ஜோதிடம் பாடம் -4 பக்கம் -11 (பதினொன்றாம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)

பதினொன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்


1ம் வீட்டில் இருந்தால்:

  • அதிகம் படித்தவராகவும், சாதுர்யமாகப் பேசும் திறனுடையவராகவும் செல்வத்துடனும், செல்வாக்கு இருப்பர்.
  • எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவர்
  • நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

2ம் வீட்டில்  இருந்தால்:

  •  நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் , கெளரவம்,  ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்

 3ம் வீட்டில்  இருந்தால்:

  •  மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் .மேலும் அவர்களின் ஆதரவு  பெற்று வாழ்வர்.


4ம் வீட்டில் இருந்தால்:

  • வீடு, வண்டி வாகனங்களுடனும் , நேர் வழியில் சென்று  சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பர் . . தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாக இருப்பர்


5ம் வீட்டில் இருந்தால்:

  • புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும், நல்ல வருமானத்துடன் வாழ்வர்.
  • தந்தையின் தொழிலையே  பிள்ளைகளும் செய்வார்கள் மேலும்  அரசாங்க ஆதரவு கிடைக்கும்

6ம் வீட்டில் இருந்தால்:

  • எதன் மூலம் லாபம் கிடைத்தாலும் கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்கும் நிலை ஏற்படும்.
  • செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பர் மேலும் அவர்களால் பல இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும் 


 7ம் வீட்டில் இருந்தால்:

  • கணவன் அல்லது மனைவி மூலம்  செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
  • திருமணம் பிறகு நல்ல வாழ்க்கை  அமையும் 
  • பதவிகள்  ,நல்ல யோகங்கள் , வண்டி வாகனமங்கள் சிறப்பாக  அமையும்.
8ம் வீட்டில் இருந்தால்:

  • சஞ்சலம் மனதுடன் இருப்பர்
  • பல தொழில்கள் செய்ய  முயன்று பல வழியில் பணம் செலவு செய்ய செல்வத்தை இழந்து கஷ்டத்துடனும்  சஞ்சலத்துடனும் வாழ்வர்

9ம் வீட்டில் இருந்தால்:

  • தந்தையின் தொழிலை மிக சிறப்பாக செய்து பலவிதமான பொருள்கள் மற்றும்  லாபங்களை அடைவர்
  • அரசாங்கத்தில் நல்ல பெயர்,  வண்டி வாகனங்கள் சிறப்பான வாழ்க்கை அமைய பெறுவர் 

10ம் வீட்டில் இருந்தால்:

  • கெளரவமான நல்ல வேலையுடன் , கைநிறைய சம்பாத்தியம்,தெய்வீக அருள்  ஆகியவை நிறைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர் 

11ம் வீட்டில் இருந்தால்:

  • மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பர் ஆனால் இவருக்கு  பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
  • வயதான காலத்தில் தனவந்தராக இருப்பர்

12ம் வீட்டில் இருந்தால்:

  •  செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும் மேலும்  பொருள் விரையம், கடன் தொல்லைகள் ,வியாதிகளுடன் இருப்பர்
  •  போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும் இருந்தாலும் மன அமைதி இல்லாமல் இருப்பர் 


இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.


முன்புறம் 1,  2,  3,  4 , 5 ,  6 7 8,  9,  10, 11,  12