ஜோதிடம் பாடம் -4 பக்கம் -6 (ஆறாம் வீட்டு அதிபதி12 வீடுகளில்இருந்தால் பலன்கள்)

ஆறாம் வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள்

1 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  சதா வியாதிகளும் நோய் நொடிகளுடன்   தைரியமில்லாதவராகவும் இருப்பர் . 
  • தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்த குடும்ப வாழ்கை வாழ்வர் 
  • எதிரிகளால் பண இழப்புக்கள் ஏற்படும்.

2 ஆம் வீட்டில் இருந்தால்:

  • இது நல்ல அமைப்பு அல்ல. பார்வைக்கோளாறுகள்,பற்சிதைவுகள் , கண் கோளாறுமற்றும் பல நோயினால் அவதிப்படுவர்
  •  வாக்குவன்மை இருக்காது( நல்ல பேச்சு இருக்காது.) 
  • அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வர்

3 ஆம் வீட்டில் இருந்தால்

  • சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள்
  •  இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. 
  • காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். 
  • குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. 

4 ஆம் வீட்டில் இருந்தால்:

  • தாயாருடைய உடல் நலம்  பாதிப்பு , சண்டை மற்றும் முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை வாழ்வர் 
  •  மோசமான வீட்டில் அல்லது  மோசமான சூழலில் வீடு அமையும்(. குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது).

5 ஆம் வீட்டில் இருந்தால்:

  • புத்திரதோஷம் அல்லது நோயுற்ற புத்திராக்களை உடையவனாக இருப்பர் . 
  • தாயார் மூலம் மாமா வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.
  • கடன் தொல்லைகள், எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பர்.
  • சிலருக்கு சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவித்து  பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவர்

6 ஆம் வீட்டில் இருந்தால்:

  • தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை உடையவனாக இருப்பர் 
  • தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.
  • ஆறாம் அதிபதியுடன் லக்கின நாதனும் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் தீராத நோயொன்று ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். நெருங்கிய உறவுகளுடன் பகை ஏற்படும்.  கடன் தொல்லை படுத்தி எடுத்துவிடும். 
  • சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம் இருக்கும். 

 7 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  இல்லற வாழ்க்கை கசக்கும். திருமண வாழ்க்கை விவாகரத்துவரை கொண்டுவிடும். மனதில் அமைதி இல்லாத வாழ்க்கை வாழ்வர் 
  • சுப பலன் பெற்று இருந்தால் தாய்வழி மாமா  அல்லது தந்தை வழி திருமணம்   நடைப்பெறும் 

8 ஆம் வீட்டில் இருந்தால்:

  • குறைந்த  ஆயுள் உடையவனாக இருப்பர் (இதற்கு விதிவிலக்கும் உண்டு)
  •  தீய பார்வைகள் பெற்றிருந்தால் அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவராக  இருப்பர் 
  • மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் இன்பம் காண்பவராக இருப்பர் 
  • குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி சூழ்நிலை அமையும் 

9 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  தந்தை வழி சொத்து நாசமாகும் மற்றும் பெரியவர்களுடன் சண்டை  சச்சரவுகள்  ஏற்படும். பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள்.
  • வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
  • நல்ல கிரகத்தின் பார்வை பெற்று இருந்தால்  தந்தை நீதித்துறை யில் பணியாற்றுபவராக இருப்பர் மேலும் தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில் இருப்பர்.

10 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  தீய பார்வைகள் பெற்றிருந்தால்,மற்றவர்களைப் பயப்படுத்தக்கூடிய விரோதிகளைப் பெற்றிருப்பர்.
  •  திருட்டு தனமாக சம்பாதித்து  ஊர் சுற்றி திரிவார் . 
  •  சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி பெறுவர் 
  • பாவச் செயல்கள், தீய செயல்களைச் கொண்ட தொழிகளை செய்ய நேரிடும் 
  •  சிலர் போலிச் சாமியார்களாக இருப்பர்.
  • கீழ்த்தரமான வேலைகளைச் செய்து  கீழான வாழ்க்கை வாழ நேரிடும். மக்கள் மனதில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பர் 

 11 ஆம் வீட்டில் இருந்தால்:

  •  மூத்த சகோதர்கள் வியாதியுடன் கடனும்  இருப்பர் ஆனால் சுப பார்வை ஓர் சேர்க்கை பெற்று இருந்தால்  மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார். அல்லது அதற்கு ஈடான புகழுடன் வாழ்வார்.
  • சிலபேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும். 
  •  தீய பார்வைகள் பெற்றிருந்தால் ஏழ்மை மற்றும் மோசமான சூழலில் வாழ நேரிடும். 
  • சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனை பெற வாய்ப்பு சிலருக்கு அமையும் 

12 ஆம் வீட்டில் இருந்தால்

  •  அனாவசியமான செலவு,  குறியில் நோய்ஏ என்று வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்.
  • வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். 
  • இவையாவையும் பொது பலனே. சுப, அசுப  கிரக பார்வையினால்  மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.
இவையாவையும் பொது பலனே. சுப, அசுப  கிரக பார்வையினால்  மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.



முன்புறம் 1,  2,  3,  4 , 5 ,  6 , 78910 , 1112