Showing posts with label சகோதர ஸ்தானம். Show all posts
Showing posts with label சகோதர ஸ்தானம். Show all posts

ஜோதிடம் பாடம் - 3


இனி எப்படி ஜாதகத்தை வைத்து பலன் சொல்வது என்பதை இனி வரும் படங்களில் பார்ப்போம் .
இலக்கினம் தான் (ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான்)முதல் வீடு எனப் படும். உதாரணத்திற்கு ஜாதகத்தில் கும்பம் தான் லக்கினம் என்றால் அதுதான் முதல் வீடு ஆகும் .. அடுத்த வீடு மீனம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் மகரம் தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு.அதைப்பற்றி இப்போது பார்ப்போம் .

முதல் வீடு (First House) (லக்கினம்):

    1. உடல்வாகு - நிறம், உருவம், உயரம், உடல் தோற்றம் ( color, figure, height, physical appearance)
    2. குணாதிசயங்கள் (Characteristics)
    3. குழந்தைப் பருவம் (Childhood)
    4. உடல்நலம் (உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடுதான்) (Heath)
    5. சுற்றுச்சூழல் (ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும்)

    6. மன வலிமை,வெற்றி, புகழ் & அவதூறு, ஆளுமை (Mental strength, Success, Slander, Personality)

முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.


இரண்டாவது வீடு (Second House):

    1. இது (Family) குடும்பத்தைக் குறிக்கிறது.
    2. பொருளாதாரம் (Economy)( பணவரவு, செலவு போன்றவை ,அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் , வங்கியில் உள்ள பண நிலைமை போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.) இதை தனஸ்தானம் என்பர் .

    3. இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
      ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும்.

மூன்றாம் வீடு :
    1. சகோதர ஸ்தானம் (இளைய உடன்பிறப்புகள்)(Younger siblings)
    2. தைரியம்(Courage)(எதிரியை வெற்றி கொள்ளும் திறமை)
      இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

    3. அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்து பலன் கூறலாம்.

    4. உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது.
நான்காம் வீடு(Fourth House) :
    1. இது தாயார் ஸ்தானம் (Mother)என்பர் .
    2. அசையா சொத்து மற்றும் வாகனம் (Immovable property and vehicle) (ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் )

    3. உயர் கல்வி (Higher Education)
    4. சிலர் பெண்களின் கற்பு (Chastity)மற்றும் தாயின் ஒழுக்கம் பற்றியும் குறிக்கும் என்பர்

முன்புறம்,     1,       2 ,      3