ஜோதிடம் பாடம் -4 பக்கம் -4 (நான்கா வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)



நான்காம்வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் : 1 ஆம் வீட்டில் இருந்தால்:
  • மிகுந்த படித்தவராக இருப்பர்.
  • சுப பலன் பெற்று இருந்தால் உயர்ந்த அந்தஸ்துடன் கூடிய பதிவி அமைய பெற்று இருப்பர

2 ஆம் வீட்டில் இருந்தால்:
  • தாய் வழிச்சொத்து, ஆதரவையும் ஆகியவை அமைய பெற்று இருப்பர்
  • தாய் வழிச்சொத்து இவருக்குக் கிடைக்கும்.
  • கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பர்.

3 ஆம் வீட்டில் இருந்தால்:
  • இந்த வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல;
  • தாயார் நோயுடையன் இருப்பர்
  • வருமானத்தைவிட செலவு அதிகரித்து குடும்பத்தில் கஷ்டங்களும் நஷ்டங்களும் வாழ்க்கை நடத்துபவர்

4 ஆம் வீட்டில் இருந்தால்:
  • தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பர்.
  • குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பர்.
  • நிலபுலங்கள் வீடு வாசல் மாடு கன்றுகள் பால்பாக்கியம் கல்வியில் திறமை கீர்த்தி வண்டி வாகனங்கள் முதலியவற்றுடன் பெண்களின் சொத்து சுகங்களைப் பெற்று இருப்பர்

5 ஆம் வீட்டில் இருந்தால்:
  • தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பர்.
  • நல்ல புத்திரங்களை உடையவனகாவும் வண்டி வாகனங்கள் பெற்று , சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடும்
  • மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பர்.

6 ஆம் வீட்டில் இருந்தால்:
  • முன்கோபியாகவும் . நல்ல எண்ணங்கள் இல்லாதவராக இருப்பர் .
  • இந்த வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல;
  • சுக சௌகர்யங்களை இழந்தது ,தாயிடமும் தாயார் வழிகளிலும் விரோதங்களை பெற்று , பூர்வீக சொத்துக்களை இழந்து வாழ்க்கை வாழ்வாராக இருப்பர்

7 ஆம் வீட்டில் இருந்தால்:

  • வீடு, வாசலுடன் வெளியூரிலலோ அல்லது உள்ளுரிலோ சம்பாத்தியம் செய்வராக இருப்பர்
  • மேலும் சிலருக்கு (சுப பலன் பெற்று இருந்தால்) தாயார், மாமன் வழியில் மனைவி / கணவன் அமைவராக இருப்பர்


8 ஆம் வீட்டில் இருந்தால்:

  • தாயார் ஏழை வீட்டில் பிறந்தவராக, தாய்வழி ஆதரவு குறைந்து இருக்கும் வறுமையும் அவமானங்களும் நிறைந்து வாழ்க்கை அமையும் (இது துஸ்தானம் (அ ) மறைவிடமும் ஆகும். )
  • செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

9 ஆம் வீட்டில் இருந்தால்:

  • நிலபுலங்கள் வீடு வாகனங்கள் நிறைந்து தகனப்பாரின் அன்பை பெற்றவராக இருப்பர்

10 ஆம் வீட்டில் இருந்தால்:

  • சிலர் அரசியலில் புகழ் பெற்று அனைவராலும் மதிக்கும் வண்ணம் வாழ்க்கை வாழ்வராக இருப்பர்
  • பூமி சம்பந்தமான பொருள்களால் லாபத்தை பெற்று இருப்பர்
  • பெரியஅந்தஸ்து உள்ளவர்களிடம் தொடர்புமற்றும் செல்வம், செல்வாக்கு, கீர்த்தி பெற்று இருப்பர்

11 ஆம் வீட்டில் இருந்தால்:

  • ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம். தாயாரால் அனுகூலம், மற்றும் சுகங்கள் நிறைந்தவனாகவும் பூமி வியாபாரங்கள் மூலம் நல்ல லாபங்களுடன் சிறந்த வாழ்க்கையினை பெற்று இருப்பர்.
  • சிலர்க்கு தாயாரின் உடலில் நோய் பாதிப்பு ஏற்படும்

12 ஆம் வீட்டில் இருந்தால்:

  • சுகங்கள் அற்றவனாகவும் சொந்தங்கள் ஆதரவு இல்லாமாலும் வறுமை மிகுந்து வாழ்ககை நடத்துவராக இருப்பர்
  • சொத்துக்களால் துன்பம். இளம் வயதிலேயே தாயார் மரணம் , மொத்தத்தில் சிரம வாழ்க்கை நடத்துவராக இருப்பர் .

இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.

தொடர்ச்சி >>

முன்புறம் ,  1,  2,  3,  4 , 5,  6 , 78910 , 1112