ஜோதிடம் பாடம் -4 பக்கம் -7 (ஏழாம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)

ஏழாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் 1ல் இருந்தால்:
  • நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
  • பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும் பெண்கள் அன்பு வைத்துவராகவும் இருப்பர்.
2ம் வீட்டில் இருந்தால்:
  • கணவன் அல்லது மனைவியின் மூலம் சொத்துக்கள், பண வரவு இருக்கும் .
  • 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.

3ம் வீட்டில் இருந்தால்:
  • களத்திரதோஷம் கணவன் அல்லது மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமப் பற்று இருக்காது.
  • இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.

4ம் வீட்டில் இருந்தால்:
  • மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்
  • எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவர் .

5ம் வீட்டில் இருந்தால்:
  • காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு.
  • நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.
  • பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் காதல் மணம் முடிப்பர் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.

6ம் வீட்டில் இருந்தால்:
  • 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடு ஆகும் எனவே அவ்வளவு நல்லதல்ல;
  • திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது.
  • 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது எனவே சிலர் தாய்மாமன் மகன் அல்லது மகளை மணப்பர்
  • கணவன் அல்லது மனைவி வியாதிகள் கொண்டவராக இருப்பர்
7ம் வீட்டில் இருந்தால்:

  • கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமையும்
  • சிலர் மனைவியின் வீட்டில் அடிமையாக இருப்பர் மேலும் அவரது மனைவியின் செல்வாக்கு அதிகமாக பெற்று இருப்பர்

8ம் வீட்டில் இருந்தால்:
  • மறைவு ஸ்தானம் எனவே பொதுவாக திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது
  • 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து அவர் 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும்

9 ம் வீட்டில் இருந்தால்:
  • தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையும் மேலும் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.
  • சிலருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் வரக்கூடும்

10ம் வீட்டில் இருந்தால்:
  • நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்
  • சிலர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர்.

11ம் வீட்டில் இருந்தால்:
  • நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும் , நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும்
  • சிலருக்கு அவர்களின் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமைய பெறுவர்

12ம் வீட்டில் அமர்ந்தால்:
  • மறைவு ஸ்தானம் எனவே பொதுவாக வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது
  • 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும்.
  • 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.
இவையாவையும் பொது பலனே. சுப,அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.

 தொடர்ச்சி >>
முன்புறம் ,   1,   2,   3,  4 , 5 ,  6 7 ,   8,   9,   10 , 11,   12