ஜோதிடம் பாடம் - 4 (இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்)



சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தையும் , 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த பாடத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்


லக்கினம்:

ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .

1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:

    • லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்
    • ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
    • நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
    • சொத்துக்*கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ
    • நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
2. லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்:
    • 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் ,சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
    • நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
    • சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
    • தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
    • மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்.
3. லக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால்:
    • லக்கினாதிபதி 3ம் வீட்டில் அதாவது சகோதர ஸ்தானத்தில் இருந்தால் அதீத துணிச்சல் உள்ளவராக இருப்பார்.
    • அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது
    • எல்லா நலன்களும் வாழ்வில் அடைவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.
    • புத்திசாலியாகவும் மரியாதையாக நடக்கும் குணமும் இருக்கும்.
    • சகோதர சகோதரரின் அன்பிற்குரியவராக இருப்பார்.
4. லக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால்:
    • அழகான தோற்றமும், நற்பண்புகள் உடையவனாகவும் இருப்பான்.
    • நிலங்கள், வீடு வாசல், வண்டி வாகனங்கள் பெற்று விளங்குவார்.
    • குறிப்பாக தாயின் அன்பு மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பை பெற்றவனாக இருப்பார்.
    • கல்வியில் சிறந்து விளங்குபவராக இருப்பார்
5. லக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல புத்திர செல்வங்கள் பெற்றவராகவும் அவர்களால் மகிழ்ச்சியும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார்
    • தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்
    • சிலருக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.
6. லக்கினாதிபதி 6ம் வீட்டில் இருந்தால்:
    • நல்ல புத்திர செல்வங்கள் பெற்றவராகவும் அவர்களால் மகிழ்ச்சியும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார்
    • தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்
    • சிலருக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.
7. லக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால்:
    • ஸ்திரீ லோலனாகவும், ஆசைகள் உடையனவராகவும் இருப்பார்
    • சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண நடக்க வாய்ப்புள்ளது.
    • வேறு சிலர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் சந்நியாச வாழ்க்கையில் நாட்டம் ஏற்படும்
    • சிலருக்கு மனைவி மூலமாய் சொத்துக்கள் சேரும்.
    • பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார் மேலும் சுய கவுரவம் அதிகம்.(சுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.)
8. லக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால்:
    • ஆயுள் நிறைந்தவராக இருப்பார்.
    • சிரமத்துடனும் மற்றும் வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார் (8-ம் இடம் மறைவு ஸ்தானம் )
    • சிலருக்கு நன்னடத்தை குறைந்தும் மற்றும் . சூதாட்ட எண்ணமும் இருக்கும்
    • சிலருக்கு குழந்தைப்பேறு பிரச்சனை, உடல் அங்கங்களில் குறைபாடு போன்றவை அமைந்திருக்கும்
9. லக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால்:
    • பெரியவர்களை மரியாதையுடன் நடத்தும் குணமும் அவர்களின் ஆசிகளையும் நிறைய பெற்றிருப்பார். நன்மையில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.
    • தகப்பனர் மற்றும் பித்துருக்களின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராக இருப்பார்.
    • அதிர்ஷ்டம் அமைந்தவராக இருப்பார்
    • சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் இருப்பார்
    • பலருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார்.
10. லக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால்:
    • குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் இருப்பார்.
    • மேலும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பார்
    • உத்தியோகத்திலும் , தொழிலும் பல வெற்றிகளை குவிப்பார். (பத்தாம் அடிப்பதிக்கும் லக்கினாதிபதிக்கும் சம்மந்தப்பட்ட தொழில் செய்தல் சிறப்பாக இருக்கும்
    • அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் உள்ளவர்
    • பந்துக்களிடமும் உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பார்
11. லக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால்:
    • மொத்தத்தில் நிம்மதியான வாழ்கை அமையும்.
    • மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும்
    • லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பார்
    • வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். நிம்மதியான வாழ்கை அமையும்.
12. லக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால்:
    • வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும்.
    • சிலருக்கு அடிக்கடி இட மாற்றம் சந்தர்ப்பம் ஏற்படும் .
    • சோம்பேரி என்றும் திறமையற்றவர் என்றும் மற்றவர்களால் அழைக்கப்படுவர்.
    • சில சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.
    • சுப கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஏற்பட்டால் ஜாதகருக்கு பலன் நேர்மாறாக இருக்கும்

லக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருகிறார்

இவையாவையும் பொது பலனே. சுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.

தொடர்ச்சி >>


முன்புறம்,         1 ,    2,    3,    4,    5,    6,    7,    8,    9,    10,    11,    12