சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தையும் , 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த பாடத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்
லக்கினம்
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .
1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:
-
- லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்
- ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
- நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
- சொத்துக்*கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ
- நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
-
- 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் ,சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
- நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
- சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
- தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
- மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்