பெற்றவராக இருப்பர்
  • உடல் பலம் நன்றாக இருக்கும்

4ம் வீட்டில் இருந்தால்:
  • குடும்பத்தில் ஒற்றுமை , செல்வம் நிறைந்து சுகமாக இருப்பர்
  • சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாக இருப்பர்

5ம் வீட்டில் இருந்தால்:
  • நல்ல குழந்தை பாக்கியங்களை , மகிழ்ச்சியான குடும்பத்தையும் ,சகோதர சகோதரிகளின் , பெரிய மனிதர்களின் ஆதரவும், நட்பும் பெற்றவராக இருப்பர்
  • சாஸ்திரம், தெய்வீக வழிபாட்டில் ஆர்வம் பெற்று இருப்பர்

6ம் வீட்டில் இருந்தால்:
  • அவ்வளவு நல்ல வீடு அல்ல. சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பர்
  • உடல் பலம் இல்லாமல் நோய் உடைய உடல் அமைப்பை பெற்று இருப்பர்
  • சுப கிரக பார்வையோ அல்லது சேர்ககையோ பெற்று சுப பலமானால் எதிரிகளை வெல்வார் மேலும் தாய் வழி மூலம் லாபம், குழப்பம் பெற்று இருப்பர்

7ம் வீட்டில் இருந்தால்:
  • பெண்களின் மீது ஈர்ப்புடன் , நன்றாக சாப்பிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பர்
  • தன்னுடைய சுகங்கள் பற்றி மட்டும் நினைக்கும் குணத்துடன் தைரியத்துடன் இருப்பர்.
  • பெண்களின் அல்லது மனைவியின் சொத்துக்களை பெற்று சுகமாக சுகத்துடன் இருப்பர்

8ம் வீட்டில் இருந்தால்:
  • இந்த வீடு மறைவு ஸ்தானம் எனவே சகோதர சகோதரிகள் உடன் சண்டையுடன் சிரமத்துடன் குடும்பம் நடத்துபராக இருப்பர்
  • சிலருக்கு உடல் ஊனம் , கடன்கள் அவமானம், வருமானம் குறைந்தும் இருப்பர் . (சுப பலன் பெற்று இருந்தால் பிற்காலத்தில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும் )

9ம் வீட்டில் இருந்தால்:
  • நல்ல தைரியசாலியாகவும் பூர்வ புண்ணியத்தினால் நல்ல வசதி பெற்றவராக இருப்பர் .
  • தெய்வபக்தி, விசுவாசத்துடன் இருப்பர்

10ம் வீட்டில் இருந்தால்:
  • சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவராக இருப்பர். ஆனால் சுப பலன் இல்லாமல் இருந்தால் எதிர் மறையான நிலை ஏற்படும் .
  • தாராளமான மனதுடையவராக இருப்பர்

11ம் வீட்டில் இருந்தால்:
  • சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாகவும் அவர்களால் லாபம் பெற்று இருப்பர்

12ம் வீட்டில் இருந்தால்:
  • இது மறைவு ஸ்தானம் . சகோதர சகோதரிகள் சண்டை சச்சரவும் , அலைச்சலும் , மன அமைதி இல்லாதராக இருப்பர்
  • சயன சுக இல்லாமலும் , பிற இடங்களின் வசிக்கும் நிலை பெற்றவராக இருப்பர்

இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.  தொடர்ச்சி >>

முன்புறம் 1,  2 , 3,  4 , 5,  6 , 78910 , 1112