இனி எப்படி ஜாதகத்தை வைத்து பலன் சொல்வது என்பதை இனி வரும் படங்களில் பார்ப்போம் .
இலக்கினம் தான் (ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான்)முதல் வீடு எனப் படும். உதாரணத்திற்கு ஜாதகத்தில் கும்பம் தான் லக்கினம் என்றால் அதுதான் முதல் வீடு ஆகும் .. அடுத்த வீடு மீனம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் மகரம் தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு.அதைப்பற்றி இப்போது பார்ப்போம் .
முதல் வீடு (First House) (லக்கினம்):
-
- உடல்வாகு - நிறம், உருவம், உயரம், உடல் தோற்றம் ( color, figure, height, physical appearance)
- குணாதிசயங்கள் (Characteristics)
- குழந்தைப் பருவம் (Childhood)
- உடல்நலம் (உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடுதான்) (Heath)
-
சுற்றுச்சூழல் (ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும்)
- மன வலிமை,வெற்றி, புகழ் & அவதூறு, ஆளுமை (Mental strength, Success, Slander, Personality)
முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு (Second House):