ஜோதிடம் பாடம் -4 பக்கம் -8 (எட்டாம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்கள்)



எட்டாம்வீட்டு அதிபதி ஒருவரின்  ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில்  இருந்தால் பலன்கள் 1ம் வீட்டில் இருந்தால்:

  • கடன் தொல்லையால் அவதிப் படுவர்.
  • துரதிஷ்டசாலியாகவும், . உடல் மிகவும் பலகீனமாகவும் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பர்


2ம் வீட்டில் இருந்தால்:

  • பலவிதமான தொந்தரவுகள் மற்றும் கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருக்கும்.
  • குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருக்கும்
  • வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பர்


3 ம் வீட்டில் இருந்தால்

  • காது சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கும்
  • இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் தைரியம் குறைந்ததும் இருப்பர்


4 ம் வீட்டில் இருந்தால்:

  • மனதின் நிம்மதி இல்லாமல் . பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளுடன் வாழ்ககை இருக்கும் . தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாயார் மற்றும் தாய் வழி சொந்தங்களின் ஆதரவு இருக்காது
  • மேலும் பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தால் சொத்துக்களினாலும் தொந்தரவு மற்றும் சொத்துக்கள் விற்க வேண்டிய நிலை ஆகியவை அமைய பெறுவர்
  • தொழிலில் தொந்தரவுகள் இருக்கும்


5 ம் வீட்டில் இருந்தால்:

  • புத்திரர்களால் தொல்லைகளும் மன அமைதி ஏற்படும்
  • மேலும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மன நோய்கள் வர வாய்ப்பு உள்ளது . சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.


6 ம் வீட்டில் இருந்தால்:

  • இது நல்ல இடம் இல்லை . அந்த திசை புத்திக்காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து . கெளரவமும் பாதிக்கும் சூழ்நிலை அமையும்
  • சிலர் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பர் .


7 ம் வீட்டில் இருந்தால்:

  • சிலருக்கு ஆயுள் பாவம் பாதிக்கப் படும்.
  • கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு அல்லது கணவன் - மனைவி உறவு பாதிப்பு போன்ற பிரச்சைகள் வர வாய்ப்பு உள்ளது


8 ம் வீட்டில் இருந்தால்:

  • தீர்க்கமான ஆயுள் உடையவர் என்று சொல்லாம்
  • இந்த தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும் அல்லது தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து கொண்ட இருக்கும்
  • சிலருக்கு விரும்பத்தகாத நிகழ்வுகளால் அவமானமும் அலைச்சலும் அடைவர்


9 ம் வீட்டில் இருந்தால்:

  • தந்தை அனுகூலமாக எருக்கமாட்டார் மேலும் தந்தை சொத்துக்கள் நாசமாகும்


10 ம் வீட்டில் இருந்தால்:

  • தொழிலில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது சிலர் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பர்


11 ம் வீட்டில் இருந்தால்:

  • மூத்த சகோதரத்துவம் நன்றாக இருக்காது


12 ம் வீட்டில் இருந்தால் :

  • ஊர் சுற்றும் குணத்துடன் இருப்பர்
  • சிலருக்கு வம்பு வழக்குகள் ஏற்படும் . கையில் உள்ள பணத்தை இழக்க நேரிடும்

இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.

தொடர்ச்சி >>

முன்புறம்  1,  2,  3,  4 , 5 ,  6 7 8910 , 1112